புலி பசித்தாலும் பிள்ளையைத் தின்னாது!புலி பசிச்சாலும் புல்லைத் திங்காதுன்னு சொன்னா, அப்ப டிஸ்கவரி சேனல்ல புல்லு, பழம், காய், இலைகளை எல்லாம் சாப்டுற மாதிரி காட்டுறது எல்லாம் சும்மா பொய்யா என்னங்கற கேள்வி வரும். அப்படி கிடையாது.
பொதுவா, நாய், பூனை, பன்றி போன்ற ஒருசில விலங்குகள் தன் குட்டிகளை ஈன்றவுடன் பிரசவ வலி மற்றும் அப்பொழுது ஏற்படும் அகோர பசியின் காரணமாக அவை ஈன்ற சில குட்டிகளை தானே தின்றுவிடும்.
ஆனால் புலி இப்படி தன் குட்டிகளை தானே உண்பது இல்லை. அவைகளை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் தன் பார்வையில் மிகுந்த கவனத்தோடு பராமரிக்கிறது. இதையேதான்.
‘புலி பசித்தாலும் பிள்ளையை தின்பது இல்லை’ என்பது, ‘புலி பசித்தாலும் புல்லை தின்னாது’ என்று மருகிப்போனது.