சீன பொருட்களின் விலை குறைவாக இருக்கும் நிலையில், அதன் பாதிப்பு மற்றும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சீன பொருட்களினால் ஏற்படும் பாதிப்பு குறித்த ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர்.
விலை குறைவு மற்றும் எளிதாக அனைத்திடத்திலும் கிடைப்பதன் காரணமாக சர்வதேச அளவில், கடந்த 15 ஆண்டுகளில் சீன பொருட்களின் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது.
விலை குறைவு காரணமாக, சீன பொருட்களை அதிகளவில் விரும்பி உபயோகிக்கப்படுகிறது இந்த பொருட்களின் உற்பத்தி காலத்தில், அதிகளவில் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) வெளியிடப்படுகிறது. இதன் காரணமாக, சீனா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் சுற்றுப்புற சூழ்நிலை கடுமையாக பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் காற்று மாசுபாடு என்று அங்கிருந்து அடிக்கடி வரும் செய்திகளுக்கு, சீன பொருட்களின் உற்பத்தி ஆலைகளே முக்கிய காரணம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.