ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பங்கு சந்தை எப்படி செயல் படுகிறது? குட்டி கதை

ஒரு பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்… வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏராளம் பாம்புகள் தேவைபடுகிறது. நீங்கள் ஒரு பாம்பை பிடித்து தந்தால், 10 ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாய் வீதம் வாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

அதனால் மக்களுக்கு அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது. உடனே அந்த பணக்காரர், இனி
பாம்பை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 ரூபாய் தருவதாக சொன்னார். அவர்கள் மீண்டும் உற்சாகமாகி தேடி தேடிபாம்பை பிடித்து கொடுத்தார்கள் .ஊரில் ஒன்று கூட மிச்சம்வைக்காமல்
எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை மிக மிக மிக குறைய ஆரம்பித்து பாம்பை பார்ப்பதே அரிதாகி விட்டதால் அதில் இருந்த ஆர்வம் குறைந்துபோய்விட்டது.
அந்த பணக்காரர் விடவில்லை. இப்போது 50
ரூபாய் தருவதாக அறிவித்தார். உடனே ஊரில் உள்ள மக்கள் அருகில் இருந்த காடு மலை சென்று ஒன்று விடாமல் பிடித்துகொடுத்தார்கள். இப்போது பாம்பே இல்லாத நிலையாகிவிட்டது.
அவர் இப்போதும் விடவில்லை.எனக்கு இன்னும் அதிகபாம்புகள் தேவை. மேலும்பாம்பு கிடைப்பது அரிதாகிவிட்டதால் 200 ரூபாய் தருவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் தான் அவசரமாக இன்னொரு தொழில் விஷயமாகமற்றொரு ஊர் செல்ல வேண்டுமென்பதால் ஒரு வாரத்தில்
வந்து வாங்கி கொள்கிறேன். அதனால் உங்களால் முடிந்த அளவு பிடித்து கொண்டுவாருங்கள் என்று சொல்லி, நான் வரும்வரைக்கும் என் உதவியாளர் இங்கு இருப்பார் என்று சொல்லி சென்று விட்டார்.
அடுத்த நாள் அந்த உதவியாளர் ஊர் மக்களை கூப்பிட்டு…”மக்களே இங்கே பாருங்கள் நீங்கள் பிடித்து தந்த அனைத்து பாம்புகளும் இந்த கூண்டில் உள்ளது. நிச்சயமாக சொல்லுகிறேன் இந்த ஊரிலும் அதற்கு அருகில் எங்கேயும் பாம்புகளே இல்லை. அதனால் நான் ஒரு ஐடியா வைத்து இருக்கிறேன்.
இந்த பாம்புக்களை எல்லாம் நான் உங்களுக்கு 100 ரூபாய்க்கு விற்கிறேன். அதன்பின் முதலாளி வருவதற்கு முதல் நாள் நான் அவசர அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது என்று அவருக்கு போன் மூலம் சொல்லி சென்று விடுகிறேன். அவர் வந்ததும், இதே பாம்பை நீங்கள்
அவரிடம் 200 ரூபாய்க்கு விற்றுவிடுங்கள்” என்று சொன்னார்.
உடனே மக்கள் தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தையும் இருந்த நகைகளையும் விற்று அந்தபணத்தில் பாம்பை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிகுவித்தார்கள். எல்லாப் பாம்பையும் விற்ற அந்த உதவியாளர் முதலாளி நாளைவருகிறார் அதனால் நான் இன்று போய் விடுகிறேன் என்று சொல்லி கிளம்பி சென்று விட்டார். அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த ஊர் மக்கள் அந்த முதலாளியையும் பார்க்கவில்லை.. அந்த உதவியாளனையும் பார்க்கவில்லை….!
இப்போது அவர்களிடம் இருப்பது அந்த பாம்புகள் மட்டும்தான்….!

சீனப்பட்டாசை தடுக்கவேண்டியது யார்?

அடுத்த மாதம் 10-ந் தேதி தீப ஒளித்திருநாளாம் தீபாவளி வருகிறது. எவ்வளவு போனஸ் வரும்?, அதற்கு என்னென்ன செலவுகள் இருக்கும்? என்று மனதில் உள்ள கால்குலேட்டர்களை வைத்து கணக்கிடும் வேலைகள் இப்போதே குடும்ப தலைவர்களுக்கு தொடங்கிவிட்டது. இல்லத்தரசிகளுக்கோ இந்த ஆண்டு தீபாவளிக்கு என்னென்ன பலகாரங்கள் செய்யலாம்? என்பது தொடங்கி துணிமணிகள் உள்பட பல யோசனைகள் நிழலாடும். ஆனால், எது இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பட்டாசு என்றால் தனி மகிழ்ச்சிதான். பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை. தீபாவளி நெருங்கும் இந்த வேளையில், சென்னை முதன்மை சுங்க ஆணையர் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரம், ஒரு அபாய எச்சரிக்கையை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. “வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பட்டாசுகள் தொடர்பாக ஓர் எச்சரிக்கை” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த விளம்பரத்தில், “இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், பட்டாசுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி கிடையாது. ஏனென்றால், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் பொட்டாசியம் குளோரைடு என்னும் வேதிப்பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த வேதிப்பொருள் எளிதில் தீப்பிடிக்கக்கூடியது மட்டுமன்றி, திடீரென்று வெடிக்கக்கூடியதாகும். மேலும், இவ்வகைப் பட்டாசுகள் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவதோடு, சுகாதாரக்கேடுகளையும் விளைவிக்கும். பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு நலன் கருதி, மேற்கூறிய வெளிநாட்டு பட்டாசுகளை யாராவது கையிருப்பில் வைத்திருந்தாலோ, அல்லது விற்பனை செய்தாலோ, அதன் விவரங்களை உடனே தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டு இருந்தது. சீனாவில் இருந்துதான் சட்டவிரோதமாக இந்த பட்டாசு இறக்குமதி செய்யப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை சொல்வதற்கு ஏன் தயக்கம்? சீனாவில் உற்பத்தி செய்து கள்ளத்தனமாக கொண்டுவரப்படும் பட்டாசுகள் பொட்டாசியம் குளோரைடு கொண்டும், தமிழ்நாட்டில் சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசு அலுமினியம் நைட்ரேட்டாலும் உற்பத்தி செய்யப்படுகிறது. பொட்டாசியம் குளோரைடால் தயாரிக்கப்படும் பட்டாசுகள் அதிக குளிர் பிரதேசத்துக்குத்தான் பொருத்தமானது. இந்தியா போன்ற வெப்பமான பிரதேசங்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. திடீர் விபத்துக்களை உருவாக்கி ஆனந்த தீபாவளியை கண்ணீர் தீபாவளியாக்கிவிடும். பொட்டாசியம் குளோரைடைவிட, அலுமினியம் நைட்ரேட் விலை இருமடங்குக்கு மேல் அதிகம், அதுமட்டுமல்லாமல், அலுமினியம் நைட்ரேட் பயன்படுத்தப்படும் அளவில் 10-ல் ஒரு பங்கு பொட்டாசியம் குளோரைடை பயன்படுத்தினால் போதும். இதுபோல பல காரணங்களால்தான் ஆபத்து மிகுந்த சீன பட்டாசின் விலை மிகக்குறைவாக இருக்கிறது. ஆனால் குறைந்த விலை என்பதால் ஆபத்தை விலை கொடுத்து வாங்கமுடியுமா? சீனபட்டாசு இறக்குமதி செய்ய அனுமதி இல்லை. அப்படியும் இந்தியாவுக்குள் நுழைகிறது, தாராளமாக கிடைக்கிறது என்றால் அதைத்தடுக்கவேண்டிய அதிகாரிகள் ஏன் செய்யவில்லை? என்று மத்திய-மாநில அரசுகள் கேட்கவேண்டும். இந்த பட்டாசுகள் சீனாவில் இருந்து திருட்டுத்தனமாகத்தான் கொண்டுவரப்படுகின்றன, மும்பையில் இருந்தும், தூத்துக்குடி துறைமுகம் மூலமாகவும் கண்டெய்னர்களில் கொண்டுவரப்படுகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக சட்டசபையில் அமைச்சரே சொல்லியிருக்கிறார். எனவே, சுங்கத்துறை பொதுமக்களுக்கு சொல்வதுபோல, எப்படி வந்தது? என்று அந்த துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவேண்டும். மேலும், சீன பட்டாசை விற்பனை செய்யமுடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டால் சரக்குகள் தேங்கிப்போய்விடும், இனி வியாபாரிகள் யாரும் வாங்கவும்மாட்டார்கள். அதை தீவிரமாக செய்யவேண்டும்.

சாண வறட்டிக்கு, வெளிநாடுகளில் அமோக வரவேற்பு கிடைத்துஉள்ளது. ‘ஆன்லைன்’ விற்பனையிலும் கொடி கட்டிப் பறக்கிறது.

நம் கிராமங்களில் பயன்பாட்டில் இருந்து, மறைந்து போன சாண வறட்டிக்கு, வெளிநாடுகளில் அமோக வரவேற்பு கிடைத்துஉள்ளது. ‘ஆன்லைன்’ விற்பனையிலும் கொடி கட்டிப் பறக்கிறது.
இந்தியாவில், அடுப்பு எரிக்க விறகுக்கு அடுத்தபடியாக, மாட்டுச் சாணத்தில் தயாரான வறட்டிகள், அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. வீட்டில் மாடு வளர்க்காதவர்கள், அவற்றை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர்.ஆனால், காஸ் சிலிண்டர் அறிமுகமான பிறகு, வறட்டியின் பயன்பாடு, படிப்படியாக குறைந்து, இப்போது மறைந்தே போய் விட்டது. யாகங்கள், ஹோமங்களுக்கு மட்டுமே இப்போது வறட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.அதேபோல், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இப்போது, வறட்டி பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஆன்லைன் மூலம் வறட்டி வாங்கி உபயோகிக்கின்றனர்.
வெளிநாடுகளில் வசித்தாலும், மரபுகளை பின்பற்றிவரும் பலர், பூஜை, ஹோமம் போன்றவற்றை நடத்துகின்றனர். அவர்களின் தேவையை உணர்ந்த, ஆன்லைன் வர்த்தக இணைய தளங்கள் சில, வறட்டிகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளன.இதை பார்த்த நமது ஊர் மக்களும், ஆன்லைனில் வறட்டிகளை ஆர்டர் செய்யத் துவங்கியுள்ளனர். நான்கு வறட்டிகள், 40 ரூபாய்க்கு விற்கப்டுகின்றன. இதை 

 , ஏராளமானோர் விரும்பி வாங்குகின்றனர்.
அமெரிக்காவில் இருந்து இயங்கும், ‘அமேசான்.காம்’ வர்த்தக இணைய தளம், இதை வெளிநாட்டில் சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.இதைப் பார்த்து, இந்திய இணைய தளங்களும், வறட்டி விற்பனையில் களம் இறங்கியுள்ளது. cowdungcake sale என்று, டைப் செய்து, இணையத்தில் தேடினால், விற்பனை செய்யும் இணைய தளங்களை கண்டறிந்து, வறட்டிகளை வாங்கலாம்.

மருந்து வணிகர்கள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இருந்தாலும் பொதுமக்கள் கேட்டால் கடைகளை திறந்து மருந்துகள் வழங்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மருந்து வணிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்

மருந்து வணிகர்கள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இருந்தாலும் பொதுமக்கள் கேட்டால் கடைகளை திறந்து மருந்துகள் வழங்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மருந்து வணிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆன்-லைன் மருந்து விற்பனை ஆன்-லைன் மருந்து விற்பனையை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் இன்று (புதன்கிழமை) நாடு தழுவிய அளவில் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து கடைகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. தமிழகத்தில் 40 ஆயிரம் மருந்து கடைகளும், சென்னையில் 5 ஆயிரம் மருந்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்து கடைகள் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியமான மருந்துகள் கிடைக்காமல் போய்விட கூடும் என்பதால், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அப்துல்காதர் ஆகியோர் மருந்து வணிகர்கள் சங்கத்தினரை அழைத்து நேற்று தலைமைச்செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.நடராஜன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடைகள் அடைப்பு போராட்டம் ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய கூடாது என்ற எங்களின் கோரிக்கையை தமிழக அரசும் ஆமோதிக்கிறது. எங்களின் உணர்வுகளை அரசு மதிப்பதால், அச்சுறுத்தலோ, மிரட்டலோ எதுவும் இல்லை. கடைகளை திறக்கவும் அறிவுறுத்தப்படவில்லை. ஆன்-லைன் வர்த்தகம், ஊக்கமருந்து, கருத்தடை மருந்து, அறுவை சிகிச்சையின் போது வலி தெரியாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை தவறான முறையில் பயன்படுத்த வழி வகை செய்து கலாசார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. ஒவ்வாமை ஏற்பட்டால் ஆன்-லைனில் வாங்கிய மருந்துகளை மாற்றவோ, திரும்ப அளிக்கவோ முடியாது. எனவே எங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் தமிழகத்தில் ரூ.60 கோடி மதிப்பிலான வியாபாரம் பாதிக்கப்படும். கடைகளை திறந்து மருந்து தர தயார் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய மருந்துகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு கடைகளை திறந்து மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே மருத்துவமனையில் இருக்கும் மருந்து கடைகளை மூட வேண்டாம் என்று சங்க நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். அந்தவகையில் சென்னையில் மட்டும் 200 கடைகள் திறந்து இருக்கும். அத்துடன் மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில், மருந்து வணிகர்கள் சங்கத்தின் 60 உறுப்பினர்களின் செல்போன் எண்களை கொடுத்துள்ளோம். யாருக்கு மருந்து தேவைப்படுகிறதோ அவர்கள் உடனடியாக மருந்து கட்டுப்பாட்டு அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டால், உடனடியாக கடைகளை திறந்து மருந்துகளை வழங்கவும் தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.உடன் சங்க தலைவர் மோகன் குமார், தமிழ்நாடு சங்க நிர்வாக செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

அருமையான கதை நணபர்களே;-காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் !!

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, “அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.” என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, “எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ” என்று கேட்டார்.

சீடன் சொன்னான், “குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.”

புன்முறுவலோடு ஞானி சொன்னார், “இது தான் காதல்…!”.

பின்னர் ஞானி, “சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.”

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், “இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? ”

சீடன் சொன்னான், “இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும.் பறிக்கவில்லை”.

இப்போது ஞானி சொன்னார், “இது தான் திருமணம்…💕!”

View on Path

இன்றைய நாள் நகைச்சுவையுடன் தொடங்கட்டும்..

தங்களுக்கு

ராஜேஷின் காலை வணக்கத்துடன்,

இன்றைய நாள் நகைச்சுவையுடன் தொடங்கட்டும்..
No : 1

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No: 2

உன் பேரு என்ன..?

” சௌமியா ”

உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 3 ( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா ” கோவா ”

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 4

( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா…?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க…!?? பொண்டாட்டி தான் அனுப்புனா…

* * * * * * * * * * * * * * * * * ** * * * * *

No : 6

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை…உங்களுக்கு..

* * * * * * * * * * * * * * * * * *

No : 7 ( கல்யாண மண்டபம்.. )

“வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? ”

” ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!”

* * * * * * * * * * * * * * * * * *

No: 8

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?

அவர் : தெரியுது…

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

* * * * * * * * * * * * * *

படித்ததில் பிடித்தது…

இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது….மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்…
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது….தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது….நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்….??
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்…ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்…..
உண்மையாக நாம் என்ன செய்வோம்…?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்…..உண்மை தான் என்றோம்
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது…
ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது….
இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாட்டின் அரசியலும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்…

நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்…!

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.
உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.
என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமுவும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.
ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ராமுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.
ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.
ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ராமு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.
ராமுவும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ராமு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.
ராமு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ராமுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.
முதலாளி ராமுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ராமு தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். ராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.
சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ராமு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.
நாம் சொல்லும் சொல் | நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்…!
வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் உண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண்போகாது | நேர்மையை விதையுங்கள் | பதவியும் பணமும் தேடிவரும்.

முயல், ஆமை கதையின் “லேட்டஸ்ட் வெர்ஷன்” :-

முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.
‪#‎நீதி‬ : தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

வெயிட்… இனிதான் கதையே ஆரம்பம்!
தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடென்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்!’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

‪#‎நீதி2‬ : நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!
கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்… அதுதான் இல்லை!

காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு டிவிஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).
ஒன்… டூ… த்ரீ…

முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!
அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

‪#‎நீதி3‬ : நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்
.
இன்னும் கதை முடியவில்லை நண்பர்களே!
ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது… ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!
‪#‎நீதி4‬ : “டீம்-வொர்க்” வின்ஸ்!

டீம்-வொர்க்:-
‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.
அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை,

வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.
இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை.
நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!
வாழ்க்கையில்

முயலும் ஜெயிக்கும்,
ஆமையும் ஜெயிக்கும்.

‪#‎முயலாமை‬ மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் ‪#‎அனுபவம்‬.
முயலாமல் தோற்றால் ‪#‎அவமானம்‬.
வெற்றி நிலையல்ல,
தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான்,
வெற்றியும் தோல்வியும்!!!