‘ருத்ரமாதேவி’ அனுஷ்கா வாவ்..

ரஜினியின் யோகா சீக்ரெட்!

லவசமாக அன்லிமிடெட் நெட் பேக்கேஜ் கிடைப்பது மாதிரி சந்தோஷம், அனுஷ்காவை நேரில் சந்திப்பது! ஹயாத் ஹோட்டலில் ‘ருத்ரமாதேவி’யாக அவரை எதிர்பார்த்துப் போனால், ஃப்ரீ ஹேரில், ஃப்ரெஷ் ஸ்மைலிங்கில் தகதகக்கிறது பொண்ணு!‘‘ ‘பாகுபலி’யில் வீரத்தாய், ‘ருத்ரமாதேவி’யில் வீரமங்கைன்னு எனக்குக் கிடைக்கற கேரக்டர்கள் எல்லாம் எனக்கே பிரமிப்பா இருக்கு!’’ – ஃபுல் எனர்ஜியில் இருக்கும் அனுஷ்காவின் ததிங்கிணத்தோம் தமிழ் இன்னமும் ஈர்க்கிறது!

‘‘ ‘ருத்ரமாதேவி’க்காக வாள் சண்டை, குதிரையேற்றம், யானை ஃபைட்னு பண்ணினது எல்லாம் பெரிய சவால்தான். 3டில ஷூட் பண்றப்போ, ஷாட் எடுக்க கொஞ்சம் நேரம் ஆகத்தான் செய்யும். அடிக்கடி லென்ஸ் மாத்தினாதான், எஃபெக்ட்ஸ் கொண்டு வரமுடியும். கரெக்ட்டான லைன்ல நின்னு நடிக்கணும். கேமராமேன் அஜயன் வின்சென்ட் காரு, டைரக்டர் குணசேகர் காரு ரெண்டு பேரும் ஹாலிவுட் போய் கோர்ஸ் படிச்சிட்டு வந்து, ஸ்பெஷலா வேலை பார்த்தாங்க. முதன்முதலா 3டியில் என்னைப் பார்க்க எனக்கே எக்ஸைட்டடா இருக்கு!”

‘‘யார் அந்த ‘ருத்ரமாதேவி’?’’ ‘‘13ம் நூற்றாண்டில் 40 ஆண்டுகள் காகதீய பேரரசை ஆட்சி செய்த அரசிதான் ருத்ரமாதேவி. அவங்களோட வீர சாகசங்களைத்தாண்டி ஒரு வலி மிகுந்த வாழ்க்கை இதில் இருக்கு.  ருத்ரமாதேவி பத்தி தகவல்கள் சேகரிக்க இயக்குநர் குணசேகர் காரு கல்வெட்டுகள்ல இருந்து ஹிஸ்டாரிக்கல் மியூசியம் வரை நிறைய இடங்களுக்கு போய் ஹோம் வொர்க் பண்ணியிருக்கார்.

இருந்தாலும் அவங்க தோற்றம் பத்தி தெரிஞ்சுக்க எந்தவித ஆதாரங்களும் கிடைக்கலை. ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி காரு, காஸ்ட்யூமர் நீட்டாலுல்லா காரு எல்லாரும் சேர்ந்துதான் ‘ருத்ரமாதேவி எப்படி இருந்தாங்க’ன்னு அனுமானமா ஒரு வடிவத்தைக் கொண்டு வந்தாங்க. தோற்றம் மட்டும் போதாது… ருத்ரமாதேவி மகாராணி, வீரமான பெண்மணி. அதனால என் பங்குக்கு சாகச நடிப்பைத் தரவேண்டியது கடமையாகிடுச்சு!’’‘‘ஷூட்டிங்ல உங்களுக்கு அடிபட்டுச்சாமே..?’’

‘‘வாள் சண்டையின்போது லேசா காயம் பட்டுச்சு. ஆனா, இதெல்லாம் சகஜம்தானே. தமிழ், தெலுங்கு ரெண்டு மொழிகள்லயும் ஒரே டைம்ல ரிலீஸ் ஆகுறதால அடுத்தடுத்த லாங்குவேஜ்ல டயலாக்ஸ் பேசுறது மட்டும் கொஞ்சம் கஷ்டமா தெரிஞ்சது.  படத்தோட ஷூட்டிங் எல்லாம் மே மாசம், கொளுத்துற வெயில்ல நடந்தது. விலங்குகள் கூட அந்த சம்மர்ல ஃபைட் பண்ணினது மறக்க முடியாதது.

பீட்டர்  ஹெயின் மாஸ்டர் கைடன்ஸ்னால ரொம்ப பாதுகாப்பா சண்டைகள்ல நடிக்க முடிஞ்சது. எங்கூட  லட்சுமின்னு ஒரு யானை நடிச்சிருக்கு. சீன்ல அதோட நடிக்கும்போது கெமிஸ்ட்ரி  வொர்க் அவுட் ஆகணும்னு, ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்பே லட்சுமி கூட  நல்லா பழகினேன். மொத்த ஷூட்டிங் முடிஞ்ச பிறகு லட்சுமியைப் பிரியும்போது  வருத்தமா இருந்துச்சு. 13ம் நூற்றாண்டுல இருந்த அரண்மனை, கோட்டைகளை எல்லாம் மறு உருவாக்கம் பண்ணியிருந்தார் தோட்டாதரணி காரு. மொத்தம் 16 செட். இந்தப் படத்தை தமிழில் தயாரிக்கற   தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி காரு, ரீரெக்கார்டிங் அப்போ, இளையராஜா  காருகிட்ட என்னை அறிமுகப்படுத்தினார். ராஜா காருவோட தீவிர ரசிகை நான். அந்தத் தருணம் அவ்வளவு சந்தோஷம்!’’

“விதவிதமான நகைகள், புடவைகளுக்காகவே இந்த மாதிரி கேரக்டர்களை நீங்க செலக்ட் பண்றீங்க போல?”“அப்படியெல்லாம் இல்லை. எனக்கு நகைகள் பிடிக்கவே பிடிக்காது. போன சம்மர்ல அவ்வளவு நகைகளைப் போட்டுக்கிட்டு மகாராணி காஸ்ட்யூம்ஸோட நடிச்சது ரொம்பக் கஷ்டம். நம்ம கலாசாரம், வரலாற்றுப் படங்கள் பண்றப்போ, நேட்டிவிட்டிக்காக அந்த காஸ்ட்யூம்ஸை அணிய வேண்டியிருக்கு. ‘புலி’ படம் பார்த்தேன். அதுல தேவி மேம், ஹன்சிகா லுக் எல்லாம் சூப்பர்! அந்த லுக்ஸ் வேணும்னா, அந்த நகைகள், காஸ்ட்யூம்ஸ் அவசியம்தானே!’’

‘‘ ‘அருந்ததி’க்குப் பின்… ‘அருந்ததி’க்கு முன்.. அனுஷ்கா எப்படி?’’‘‘என்னோட மூணாவது படம் ‘அருந்ததி’. அதுக்கு முன்பு ‘கிளாமர் டால்’னு சொல்ற மாதிரி, கமர்ஷியல் படங்கள்தான் பண்ணிட்டிருந்தேன். அப்போ எனக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சி.ஜி. பத்தியெல்லாம் சுத்தமா தெரியாது. ஆனா, ‘அருந்ததி’க்கு அப்புறம் நிறைய கத்துக்கிட்டேன்.

பிரமிப்பான, பிரமாண்டமான படங்கள், கேரக்டர்கள் எனக்குக் கிடைக்குது. ஆனா, எனக்கு ‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’யை விட ‘அருந்ததி’யை ரொம்பப் பிடிக்கும். ‘அருந்ததி’யாலதான் இந்தப் படங்கள் எனக்குக் கிடைச்சது! ஸோ, ஆல்வேஸ் கிரெடிட்ஸ் கோஸ் டு ‘அருந்ததி’!’’
‘‘ ‘பாகுபலி – 2’ல உங்க போர்ஷன் அதிகம் இருக்கும்னு ராஜமௌலி சொல்லியிருக்கார்..?’’

‘‘இப்படியெல்லாம் கேட்டா ‘பார்ட் 2’ பத்தி சொல்லிடுவேன்னு நினைச்சிட்டீங்களா? ‘பாகுபலி’ ஒரு மெகா ஹிட்ங்கறது சொல்லி அடிச்ச வெற்றி. எனக்கு அதுல சிவகாமி கேரக்டர்தான் ரொம்பப் பிடிக்கும். ரம்யா கிருஷ்ணன் மேடம் மிரட்டியிருந்தாங்க. செகண்ட் பார்ட் பத்தி வாயைத் திறக்க க்கூடாதுனு ராஜமௌலி காரு ஆர்டர்!’’‘‘ ‘லிங்கா’வில் ரஜினி என்ன சொன்னார்?’’

‘‘அவரை நெனச்சாலே முகமெல்லாம் ஸ்மைல்தான். நான் 14 வருஷம் யோகா பண்றேன். ஆனா சினிமாவில் நடிக்க வந்த பிறகு, என்னால யோகாவை கடைப்பிடிக்க முடியல. ஆனா, அவர் காலையில எழுந்ததுல இருந்து, நைட் தூங்கப் போறது வரை கிடைச்ச டைம்ல எல்லாம் யோகாவோட வாழ்றார். ஸ்பிரிச்சுவல்ல எனக்கு இன்ட்ரஸ்ட் உண்டு.

ரஜினி சார், ஸ்பிரிச்சுவல்ல பெரிய எக்ஸ்பர்ட். அவரோட பங்க்சுவாலிட்டி, டெடிகேஷன், சிம்ப்ளிசிட்டினாலதான் அவர் இன்னமும் சூப்பர்ஸ்டாரா இருக்கார். இண்டஸ்ட்ரியில இருக்கற ஹீரோயின்ஸ் ஒவ்வொருத்தருமே அவரோட ஒரு படமாவது நடிக்கணும். அப்போதான் நிறைய விஷயங்கள் கத்துக்க முடியும்!’’

‘‘ ‘சிங்கம் 3’ல..?’’‘‘யா.. கமிட் ஆகியிருக்கேன். ஷூட்டிங் எப்போ தொடங்கும்னு ஆர்வமா இருக்கேன்!’’‘‘கல்யாணம் எப்போ?’’‘‘ ‘ருத்ரமாதேவி’ பத்தி இன்னும் கேள்விகள் கேட்பீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா, இந்தக் கேள்வி வந்தாலே, புரிஞ்சிடும், இன்டர்வியூவை முடிக்கப் போறீங்க போல! சென்னை, ஐதராபாத்னு எங்கே போனாலும் இதே கேள்விதான் கேக்குறாங்க. ‘பாகுபலி 2’ ஷூட்டிங் இன்னும் தொடங்கல. அதை கம்ப்ளீட் பண்ணின பிறகுதான் பர்சனல் லைஃப் பத்தி யோசிக்க எனக்கு டைம் கிடைக்கும்!’’

புலி பாய்ந்தது : தடைகளை உடைத்தெறிந்து புலி திரைப்படம் வெளியானது ரசிகர்கள் கொண்டாட்டம்.

Source: புலி பாய்ந்தது : தடைகளை உடைத்தெறிந்து புலி திரைப்படம் வெளியானது ரசிகர்கள் கொண்டாட்டம்.