ரூ.55 கோடி திருமணம் : யார் இந்த ரவி பிள்ளை?

அண்மையில் கேரளத்தில் ரூ. 55 கோடியில் ஒரு திருமணம் நடைபெற்றது. மகள் திருமணத்தை பிரமாண்டமாக மட்டும் நடத்தவில்லை. இதையொட்டி பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்துள்ளதாக ரவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

 

                               ravi.jpg

 

 

நாட்டில் பல திருமணங்கள் கோடி கணக்கில் செலவழித்து நடத்தப்பட்டாலும் அண்மையில் நடந்த திருமணங்களில் அனைவரையும் ஈர்த்தது, இந்த திருமணம்தான். சரி யார் இந்த ரவி பிள்ளை என்பவர் யார்? 

கேரளத்தில் கொல்லம் அருகேயுள்ள சாவாரா என்ற கிராமத்தில் சாதாரண விவசாயிக்கு மகனாக பிறந்த இவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் டிகிரி படித்தார். பின்னர் கொச்சியில் எம்.பி.ஏ படிப்பு.சேமிப்பில் அக்கறை கொண்ட கேரள மக்களை பார்த்து முதலில் சீட்டு தொழிலில்தான் ரவி பிள்ளை இறங்கினார். தொடர்ந்து கான்டிரக்ட் தொழில், கட்டுமானத் தொழிலில் கால் பதித்த ரவி பிள்ளை, திருவாங்கூர் பெர்டிலைசர், ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் மற்றும் கொச்சின் ரிஃபெரனைரிஸ் நிறுவங்களுக்காக சில பணிகளை மேற்கொண்டார்.

எனினும் தொழிலாளர் பிரச்னை காரணமாக இந்த தொழில்களை கைவிட்டு விட வேண்டிய நிலை.  பின்னர் 1978ஆம் ஆண்டு சவுதிக்கு சென்ற ரவி பிள்ளை, முதலில் சவுதியில் நாஸர் அல் ஹாஜ்ரி என்ற கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து தொழிலை தொடங்கினார். 150 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்தது. பின்னர்  ஆர்.பி என்று பெயர் மாற்றப்பட்டு, இன்று 70 ஆயிரம் ஊழியர்கள் பணி புரியும் ஆர்.பி குழுமமமாக வளர்ந்து நிற்கிறது. பஹ்ரைன்,கத்தார், அமீரகம் மற்றும் கிழக்காசிய நாடுகளில் 26க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இன்று வளைகுடா நாடுகளிலேயே, இவரது ஆர்.பி குழுமம்தான் முன்னணி கட்டுமான நிறுவனம் ஆகும்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ், உலகின் 988ஆவது பணக்காரராக இவரை தேர்வு செய்தது. இந்தியாவை பொறுத்தவரை 30வது பணக்காரர் ஆவார். வளைகுடா நாடுகளை பொறுத்தவரை மிகவும்  சக்தி வாய்ந்த 4வது இந்திய பிரமுகர் ஆவார். கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தற்போது 62 வயது நிரம்பிய ரவி பிள்ளை கீதா தம்பதியருக்கு கணேஷ், ஆர்த்தி என இரு குழந்தைகள். இதில் ஆர்த்தி- மருத்துவர் ஆதித்யா விஷ்ணு திருமணம்தான்  கொல்லத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் நடைபெற்றது.

                 

marr.jpg

 

இந்த திருமணத்திற்காக கொல்லம் ஆஷ்ரம் மைதானத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 3.50 லட்சம் சதுரடியில் பிரமாண்டமான செட் போடப்பட்டது. ‘பாகுபலி ‘பட புகழ் ஆர்ட் டரைக்டர் சாபு சிரில், மூன்று மாதங்களாக உழைத்து இந்த பிரமாண்ட செட்டினை வடிவமைத்தார். இதற்காக மும்பையில் முதலில் இந்த செட்கள் அனைத்தும் களிமண்ணால் வார்படமாக உருவாக்கப்பட்டது. பின் ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ‘மூலம் அவைகள் இணைக்கப்பட்டன. இதற்கே 40 நாட்கள் பிடித்துள்ளது.

திருமண செட் போடுவதற்கு மட்டுமே ரூ.23 கோடி செலவாகியுள்ளது. அதோடு 30 ஆயிரம் விருந்தினர்கள் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தலும் போடப்பட்டிருந்தது. மணமேடை மட்டும் விரிந்த தாமரை இதழ் போல அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சவுதி, அமீரகம், குவைத்,கத்தார் அரச குடும்பத்தினர் பலர் தனி விமானங்களில் திருமணத்தில் பங்கேற்க வந்திருந்தனர். மற்றும் ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகளும் திருமணத்தில் பங்கேற்றனர். ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் மம்முட்டி உள்ளிட்ட கேரள நட்சத்திரங்களும் திருமணத்தில் பங்கேற்றனர். நடிகைகள் மஞ்சு வாரியார், ஷோபனா ஆகியோரது நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. கர்நாடக இசை புகழ் காயத்ரியின் பக்தி இசை கச்சேரியும் நடைபெற்றது.

திருமணத்திற்காக பாதுகாப்புக்காக மட்டும் கேரள போலீசாருடன் இணைந்து தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருமண விருந்தில் உள்நாட்டு உணவுவகைகளுடன் வெளிநாட்டு உணவுகளும் இடம் பெற்றிருந்தன.இந்ததிருமணத்திற்காக மொத்தம் ரூ.55 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 

இது குறித்து ரவிபிள்ளை கூறுகையில், ”எனது மகள் திருமணத்தை பிரமாண்டமான நடத்தி காட்ட வேண்டுமென்பது மட்டும் எனக்கு நோக்கமில்லை. இந்த திருமணத்தையொட்டி பல்வேறு மக்கள் நலப்பணிகளையும் மேற்கொண்டுள்ளேன். முக்கியமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறக்கட்டைகள், பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ரு.10 கோடிக்கு மேல் நிதியுதவி அளித்துள்ளேன்” என்றார். 

 

RAJESH TODAY CINI NEWS

:wacko: ;) மம்மி  மீள்  உருவாக்கத்தில் டாம் க்ரூஸ், ஏ. ஆர். ரஹ்மான்.

 

image.jpg

 

பிரண்டன் ஃபேசர் மற்றும் ரேச்சல் வெய்ஸ் நடிப்பில் 1999ல் வெளியான மம்மி படம் ஆக்சன்  மற்றும் த்ரில்லர்படமாக உலகையே ஆட்டிப்படைத்தது. எகிப்து தேசத்தின் சவங்களை பதப்படுத்தி வைக்கும் இடத்தை ஆராய்ச்சிசெய்யப்போகும் குழுவால் உயிர்த்தெழும் மம்மியின் அட்டகாசமும் அதை எதிர்த்து போராடும் நாயகனின்வீரமுமே கதையின் அம்சமாகும்.

 

பிரண்டன் ஃபேசர்  நடிப்பிலே அந்த படம் மூன்று பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. மூன்று படங்களையும்இயக்கிய ஸ்டீபன் சோமர்ஸ் ஆவார். தற்போது, மம்ம்யின் மீள் உருவாக்கம் படத்தை எடுக்கும் பணியைதொடங்கி உள்ளார் அலெக்ஸ் குட்ஸ்மேன்   இந்த  படத்தில் , பிரண்டன் ஃபேசருக்கு  பதில் டாம் க்ரூஸ் ஐஹீரோவாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர். அதேபோல், அலெக்ஸ் குட்ஸ்மேன்   இயக்கத்தில் 2012ல் வெளியான “பீப்பல் லைக் அஸ்” படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துஇருந்தார். இசைப்புயலின் இசைக்கு தான் அடிமை என்று அலெக்ஸ் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். மம்மி ரீபூட்டில் , ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்ககூடும் என்றும் தகவல்கள் தெரிகிறது.

 

 

:P மென் இன் ப்ளாக் – 4 படத்தில், லேடி ஏஜெண்ட் ?

image.jpg

 

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் முத்திரை படமாக விளங்கும் மென் இன் ப்ளாக் திரைப்படத்திற்குஉலக ரசிகர்கள் ஏராளம். இதுவரி இத்திரைப்படத்தின் 3 பாகங்கள் வெளியாகி உள்ளன. நமது உலகில்நம்முடனே ஏலியன்ஸ் வாழ்வதாகவும், அதில் கெட்ட ஏலியன்ஸ்களை அழிக்க ரகசிய குழுவான மென் இன்ப்ளாக் டீம் செயல்படுவதாகவும் இத்திரைப்படத்தின் கதை அமைந்திருக்கும்.

 

படத்தின் தயாரிப்பாளரான லோரி மெக் டொனல்ட் அண்மையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டியின்போது, மென் இன் ப்ளாக் படத்தின் 4ம் பக்கத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும், ஆண்ஏஜண்டுகளின் சாகசத்தோடு இணைந்து பெண் ஏஜண்டையும் இந்த பாகத்தில் இணைத்து கதை உருவாக்கிவருவதாகவும், விரைவில் நாயகிக்கான ஆடிசன்கள் நடக்க போவதாகவும் அவர் கூறினார்.

 

மென் இன் ப்ளாக், உமன் இன் ப்ளாக் ஆக மாறுமோ!

 

 

B) விஜய் தான் சூப்பர் ஸ்டார்

image.jpg

 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் இப்போதும் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்.ஆனபோதும், அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய் – அஜித் ஆகிய இருவரில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார்நடிகர் என்கிற சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாகவே நிலவி வருகிறது. ஒருவர் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்என்றும், இன்னொருவர் அஜித் என்றும் அவ்வப்போது ஏதாவது ஒரு பரபரப்பு செய்தியை கொளுத்திப்போட்டுவருகின்றனர். அதோடு, மேற்படி இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் இணையதளங்களில் தங்களது அபிமானஹீரோக்களே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு மோதிக்கொண்டு வருவதும் தொடர்கதையாகிறது.

 

இந்த நிலையில், தற்போது விஜய்யுடன்  ‘தெறி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை போட்டு அதோடு விஜய் தான்சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

:confused0006:வெள்ள நிவாரண நிதி வசூலிக்கும் நடிகர் சங்கம்! சூர்யா, விஷால், தனுஷ் உதவி.

 

image.jpg

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி உள்ளது .குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,கடலூர்,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ள நிவாரண நிதி  கேட்டுதமிழக அரசு மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்திற்கு ரூ.940கோடி ஒதிக்கியுள்ளதுமத்திய அரசு. இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் நேரடியாக சென்று வெள்ளம்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.

 

இந்நிலையில், சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் சினிமா நடிகர்கள் இதுதொடர்பாக வாய் திறக்கவேஇல்லை என்று சமூக வலை தளங்களில் கடும் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் சூழலில், நேற்றுநடைபெற்ற ஆடியோ விழாவில் கூட ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், நடிகர்கள் யாரும் உதவமுன்வரவில்லை என்று குற்றம் சாட்டியுருந்தார்.

 

இந்த சூழலில், வெள்ள நிவாரணம் தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.முதற்கட்டமாக நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தின் சார்பில் ரூ.25 லட்சம் நிதி நடிகர்சங்கத்தலைவர் நாசரிடம்  வழங்கப்பட்டுள்ளது.

 

இதேப்போன்று நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்கும் விஷால் ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளார். நடிகர்தனுஷ் ரூ.5 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

 

இந்த நிதி எல்லாம் நடிகர் சங்க தலைவர் நாசரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் பல நடிகர்கள்நிதி உதவி தருவதாக சொல்லி இருக்கிறார்கள் . இவை எல்லாவற்றையும் திரட்டி முதல்வரின் நிவாரண நிதிக்குவழங்க உள்ளனர்.

 

:happy: மீண்டும் ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி கூட்டணிக்கு வாய்ப்பு

thani_2638179f.jpg

லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த் சுவாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ‘ரோமியோ ஜூலியட்’ படக் கூட்டணியான இயக்குநர் லட்சுமணன் மற்றும் ஜெயம் ரவி இணைய திட்டமிட்டார்கள். இப்படத்தை பிரபுதேவா தயாரிக்க இருக்கிறார். ‘மிருதன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், லட்சுமணன் இயக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ஜெயம் ரவி. தற்போது ஜெயம் ரவியுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, இரண்டு நாயகர்கள் கொண்ட கதை என்றும், இன்னொரு கதாபாத்திரம் யார் என்பது பேச்சுவார்த்தையில் இருக்கிறது என்றும் லட்சுமணன் தெரிவித்திருந்தார். தற்போது அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த் சுவாமியிடம் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறார்கள். விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்கிறது படக்குழு. ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மீண்டும் இதே கூட்டணி இப்படத்திலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

:huh: டிச.4-ல் ‘ரஜினி முருகன்’ வெளியீடு: ‘பசங்க 2’ தள்ளிவைப்பு

rajinimurugan_2637915f.jpg

 

டிசம்பர் 4ம் தேதி ‘ரஜினி முருகன்’ வெளியாவதால், அத்தேதியில் வெளியாக இருந்த ‘பசங்க 2’ திரைப்படம் டிசம்பர் 24ம் தேதியில் வெளியீட்டுக்கு மாற்றி அமைத்திருக்கிறார்கள்.சூர்யா, அமலாபால், பிந்துமாதவி மற்றும் பல்வேறு சிறு குழந்தைகள் நடிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘பசங்க-2’. சூர்யாவின் 2டி நிறுவனம் வழங்க இயக்குநர் பாண்டிராஜ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார்.ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஆகியோர் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறார்கள். இறுதிகட்டப் பணிகள், சென்சார் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதால், டிசம்பர் 4ம் தேதி வெளியீடு என்று அறிவித்தார்கள்.அதே சமயத்தில், ‘ரஜினி முருகன்’ வெளியீட்டிற்கான அனைத்து பிரச்சினைகளும் முடிந்து டிசம்பர் 4ம் தேதி வெளியீட்டிற்கு முயற்சி செய்தார்கள். ‘ரஜினி முருகன்’ படத்தைப் பார்த்த பிரபல பைனான்சியர் ‘ரஜினி முருகன்’ தனியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று ‘பசங்க 2’ படத்தை வெளியிடுபவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு ‘பசங்க 2’ படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை கணக்கில் கொண்டு டிசம்பர் 24ம் தேதி வெளியீட்டிற்கு மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

:blink: ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்கு ‘யு’- தொடரும் சென்சார் சர்ச்சைinji_2637928f.jpg

‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் வழங்கியிருப்பதால், மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது.ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’. பிரகாஷ் கோவலமுடி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு கீராவாணி இசையமைத்திருக்கிறார். பி.வி.பி. சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் நவம்பர் 27ம் தேதி வெளியாகி இருக்கிறது.இப்படத்தைப் பார்த்தவர்கள் பலரும், இப்படத்துக்கு எப்படி ‘யு’ சான்றிதழ் வழங்கினார்கள் சென்சார்கள் அதிகாரிகள் என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.அப்படத்தின் முதலில் வரும் ‘சைஸ் ஜூரோ’ பாடல் மற்றும் அதனைத் தொடர்ந்து படத்தில் வரும் முத்தக் காட்சிகள் என இருக்கும் போது ‘யு/ஏ’ சான்றிதழ் தான் அளித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். மேலும், இப்படம் தெலுங்கில் ‘யு/ஏ’ சான்றிதழுடன் தான் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் ஜேம்ஸ்பாண்ட் படமான ‘ஸ்பெக்டர்’ வெளியாகும் போது அப்படத்தில் இருக்கும் முத்தக் காட்சிகளை சென்சார் அதிகாரிகள் குறைத்தப் போது பெரும் சர்ச்சை எழுந்தது.ட்விட்டர் தளத்தில் பலரும் #SanskariJamesBond என்ற பெயரில் சென்சார் அதிகாரிகளை கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டு வந்தது நினைவுகூரத்தக்கது.

:hooray: ‘ரஜினிமுருகன்’ டிசம்பர் 4-ல் வெளியீடு: லிங்குசாமி அறிவிப்புrajinimurugan__2636823f.jpg

‘ரஜினிமுருகன்’ திரைப்படம் டிசம்பர் 4-ல் வெளியாகிறது என்று இயக்குநரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன் ராம் இயக்கி இருக்கும் படம் ‘ரஜினிமுருகன்’.இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடும் முயற்சியில் பலமுறை இறங்கியது. ஆனால், அந்நிறுவனம் வாங்கிய கடனால் படத்தை வெளியிட முடியாமல் திணறியது.இது தொடர்பான பேச்சுவார்த்தையில் திருப்பதி பிரதர்ஸ் இறங்கியது. தற்போது கடன் பிரச்சினைகள் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில், டிசம்பர் 4-ம் தேதி ரஜினிமுருகன் வெளியாகிறது என்று அப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான லிங்குசாமி ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

 

ஃபேஸ்புக் உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்

102165565-facebook.530x298.jpg?v=1437506

 

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் ஃபேஸ்புக் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு கூட தெரியாத சில ஃபேஸ்புக் ரகசியங்கள் இருக்கின்றன. அவைகள் மறைக்கப்படும் உண்மைகள் அல்ல ஆனாலும் கூட பெரும்பாலும் யாருக்கும் தெரியாத விடயங்கள் என்பது தான் உண்மை. அதை ‘வெளிச்சம்’ போட்டு காட்ட தான் இந்த தொகுப்பு..!

 

 

 

“எங்ககிட்டயேவா.. எங்களுக்கு தெரியாத ஃபேஸ்புக் தகவலா..??! அப்படி என்ன பெரிய ரகசியம்..!? அதையும் பாத்துடலாம்” என்பவர்களுக்கு, கீழ் வரும் ஸ்லைடர்களில் காத்திருக்கிறன – பதில்கள்..!

22-1440228670-a.jpg

 

நோட்டிபிகேஷன்ஸ் :

 

உங்கள் நோட்டிபிகேஷன்ஸ் உலக உருண்டையானது உலகில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை காட்டும்.!

22-1440228656-6.jpg

 

வெப்சைட் :

 

நீங்கள் சென்று வந்த அத்துணை ‘வெப்சைட்’களையும் ஃபேஸ்புக் பின் தொடறுமாம்..!

22-1440228657-7.jpg

 

டைப் :

 

நீங்கள் ஃபேஸ்புக்கில் ‘டைப்’ செய்த அத்துணை வார்த்தைகளும் ஃபேஸ்புக் சர்வரில் சேகரிக்கப்படும், அதில் நீங்கள் ‘போஸ்ட்’ செய்யாத வார்த்தைகளும் அடங்கும்..!

22-1440228663-11.jpg

 

ஃபேக் (Fake) அக்கவுண்ட்கள் :

 

ஃபேஸ்புக்கில் மொத்தம் 8.7% அக்கவுண்ட்கள் ஃபேக் (Fake) அக்கவுண்ட்கள்..!

22-1440228659-8.jpg

 

இறந்து போனவர்கள் :

 

ஃபேஸ்புக்கில் சுமார் 30 மில்லியன் இறந்து போனவர்களின் அக்கவுண்ட்கள் இருக்கிறது..!

22-1440228651-1.jpg

 

நேரடி :

 

ஃபேஸ்புக் யூஆர்எல் (URL) உடன் எண் 4 சேர்த்தால், அது நேரடியாக மார்க் ஸுக்கர்பெர்க் ஃபேஸ்புக் பக்கத்திற்கு செல்லும்..!

22-1440228652-2.jpg

 

நீல நிறம் :

 

ஃபேஸ்புக் நீல நிறம், ஏனெனில் மார்க் சூக்கர்பெர்க்-க்கு நிறக்குருடு (Colour Blind).!

22-1440228661-10.jpg

 

லைக் :

 

அதாவது ‘லைக்’ பட்டன் என்பது நிஜமாவே லைக் என்று அர்த்தப்படாதாம், அதன் அர்த்தம் ஆவ்சம் (Awsome)..!

22-1440228664-12.jpg

 

ப்ளாக் :

 

ஃபேஸ்புக்கில் இருந்து மார்க் சூக்கர்பெர்க்கை உங்களால் ப்ளாக் (Block) செய்ய இயலாது..!

22-1440228655-5.jpg

 

ஹாக்கிங் :

 

தினம் வெவ்வேறு அக்கவுண்ட்களில் சுமார் 6 லட்சம் ஹாக்கிங் (Hacking) நடக்கிறதாம்..!

22-1440228660-9.jpg

 

தடை :

 

சீனாவில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்..!

22-1440228666-13.jpg

 

சம்பளம் :

 

மார்க் சூக்கர்பெர்க்கின் – 1 டாலர்..!

22-1440228668-14.jpg

 

மக்கள் :

 

ஃபேஸ்புக்கில் ஒரு மாதத்திற்கு 1.39 பில்லியன் மக்கள் லாக்-இன் (Log in) செய்கிறார்களாம்..!

22-1440228669-15.jpg

 

பைரேட் :

 

நீங்கள் கடல் கொள்ளைக்காரர் போல பேச விரும்பினாலும் – செட்டிங்ஸ் > எடிட் லாங்வேஜ் > இங்கிலீஷ் (பைரேட்) செலக்ட் செய்யவும்..!

 

22-1440228653-4.jpg

 
ஹோம் பேஜ் :

 

முதலில் ஆல்பசிநோவின் (Al Pacino) முகம் தான், ஃபேஸ்புக்கின் படமாக வைக்கப்பட்டிருந்தது..!

“மக்கள் பேசுவதை நான் பாடுகிறேன்!”-புரட்சிப் பாடகர் கோவன் …..

அரசை நடுங்க வைத்தது அவரது பாட்டு வேட்டு. மக்களைச் சீரழிக்கும் டாஸ்மாக்குக்கு எதிராக பாடல் பாடியதற்காக தமிழக அரசால் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் கலை இலக்கியக் கழக கலைக்குழு பாடகர் கோவன், பிணையில் விடுதலையான நிலையில்… அவரை சந்தித்தோம். குரல் மென்மை, கருத்து வலிமை… அவர்தான் கோவன்.

உங்கள் பாடல் வரிகளில் அத்தனை கோபமான -நேரடித் தாக்குதல் நடத்தும் வார்த்தைகளைத் திட்டமிட்டு பயன் படுத்துகிறீர்களா?

கோவன் : மக்களின் கோப வரிகளைத்தான் நாங்கள் எங்கள் பாட்டில் எடுத்துச் சாடியிருக்கோம். இதற்காக கிராமங்களுக்குச் செல்கிறோம். அவர்களுடன் பழகுகிறோம். அவர்கள் சொல்வதை உள் வாங்குகிறோம். அதை அப்படியே பாடல்களில் வெளிப்படுத்துகிறோம்.

உதாரணத்திற்கு இன்று தமிழகத்தில் மதுவின் கொடுமை மிக மோசமாக மக்களைப் பாதித்திருக்கிறது. அரசே மது விற்பதைப் பற்றி பேசும் மக்கள், ஜெ.வை ஊத்திக் கொடுக்கும் உத்தமின்னு பேசுகிறார்கள். அத்துடன் ஜெ.வுக்கு தாலி அருமை தெரியாது.. அவர் டாஸ்மாக் கடை திறந்து ஊரிலிருக்கும் அனைத்துப் பெண்களின் தாலியையும் அறுக்கிறார் என வெளிப் படையாகவே திட்டுகிறார்கள்.  அந்தக் கோப வார்த்தைகளைத்தான் எனது டாஸ்மாக் பாட்டில் “ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்’னு பாடினேன். மக்களின் மனதைத்தான் பிரதிபலிக்கிறேன்.


கைது அனுபவம் எப்படி?

கோவன் : திடீரென நள்ளிரவில் என் வீட்டுக் கதவைத் தட்டினார் கள். கதவைத் திறந்தேன். அப்படியே குண்டுக்கட்டாக ஒரு வேனில் தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றார்கள். என் மனைவியின் கண்ணீ ருடன் கூடிய கதறல் மட்டுமே எனக்குக் கேட்டது. எனது ஊரான திருச்சியின் எல்லையிலிருந்து இன்னொரு வண்டியில் ஏற்றினார்கள். அப்பொழுதுதான் சென்னை போலீஸ் என்னை கைது செய்தது என புரிந்தது. அதன்பிறகு திண்டிவனம் தாண்டி வந்த பிறகுதான் பொழுது விடிந்தது. அதன்பிறகு நான் கைது செய்யப்பட்டதாக எனது உறவினர் களுக்குத் தெரிவித்தார்கள். அதுவரை நான் உயிருடன் இருக்கிறேனா? அல்லது இறந்துவிட்டேனா என வெளியுலகிற்கு தெரியாமல் வைத்திருந்தார்கள். அதன்பிறகு புழல் சிறையில் என்னை, “முதல்வரின்’ விருந்தாளி என்ற பெயருடன் தனிமைச் சிறையில் வைத்திருந்தார்கள். தற்பொழுதுதான் பிணையில் விடுதலையாகியிருக்கிறேன்.

முதன் முதலில் இதுபோன்ற பாடல்களை எப்பொழுது நீங்கள் பாட ஆரம்பித்தீர்கள்?

கோவன் : 1983-ஆம் வருடம் திருச்சி பெல் நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திரைப்படப் பாடல்களை மிக நன்றாகப் பாடி அங்கிருந்த தொழிலாளர்கள் மத்தியில் பெயர் பெற்றேன். அதைப் பார்த்த மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள், “இந்தப் பாடல்களைப் பாடுங்கள்’ என மக்களின் துயரங்களைப் பற்றி பாடும் பாடல்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அந்தப் பாடல்களில் இருந்த கிராமியத் தன்மையும் வாழ்வியல் உண்மைகளும் என்னைக் கவர்ந்தன. அதற்குப் பிறகு எனக்கு அரசியல் சொல்லிக் கொடுத்தார்கள். அரசியலும் கிராமியத் தன்மையும் என்னை மக்கள் கலை இலக்கியக் குழு பாடகனாக மாற்றியது.

நீங்கள் எழுதிய முதல் பாடல் எது?

கோவன் : “சாமக்கோழி கூவுனப்ப நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம்’ இதுதான் எனது முதல் பாடல். அதற்குப் பிறகு  சாதிக்கொடுமைகள், வரதட்ச ணைக் கொடுமைகள் இவற்றிக்கெதிராக பாடல்கள் இயற்றினேன். “தாமிரபரணி எங்கள் ஆறு, அமெரிக்க கோகோ வெளியேறு’ என கோகோ கோலாவிற்கு எதிராக நான் எழுதிப் பாடிய பாடல், அந்த நிறுவனத்தை நெல்லையிலிருந்து விரட்டியடிப்பதற்காக நடந்த போராட்டத்தின் அடிநாதமாக அமைந்தது.

இந்தப் பாடல்களில் சொல் லப்படும் அரசியல் சிந்தனைகள், உங்களது சொந்தக் கருத்தா?

கோவன் : நிச்சயமாக இல்லை. இது எங்கள் அமைப்பின் அரசியல் கருத்துக்களை நான் பாடலாக்கு கிறேன். பன்னாட்டுக் கம்பெனிகள் இந்த நாட்டைச் சுரண்டுவதை எதிர்த்து பாடல் எழுதியிருக்கிறேன். பாராளுமன்றத் தேர்தல் முறை, அதற்காக ஓட்டுப் பொறுக்குவது… இவற்றை எதிர்த்து பாடல் எழுதி யிருக்கிறேன்.

இனி எதிர்காலத் திட்டம்…?

கோவன் : சிறையை விட்டு வெளியே வந்ததும் “ஊரெங்கும் மழை வெள்ளம்… தள்ளாடுது தமி ழகம், சேதத்தை பார்க்க வந்த அம்மா வோட கார்கூட நனையல’ என புதிய பாட்டைப் பாடிக் கொண்டுதான் வெளியே வந்தேன். வளர்ப்பு மகன் திருமணம், 2ஜி ஊழல், சோனியா காந்தி, ஜெயலலிதா என எந்தப் பிரச்சினையெல்லாம் இந்த சமூகத்தைப் பாதிக்கிறதோ அதற்கெதிராக எனது பாட்டுக்கள் புறப்படும். அதை யாரா லும் தடுக்க முடியாது.

நட்பு- சிறுகதை

 

கிரகப் பிரவேச பத்திரிகையுடன் ராஜேஸ்வரன் வருகிறான் என்றதும் சந்தியா அலறினாள்.‘‘என்னங்க, உங்க ஃபிரண்டு பேங்க் மானேஜர். வீடு கட்டிட்டார். நீங்க பிரைவேட் கம்பெனியில சாதாரண வேலையில் இருக்கீங்க. நாம வாடகை வீட்டில் இருக்கோம். அவர் வரும்போது நமக்குக் கஷ்டமா இருக்காதா?’’‘‘ஃபிரெண்ட்ஷிப்ல அதெல்லாம் பார்க்கக் கூடாது சந்தியா!’’ – மனைவியை சமாதானம் செய்தான் சந்தானம்.

ராஜேஸ்வரன் வந்தான். பத்திரிகையைக் கொடுத்துவிட்டு அந்த வாடகை வீட்டை பார்வையால் அளந்தான்.சந்தியாவுக்கு மனசு கூசிற்று. பார்வையாலயே விட்டை நோட்டம் விடுகிறாரே. ‘சொந்த வீடு கட்டிவிட்ட பெருமையில் நண்பன் இன்னமும் வாடகை வீட்டில் இருப்பதை ஏளனமாகப் பார்க்கிறாரோ!’‘‘என்னடா, சந்தானம், இந்த வீட்டுக்கு என்ன வாடகை?’’‘‘12 ஆயிரம் ரூபாய். எதுக்கு கேக்கறே?’’

‘‘சும்மாதான்!’’ – சொல்லிவிட்டு செல்போனை எடுத்து கால்குலேட்டரை ஆன் செய்தான் ராஜேஸ்வரன். சற்று நேரத்தில் ஏதோ முடிவு செய்தவனாய், ‘‘டேய், நான் ஒண்ணு சொன்னா கேப்பியா?’’ என்றான்‘‘சொல்லுடா!’’‘‘நீ இந்த வீட்டுக்குக் கொடுக்கிற வாடகைப் பணத்தை லோனா கட்டு. என்னோட பேங்க்லயே லோன் ஏற்பாடு பண்ணித் தர்றேன். உனக்கு சொந்தமா புறநகர்ல ஒரு ஃப்ளாட் வாங்கிடலாம்!’’சந்தியா வியந்துபோய் நிற்க, சந்தானம் தன்னையும் அறியாமல் ராஜேஸ்வரனை சந்தோஷத்தில் கட்டித் தழுவினான்.

பணிவிடை- சிறுகதை

நகரின் மத்தியில் இருந்த பிரபல உணவகம் அது.‘‘அங்க ஃபில்டர் காபி ரொம்ப டேஸ்ட்டா இருக்காம். அதுவுமில்லாம கல்லாவுல இருந்து டேபிள் க்ளீன் பண்ணுறது வரை எல்லாமே பெண்கள்தானாம்! போய்ப் பாத்துட்டுத்தான் வருவோமே!’’ என்றவனை, ‘‘ம்… சைட் அடிச்சுக்கிட்டே காபி குடிக்க முடிவு பண்ணிட்டீங்க!’’ என்றாள் என் மனைவி.

ஹோட்டலுக்குள் நுழைந்தோம். சிவப்பாக லட்சணமாக இருந்த இளம் பெண் ஒருத்தி புடவைக்கு மேல் ஷர்ட் அணிந்து கொஞ்சமும் ஆபாசம் இல்லாத தோற்றத்தில் ஓடியாடி, எல்லோரும் கேட்டதைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். காபியுடன், பூரியும் சாப்பிட்டு முடித்து, தட்டில் பத்து ரூபாய் டிப்ஸும் வைத்தேன்.ஆனால் அதை அவள் வாங்க மறுத்தது ஆச்சரியமாக இருந்தது.

‘‘சார், குடும்ப சுமையை சமாளிக்கத்தான் ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்கறேன். பெண்களான எங்களுக்கு இது வேலையா தெரியலை. ஒரு சேவை பண்ணுற திருப்திதான் கிடைக்குது. வீட்ல மாமனார், மாமியார், குழந்தைங்க, உறவுக்காரங்களை வரவேற்று அவங்களுக்குத் திருப்தியா பணிவிடை பண்றதுக்கு எந்தப் பொண்ணுமே ‘டிப்ஸ்’ வாங்கறதில்லையே சார்!’’ என்றாள் அந்தப் பெண்.இதைக் கேட்டதும் எனக்கு பெண்கள் மீதான மரியாதை இன்னும் அதிகமானது. அப்போது மனைவி என்னிடம் சொன்னது… ‘‘இவளுக்கெல்லாம் கொழுப்பு அதிகம்!’’

ராஜேஷின் வெட்டிச்சுவர் சிந்தனைகள்

உண்மையில் எல்லோருக்குமே, அவரவர் பால்ய வயதில் முடி வெட்டிய சலூன்காரர்கள் கொஞ்சம் மனதுக்கு நெருக்கமானவர்களாய்த்தான் இருப்பார்கள். நாமே கூச்சப்படுமளவு நம்மைப் புகழும் திறமை வாய்ந்தவர்கள் சலூன் கடைக்காரர்கள். கூகுளில் தேடினாலும் க்ளூ கூட கிடைக்காத நம்ம அழகையும் மதிச்சு, ‘‘தம்பி! அரவிந்த்சாமி மாதிரி வெட்டி விடுறேன், உன் கிளாஸ் பொண்ணுங்க எல்லாம் உன் பின்னால வருவாங்க பாரு’னு, நமக்கு இருக்கும் நடைமுறைப் பிரச்னையை அறிந்து, பெத்த அப்பா கூட நம் மீது காட்டாத அக்கறையைக் காட்ட சலூன்காரரை விட்டால் ஆள் ஏது?

‘‘முடி வளர்ந்துடுச்சுடா, இந்த ஞாயித்துக்கிழமை வெட்டிடு’’னு அம்மா சொன்ன நிமிடத்திலிருந்தே, இந்த தடவை எந்த நடிகர் மாதிரி முடி வெட்டலாம், எந்த நடிகர் மாதிரி கிருதா வைக்கலாம்னு மனசு ‘கத்தி’ பட விஜய் மாதிரி, ப்ளூ பிரின்ட் விரிச்சு ப்ளான் போட ஆரம்பிச்சிடும்.  ‘வால்டர் வெற்றிவேல்’ படம் வந்தப்ப சத்யராஜ் மாதிரி கூட முடி வெட்டணும்னு நினைச்சிருக்கேன். வளர்ந்த பிறகுதான் தெரிஞ்சுது, பாவம் சத்யராஜே வருஷம் ஒரு தடவதான் முடி வெட்டிக்குவார்னு!
பள்ளிக்கூடம் படிக்கிறப்ப, ராக்கெட் சயின்ஸ்ல அப்துல் கலாமுக்கு டிப்ஸ் கொடுக்கிற ரேஞ்சுல அதிகமா யோசிச்சதெல்லாம் இந்த மூணு விஷயத்துக்குதான் –

தீபாவளிக்கு என்னென்ன பட்டாசு வாங்கி எப்படி எப்படி வெடிக்கிறது, முடி யாரு மாதிரி வெட்டுறது, அப்புறம் ரேங்க் கார்டுல அப்பா கையெழுத்த எப்படிப் போடுறது. ஒவ்வொரு முறை முடி வெட்ட உட்காரும்போதும், ‘கமல் மாதிரி வெட்டுங்க’, ‘அர்ஜுன் மாதிரி வெட்டுங்க’னு சொல்லிட்டு உட்காருவேன். ‘நீ சால்னா கேட்டா என்ன, சப்பாத்தி குருமா கேட்டா என்ன, எனக்கு சாம்பார் செய்யத்தான் தெரியும்’ என்கிற மாதிரி இருப்பார் சலூன்காரர். ஒன்பது கிலோமீட்டர் ஓடி வந்தவன் இளைப்பு வாங்குற டோன்ல, ஒரு சசிகுமார் ரக சிரிப்ப சிரிச்சுட்டு, பயங்கர பசில இருக்கிறவன் பார்சல் வாங்கிட்டு வந்த தேங்காய் சட்னி பொட்டலத்த பிரிக்கிறது போல கத்தரிக்கோலோட தலையில கதகளி ஆடுவாரு.

டி வில்லியர்ஸ் பேட் மாதிரி கத்தரிக்கோல் கண்ட திசையிலும் சுழல்றப்ப, ‘டேய் வடக்குப்பட்டி ராமசாமி, பணத்தை எடுத்து வைடா’ங்குற ரேஞ்சுல எவரெஸ்ட் சிகரத்தை விட ரெண்டடி உயரத்துல என் நம்பிக்கை கொடி கட்டிப் பறக்கும். என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியாது, எனக்குத் தெரிந்து சாய்வு நாற்காலியில் தூங்கியவர்களை விட, சலூனின் சுழலும் நாற்காலியில் தூங்கியவர்கள் அதிகம். ‘சலூன் கடை சேர்ல பத்து நிமிஷம் உட்கார்ந்திருப்பதும் ஒண்ணுதான், ஒன்பது பொங்கல மொத்தமா திங்கிறதும் ஒண்ணுதான்’ என ஒரு ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்ததாக முறுக்கு மடிச்சு கொடுத்த காகிதத்துல படிச்சிருக்கேன். சலூன் கடைக்காரர் விரல்களிலும், அம்மா சொல்லும் கதையிலும், கெமிஸ்ட்ரி வாத்தியார் வாயிலும் வாழ்கிறார் தூக்கத்தின் கடவுள்.

வாய் கொள்ளாம குரைச்ச பிறகு கொஞ்சம் வர்க்கி கிடைச்ச நாய் மாதிரி, கத்தரிக்கோல் சைலன்ட்டான பிறகு தலையப் பார்த்தா, ‘பிரெண்ட்ஸ்’ பட க்ளைமேக்ஸ்ல விஜய் ஹேர் ஸ்டைல் மாதிரியே இருக்கும். அந்த ஹேர் ஸ்டைலை பத்து நாள் கழிச்சுப் பார்த்தா ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ சிவகுமார் மாதிரி வளர்ந்து நிற்கும்.
வீட்டை பிடிச்சிப் போனா வீட்டுல இருக்கிறவங்களும் பிடிச்சுப் போற மாதிரி, சலூன்காரர்கள் பிடித்துப் போக, அவர்களது சலூனும் முக்கிய காரணம். என் சலூன்காரர் ரொம்பவே ரசனையான மனுஷன்.

ஷேவிங் செய்ய வருபவர்கள் சக்கர நாற்காலியின் பின்னாடி தலை சாய்த்து, ஸ்லைட்டா விட்டத்தைப் பார்க்கும் இடத்தில கூட சில்க் ஸ்மிதா போட்டோ ஒட்டியிருப்பாரு. அதைப் பார்க்கும் ஷேவிங்காரரும் தலையை அங்க இங்க திருப்பி இம்சை தராமல், ஒத்துழைப்பு கொடுப்பாரு.
ஷேவிங் செய்யப்பட்ட செம்மறி ஆடுகள் போலவும், முடி வளர்த்த முயல்கள் போலவும் ப்ளோ-அப் போஸ்டர்களில் சிரிக்கும் அந்த பாணி பூரி விற்பவர்கள் போலிருக்கும் அண்ணன்கள்தான், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் எனப் பின்னாளில் தெரிய வந்தது.

நாம பார்க்கிறதை யாரும் பார்த்திடக் கூடாதென, பாகிஸ்தான் பார்டருக்குள் கால் வைக்கும் இந்திய ஜவான் போல பயத்தோடும் எச்சரிக்கை உணர்வோடும், சுவற்றில் ஒட்டியிருந்த ஒரு நடிகையின் போஸ்டரை, பத்து நொடிக்கு ஒரு முறை பார்த்துப் பார்த்து திரும்பிக்கொண்டிருந்த எனக்கு ‘‘தம்பி, அது குஷ்புப்பா’’ என எங்கள்  இருவரையும் அறிமுகப்படுத்தி, அந்த நாளை ‘வரலாற்றில் இன்று’ என என் சுயசரிதையில் குறிக்குமளவு உதவியவர் அவர்தான். சலூனில் ஒட்டியிருந்த ஒரு நடிகையின் போட்டோவை பார்த்துட்டு சுப்பு தாத்தா, ‘‘என்னடா அனுராதா இளைச்சுப் போயிடுச்சு’’ என்றதற்கு, ‘‘அப்புச்சி, அது டிஸ்கோ சாந்தி’’ என விளக்கமளித்தது,
‘பாட்ஷா’ படத்தில்  அடி பம்பை எடுத்து ரஜினி அடித்த காட்சிக்கு ஒப்பாக இன்னமும் என் நினைவில் பசுமை மாறாமல் இருக்கிறது.

அரசியல், சினிமா செய்திகள் போக எங்கள் ஏரியா கிசுகிசுக்கள் கூட அவரது சலூனில்தான் – கமல் படங்களில் நுழைக்கப்படும் யூகி சேது கேரக்டர்கள் போல – எங்கள் காதுகளுக்குள்ளும் நுழைந்தது. சொல்லப் போனால் பிற்காலத்தில் டபுள் மீனிங் டயலாக்குகளுக்கான விதை அங்கேதான் போடப்பட்டது. நிமிடத்திற்கு ஒரு முறை தலை சீவும் அண்ணன்கள் பலருக்கும் காதல் கடித போஸ்ட் ஆபீஸ் அதுதான். எனது வயதுப் பசங்கதான் போஸ்ட்மேன்கள்.

மகான் கவுண்டமணியால் எப்படி கூட நடிப்பவரைத் திட்டாமல் நடிக்க முடியாதோ, அதேபோல பால்ய வயதில் என்னால் எதையும் கொட்டாமல் இருக்க முடியாது. தண்ணீர், எண்ணெய், மோர், குழம்பு, கிருஷ்ணாயில், தேன், பால் என ஹோட்டல் மற்றும் மளிகை லிஸ்ட்டில் இருக்கும் அனைத்து திரவ நிலை பொருட்களிலும் எனக்கு கிரக நிலை சரியில்லாமல்தான் இருந்தது. எதையாவது கொட்டியது தெரிந்ததும், என் அம்மா, ‘அட எடுபட்ட…’ என ஆரம்பிக்கும்போதே, தியேட்டரில் போட்ட வேகத்தில் தூக்கப்பட்ட ‘நையாண்டி’ படம் போல வீட்டிலிருந்து வெளியே தெறித்திருப்பேன்.

அப்பா வீடு வரும் வரை எனக்கு அடைக்கலம் தந்ததெல்லாம் சலூன்தான். குடுமி எடுத்த தேங்காயை பந்து போல வைத்துக்கொண்டு நானும் எனது சித்தப்பா மகனும், ‘கிழக்கு செவக்கையில, நான் கீரை அறுக்கையில’ என உருட்டி விளையாடுவதைப் பார்த்த என் அம்மா, ‘‘அடேய் பசியெடுத்த பெருச்சாளிகளா,  முண்ட தேங்காய உருட்டுனா துக்கம் வந்து சேரும்டா’’ எனச் சொல்லி முடித்த 12வது நிமிஷம், டி.கல்லுப்பட்டி பாட்டி டிக்கெட் வாங்கிடுச்சு என்றது டிரிங் டிரிங். சச்சின் போல, 100 அடிக்கும்னு நம்மாளுங்க நினைச்சிருந்தாங்க போல. பாட்டி சேவாக் மாதிரி 99ல அவுட்டானதுக்கு நான் உருட்டுன தேங்காய்தான் காரணம்னு நாங்களே முடிவு பண்ணிக்கிட்டு, அம்மா அடிப்பாங்கனு தெறிச்சு ஓடி தஞ்சம் அடைந்த இடம் சலூன்தான். சாயந்திரம் சலூனுக்குள்ள போன நாங்க, கிட்டத்தட்ட நாப்பத்தாறு ஷேவிங் பார்த்துட்டுதான் வீடு வந்தோம்.

‘நல்ல முறுகலா, எக்ஸ்ட்ரா எண்ணெயோட, அடியில கருகாம பொன்னிறம் வர்றப்ப எடுத்திடுங்க’னு ரோஸ்ட் ஆர்டர் பண்ணினா, ‘தம்பிக்கு ஒரு ஊத்தப்பம்’னு நினைச்சுக்கிட்டு அவரு முடிவெட்டுனது கூட கவலையளிக்காது. கரும்பு வெட்டுன பிறகு தீ வச்சு எரிச்ச காடாட்டம் முடியோட உட்கார்ந்திருக்கிற என்கிட்டே, ‘‘இந்தா தம்பி! சீவிப் பாரு’’னு கடைசியா சீப்பை நீட்டுவாரு பாருங்க, அப்ப எனக்கு அவரைப் பார்த்தா ‘சண்டமாருதம்’ பட ஃபர்ஸ்ட் காப்பிய புரொடியூசருக்கு காமிச்ச ஏ.வெங்கடேஷ் போல தோணும்.

மொட்டையடித்து மூணு நாள் ஆனா மாதிரி, ‘ரெட்’ அஜித் கெட்டப்ல போகும் என்னைப் பார்த்து அம்மா கேட்கும், ‘‘ஏன்டா இன்னமும் கொஞ்சம் குறைச்சு முடி வெட்டியிருக்கக் கூடாது?’’ தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட வரும் வடிவேலுவிடம், ‘என்னண்ணே தக்காளி சட்னி

யா?’ன்னு கேட்கும்போது வடிவேலு எவ்வளவு கடுப்பாகி இருப்பாரென புரிந்துகொள்ள வைக்கும் சூழ்நிலை அது. நான் ஆசைப்பட்ட மாதிரி முடி வெட்டுவது என்பது சிம்பு படம் ரிலீசாவது போன்ற அரிதான விஷயமாகிவிட்டாலும்,   அவர் மீது கோபமோ காழ்ப்புணர்ச்சியோ ஏற்படவில்லை. ஒருவேளை அதற்குக் காரணம் அப்போதைய என் வயதாகக் கூட இருக்கலாம். ஒரு பெண்ணை அஞ்சு பேரு ஒண்ணா சேர்ந்து லவ் பண்றளவு பொறாமை இல்லாத வயசுல்ல
அது.

சலூன் கடைக்காரர் விரல்களிலும், அம்மா சொல்லும் கதையிலும், கெமிஸ்ட்ரி வாத்தியார் வாயிலும் வாழ்கிறார் தூக்கத்தின் கடவுள்.ஷேவிங்குக்கு தலை சாய்த்து, ஸ்லைட்டா விட்டத்தைப் பார்க்கும்  இடத்தில கூட சில்க் ஸ்மிதா போட்டோ
ஒட்டியிருப்பாரு.

ஷார்ட் ஆனாலும் ஹாட்!

விநோத ரஸ மஞ்சரி

அழகான பெண் என்றால் இவ்வளவு உயரம் இருக்க வேண்டும் என ஆயிரம் இலக்கணம் சொல்கிறோம். அது அத்தனையையும் தூக்கிப் போட்டு உலகையே தன் அழகால் வசப்படுத்தி வருகிறார் கரினா லெமோஸ். பிரேஸிலைச் சேர்ந்த டி.வி தொகுப்பாளரான கரினாவின் உயரம் 4.3 அடிதான். ஆனால் ‘உலகின் மிக செக்ஸியான குள்ளப் பெண்’ எனும் பட்டத்தை இவருக்கு வாரி வழங்கியிருக்கிறது சோஷியல் மீடியா!

கொஞ்ச நஞ்சமல்ல… கரினாவை ட்விட்டரில் மட்டும் 35 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். அவர்களில் பலரும் கரினாவின் அழகை ஆராதிக்கிறவர்கள்தான். ‘‘என்னை கல்யாணம் செய்துகொள்ள சம்மதமா?’’ என்று கூட பலர் கேட்கிறார்களாம்.

பொதுவாக  ட்வார்ஃபிசம் பாதிப்புக்கு உள்ளானவர்கள், தங்கள் உடல் மேல் உள்ள அதிருப்தி +விரக்தி காரணமாக டயட் எதையும் கடைப்பிடிப்பதில்லை. இதனால், ஓவர் வெயிட் போட்டுவிட்ட குள்ள மனிதர்களைத்தான் பெரும்பாலும் பார்க்க முடியும். ஆனால், கரினா மிக கண்டிப்புடன் டயட், உடற்பயிற்சியைத் தொடர்கிறார். எனவேதான் சிக்கென்ற உடற்கட்டால் இத்தனை பேரைக் கவர்கிறார்.

‘‘என் தோற்றத்துக்காக என்றைக்கும் நான் துயரம் அடைந்ததில்லை. பெருமைதான் கொள்கிறேன். அழகாக, ஷேப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா பெண்களையும் போல நான் கடுமையான உடற்பயிற்சிகள் செய்கிறேன். ‘நீ அழகா இருக்கே’ என்று ஆண்கள் என்னைப் பாராட்டும்போது ரொம்பவும் சந்தோஷமாய் இருக்கிறது!’’ என்ற விவரணையோடு சமீபத்தில் தனது கவர்ச்சிப் படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார் கரினா.

‘வெரி நைஸ்’ என்று அவற்றுக்கு வெறித்தனமாய் லைக் போட்டுக்கொண்டிருக்கிறது இளைஞர் பட்டாளம். குள்ள மனிதர்களில் எந்தப் பெண்ணும் கரினா போல உடற்கட்டைப் பேணுவதில்லை என்பதால் ‘World’s sexiest dwarf’ எனும் பாராட்டை நிஜமாகவே கரினாவுக்கு சூட்டிவிட்டன உலக மீடியாக்கள்!

போன் பேட்டரியை சேமிக்கும் ஆண்ட்ராய்டு!

 

வந்தாச்சு மார்ஷ்மல்லோ

ஏ பி சி டி வரிசையில் குழந்தைகளுக்குப் பிடித்ததொரு உணவுப் பெயரைத்தான் ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கு வைப்பது வழக்கம். I-ஐஸ்கிரீம் சாண்ட்விச், J-ஜெல்லிபீன், K-கிட்கேட், L-லாலிபாப் என வரும் அந்த வரிசையில் அடுத்த ‘M அப்டேட்’ என்னவாக இருக்கும் என்று ஒரு வருடமாக தலையைப் பிய்த்துக்கொண்டிருந்தது உலகம். சுந்தர் பிச்சை கூகுளுக்கு தலைமை ஏற்றதும் அது ‘மாங்காய் பச்சடி’ என்று கூட ஆருடம் சொன்னார்கள். கடைசியில் அது ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ. ஒரு வகை ஃபாரின் மிட்டாய் இது!

இதுவரை வந்த ஆண்ட்ராய்டு பதிப்புகளிலேயே மிகமிகத் தாமதமாக செயல்பாட்டுக்கு வரும் பதிப்பு இதுவாகத்தான் இருக்கும். கடந்த அக்டோபர் 5 அன்றே ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ வெளியாகிவிட்டது. கூகுளின் சொந்தத் தயாரிப்பான நெக்சஸ் போன்கள் மற்றும் டேப்லெட்கள் தவிர வேறெதிலும் இன்றுவரை மார்ஷ்மல்லோ அப்டேட் இல்லை. வருகிற டிசம்பர் மாதம் எல்.ஜி நிறுவனம் வெளியிடவிருக்கும் G4 போன்களில் மார்ஷ்மல்லோ இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி வந்தால் அதுதான் கூகுள் அல்லாத வெளி நிறுவனத்தின் முதல் மார்ஷ்மல்லோ போன்!

‘இதற்கு முந்தைய ஆண்ட்ராய்டு பதிப்பான லாலிபாப்பே இன்னும் முழுமையாகப் புழக்கத்துக்கு வரவில்லை. அதற்குள் இன்னொன்றா?’ என்பது ஆண்ட்ராய்டு விமர்சகர்களின் ஆச்சரியம். ‘அந்தளவுக்கு இதுல புது விஷயம் இருக்குய்யா’ என்பது ஆண்ட்ராய்டு ஆர்வலர்களின் ஆன்ஸர். அப்படி என்ன புதுசு..?

* அசிஸ்டன்ட் எனும் அப்ளிகேஷனை மார்ஷ்மல்லோ பதிப்பில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆண்ட்ராய்டு. இது நம் பார்வைக்கே வராது. ஆனால், எந்நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும். நாம் பயன்படுத்தும் ஆப், அதில் நாம் டைப் செய்யும் சங்கதிகள் என சகலத்தையும் கண்காணித்து நினைவில் வைத்திருப்பதுதான் இதன் வேலை. இதன் மூலம் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என நம் ஸ்மார்ட் போன் அறிந்திருக்கும்.

இந்த நேரத்தில் இவன் என்ன கேட்பான் என நோக்கம் அறிந்து நம் தேடுபொறி செயல்படும். உதாரணத்துக்கு, மைக்கேல் ஜாக்சனின் பாடலை நீங்கள் போனில் கேட்டுக்கொண்டிருக்கும்போது, கூகுள் குரல்வழித் தேடலில், ‘யாரு இவரு?’ எனக் கேட்டால் போதும்… நீங்கள் மைக்கேல் ஜாக்சன் பற்றித்தான் கேட்கிறீர்கள் எனப் புரிந்துகொண்டு அது தேடல் முடிவுகளைத் தரும்.

* பொதுவாக ஆண்ட்ராய்டு போன்களில் இன்டர்னல் மெமரி என்பது போனுடனே வரும் நினைவகம். நாம் போடும் மெமரி கார்டு, எக்ஸ்டர்னல் மெமரியாகத்தான் செயல்படும். இதில் போட்டோ, வீடியோ, பாடல்கள் போன்றவற்றை சேமிக்கலாமே தவிர, இன்டர்னல் மெமரியை இதன்மூலம் நீட்டிக்க முடியாது.

ஆனால், இந்த மார்ஷ்மல்லோ பதிப்பில் ஒரு மெமரி கார்டை போனில் நுழைத்ததுமே, அதை இன்டர்னல் மெமரியாக ஏற்க வேண்டுமா? எக்ஸ்டர்னல் மெமரியாக ஏற்க வேண்டுமா? என அதுவே கேட்கும். ‘இன்டர்னல் மெமரி’ என்று கொடுத்துவிட்டால் உங்கள் போனின் இன்டர்னல் மெமரியே நீட்டிக்கப்பட்டுவிடும். 32 ஜிபி மெமரி கார்டு போட்டால் அத்தனையிலும் கிலோ கணக்கில் ஆப்களை இறக்கி ஆனந்திக்கலாம்!

* பொதுவாக ஒரு ஆப் இன்ஸ்டால் செய்யும்போது, நம் போனில் உள்ள சகலத்தையும் பயன்படுத்திக் கொள்ள அது அனுமதி கேட்கும். அதைப் படித்துக்கூடப் பார்க்காமல் ‘accept’ பட்டனை அழுத்துவதுதான் நம் பாரம்பரியம். ஆனால் இந்தப் பதிப்பில் இருந்து, எது எதுக்கெல்லாம் பர்மிஷன் கொடுக்க வேண்டும், வேண்டாம் என நாம் தீர்மானிக்கலாம். உதாரணத்துக்கு, ‘ஒரு செய்தி ஆப்… நம் போனின் கேமரா, மைக் போன்றவற்றை எதற்காகப் பயன்படுத்த வேண்டும்? நம்மை உளவு பார்க்கவா?’ என உங்களுக்கு சந்தேகம் வந்தால் அனுமதியை கட் செய்துவைக்கலாம்.

* ஸ்மார்ட் போன் என்றாலே பேட்டரிதான் பிரச்னை. அதை மிச்சப்படுத்துவதற்காகவே ‘டோஸ்’ (Doze) எனும் பவர் மேனேஜ்மென்ட் முறை மார்ஷ்மல்லோவில் உள்ளது. செல்போனை நாம் கையில் எடுக்காத நேரத்தில் இது மறைமுக செயல்பாடுகளைக் குறைத்து முடிந்தவரை பேட்டரியை சேமிக்கிறது.

* நேரடியான கைரேகை சென்ஸார் சப்போர்ட் இந்த ஆண்ட்ராய்டு பதிப்பில் உண்டு. இதனால், இனி வரும் போன்கள் எல்லாமே கைரேகை கொண்டு உரியவர் மட்டும் அன்லாக் செய்யும் வண்ணம் வரும். அது தவிர, இனி மற்ற ஆப்களுக்கும் கைரேகை அடையாளத்தைப் பயன்படுத்தலாம். ஸோ, வங்கிகளின் ஆப்கள் ஒரு பணப்பட்டுவாடா செய்ய ‘கைரேகையை வை’ எனச் சொல்லும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

* யு.எஸ்.பி. தொடர்பைப் பொறுத்தவரை type C எனும் வகையை இந்தப் பதிப்பு பயன்படுத்துகிறது. இதன்மூலம் ஒரு போனிலிருந்து இன்னொரு போனுக்கு பேட்டரி சார்ஜைப் பகிர முடியும்.

* இனி மார்ஷ்மல்லோவை குறி வைத்துத் தயாரிக்கப்படும் ஆப்கள் எல்லாம், தமது தகவல்களை பேக் அப் எடுத்து வைக்க கூகுள் டிரைவை பயன்படுத்திக் கொள்ளும். அதற்கான வசதி இந்தப் பதிப்பில் தரப்பட்டுள்ளது.

அப்படி கூகுள் டிரைவைப் பயன்படுத்தும் ஒவ்வொரு ஆப்க்கும் 25 எம்.பி வரை  இலவச இடம் தந்திருக்கிறது கூகுள். ஆக, இனி போனை மாற்றி, அதில் இருக்கும் மெமரி கார்டையும் சேர்த்து மாற்றினால் கூட நமது ஜிமெயிலில் நுழைந்தவுடன் பழைய ஆப்கள் பழைய மாதிரியே திரும்பி வந்துவிடும். தகவல்களும் கூட!

மொபைல் உலகை அப்படியே புரட்டிப் போடும்படியான அம்சங்களை ஆப்பிள் ஐ.ஓ.எஸ்9 பதிப்பில் எதிர்பார்த்தார்கள்… நடக்கவில்லை. ஆனால், புரட்டும்படி இல்லை என்றாலும் லேசாக முன்னோக்கி நகர்த்தும்படியான மாற்றங்கள் மார்ஷ்மல்லோவில் உள்ளன. லாலிபாப்புக்கே தயாராகாத இந்திய செல்போன் கம்பெனிகள் இதை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில்தான் ஆட்டம் சூடு பிடிப்பது இருக்கிறது! நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே… நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே!

வெள்ளம் தடுக்கும் சுரங்கக் கோயில்

‘இனி பருவமழை என்பதே கிடையாது. காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல் என ஏதாவது காரணங்களால் மழை பெய்தால்தான் உண்டு. கடலூரிலும், காஞ்சிபுரத்திலும் பெய்தது போல, பருவநிலை மாற்றங்களால் திடீரென சில மணி நேரங்களில் ஒரே இடத்தில் கனமழை கொட்டித் தீர்க்கும்.

கிராமங்கள் சமாளித்து விடலாம். ஆனால் சென்னை போன்ற நகரங்கள் இதைத் தாங்காது’ என எச்சரிக்கிறார்கள் சூழலியல் நிபுணர்கள். இதேபோன்ற பிரச்னைகளிலிருந்து பாடம் கற்ற ஜப்பான், புதுமையான முறையில் இதற்குத் தீர்வு கண்டிருக்கிறது.

நம் சென்னையின் மடிப்பாக்கம், முடிச்சூர் போல ஜப்பானின் புறநகர்ப் பகுதி சாய்டாமா. இங்கிருக்கும் இந்தக் கட்டிடத்தை ‘சுரங்கக் கோயில்’ என வழி
படுகிறார்கள் ஜப்பான் மக்கள். டோக்கியோவின் புறநகர்ப் பகுதிகள் பலவும் மக்கள் நெரிசலில் தவிக்கின்றன. என்னதான் வடிகால் வசதிகள் பக்காவாக இருந்தாலும், திடீரென ஒரு சூறாவளியோடு மழை வந்து தாக்கும்போது, எல்லா குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது.

இப்படி தொடர்ச்சியாக ஐந்து வெள்ள பாதிப்புகளிலிருந்து பாடம் கற்ற ஜப்பான் அரசு, இதற்குத் தீர்வாக தரைக்கு அடியில் ஒரு மெகா தண்ணீர்த் தொட்டி கட்ட முடிவெடுத்தது. சாய்டாமா பகுதியில் ஒரு கால்பந்து மைதானம் மற்றும் பூங்காவுக்குக் கீழே இது இருக்கிறது. தொட்டி என்றால் ஏதோ நம் வீட்டு மொட்டை மாடியில் வைப்பது போன்றதல்ல இது! ஒரு பெரிய ஏரிக்கு சமமானது.

தரைக்கு அடியில் 50 மீட்டர் ஆழத்தில் இந்த சுரங்க நீர்த்தேக்கம் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு கால்பந்து மைதான சைஸில் 5 டேங்குகள். 83 அடி உயரம், 255 அடி அகலம், 580 அடி நீளம். ஐந்தையும் கால்வாய்கள் இணைக்கின்றன. இந்தக் கால்வாய்கள் சுரங்கத்தில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீள்கின்றன. திடீரென மழை கொட்டும்போது டோக்கியோ புறநகர்ப் பகுதிகளில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர், கால்வாய்கள் வழியாக இங்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு நொடியில் 200 டன் வெள்ள நீரை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது இது.

ஒரு தொட்டி நிரம்பியதும் அடுத்த தொட்டிக்கு தண்ணீர் போகும். இப்படியே ஐந்து தொட்டிகளும் மொத்தமாக நிரம்பிவிட்டால், உபரி நீரை வெளியேற்ற ஜெட் விமானத்தை இயக்கும் திறன்கொண்ட நான்கு எஞ்சின்கள் உள்ளன. இவை உபரி நீரை வெளியேற்றி எடோ நதியில் விடும். அந்த நதி தாழ்வான பகுதியில் ஓடி கடலில் கலப்பது என்பதால், அதன்பின் பிரச்னை இருக்காது.

‘உலகின் மிகப்பெரிய சுரங்க வெள்ள நீர் வடிகால் அமைப்பு’ எனப் பெயர் பெற்றிருக்கிறது இது.  ஒருநாள் முழுக்க பேய்மழை கொட்டித் தீர்த்தாலும், டோக்கியோ புறநகரின் வெள்ள நீர் முழுவதையும் உள்வாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது இது. சுமார் 19 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் இதை வடிவமைத்து உருவாக்க 18 ஆண்டுகள் ஆனது.

சேமிக்கும் மழைநீரை சுத்திகரித்து குடிநீர் விநியோகத்துக்குப் பயன்படுத்தவும் இதில் வசதி இருக்கிறது. எனவே ‘மழைநீர் வீணாகக் கடலில் கலந்தது’ என்பது போன்ற செய்திகளை ஜப்பான் செய்தித்தாள்களில் படிக்க முடியாது. நீர் இல்லாமல் சும்மா இருக்கும் காலங்களில் இது ஒரு சுற்றுலாத் தளம் ஆகிவிடுகிறது. அதோடு, சினிமா ஷூட்டிங்கும் ஆர்வமாக நடத்துகிறார்கள்.

சென்னையின் மழைநீரில் மக்களையும் வீடுகளையும் மிதக்கவிட்டு வேடிக்கை பார்த்து, அதன்பிறகு கோடையில் அவர்களை காலி குடங்களோடு வீதியில் அலையவிடும் அரசு, கொஞ்சம் ஜப்பானைத் திரும்பிப் பார்க்க வேண்டும். சேமிக்கும் மழைநீரை சுத்திகரித்து குடிநீர் விநியோகத்துக்குப்  பயன்படுத்தவும் இதில் வசதி இருக்கிறது. எனவே ‘மழைநீர் வீணாகக் கடலில்  கலந்தது’ என்பது போன்ற செய்தி களை ஜப்பான் செய்தித் தாள்களில் படிக்க  முடியாது