விநோத ரஸ மஞ்சரி
அழகான பெண் என்றால் இவ்வளவு உயரம் இருக்க வேண்டும் என ஆயிரம் இலக்கணம் சொல்கிறோம். அது அத்தனையையும் தூக்கிப் போட்டு உலகையே தன் அழகால் வசப்படுத்தி வருகிறார் கரினா லெமோஸ். பிரேஸிலைச் சேர்ந்த டி.வி தொகுப்பாளரான கரினாவின் உயரம் 4.3 அடிதான். ஆனால் ‘உலகின் மிக செக்ஸியான குள்ளப் பெண்’ எனும் பட்டத்தை இவருக்கு வாரி வழங்கியிருக்கிறது சோஷியல் மீடியா!
கொஞ்ச நஞ்சமல்ல… கரினாவை ட்விட்டரில் மட்டும் 35 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். அவர்களில் பலரும் கரினாவின் அழகை ஆராதிக்கிறவர்கள்தான். ‘‘என்னை கல்யாணம் செய்துகொள்ள சம்மதமா?’’ என்று கூட பலர் கேட்கிறார்களாம்.
பொதுவாக ட்வார்ஃபிசம் பாதிப்புக்கு உள்ளானவர்கள், தங்கள் உடல் மேல் உள்ள அதிருப்தி +விரக்தி காரணமாக டயட் எதையும் கடைப்பிடிப்பதில்லை. இதனால், ஓவர் வெயிட் போட்டுவிட்ட குள்ள மனிதர்களைத்தான் பெரும்பாலும் பார்க்க முடியும். ஆனால், கரினா மிக கண்டிப்புடன் டயட், உடற்பயிற்சியைத் தொடர்கிறார். எனவேதான் சிக்கென்ற உடற்கட்டால் இத்தனை பேரைக் கவர்கிறார்.
‘‘என் தோற்றத்துக்காக என்றைக்கும் நான் துயரம் அடைந்ததில்லை. பெருமைதான் கொள்கிறேன். அழகாக, ஷேப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா பெண்களையும் போல நான் கடுமையான உடற்பயிற்சிகள் செய்கிறேன். ‘நீ அழகா இருக்கே’ என்று ஆண்கள் என்னைப் பாராட்டும்போது ரொம்பவும் சந்தோஷமாய் இருக்கிறது!’’ என்ற விவரணையோடு சமீபத்தில் தனது கவர்ச்சிப் படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார் கரினா.
‘வெரி நைஸ்’ என்று அவற்றுக்கு வெறித்தனமாய் லைக் போட்டுக்கொண்டிருக்கிறது இளைஞர் பட்டாளம். குள்ள மனிதர்களில் எந்தப் பெண்ணும் கரினா போல உடற்கட்டைப் பேணுவதில்லை என்பதால் ‘World’s sexiest dwarf’ எனும் பாராட்டை நிஜமாகவே கரினாவுக்கு சூட்டிவிட்டன உலக மீடியாக்கள்!