‘‘ஒரே ராத்திரியில ஏன் ரெண்டு கடைகள்ல கொள்ளை அடிச்சே..?’’
‘‘என்ன பண்றது எஜமான்..? எனக்கு ரெண்டு சம்சாரம் ஆச்சே!’’
‘‘மேடையில சேர்ல உட்கார்ந்துக்கிட்டு தூங்காதீங்க தலைவரே…’’
‘‘ஏன்யா..?’’
‘‘நீங்க நாற்காலி கனவு காண்றதா எல்லாரும் சொல்றாங்க!’’
‘‘நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு செருப்புகள் விழாத காரணத்தினால், தலைவரை மீண்டும் பேச அழைக்கிறோம்..!’’
‘‘நம்ம படம் ரிலீசான நாலு நாள்ல நாற்பது கோடியைத் தாண்டிடுச்சு சார்…’’
‘‘நிஜமாவாய்யா சொல்றே… அவ்வளவு வசூலா?’’
‘‘நினைப்புதான்… ஃபேஸ்புக், ட்விட்டர்ல நம்ம படத்தை திட்டுனவங்களோட எண்ணிக்கையைச் சொன்னேன்!’’
‘‘மப்புல உளர்றாரு தலைவர்…’’
‘‘எப்படிச் சொல்ற..?’’
‘‘தொகுதிவாழ் மருமக்களேங்கறாரு..!’’
‘‘தலைவர் காரசார விவாதத்தை ஏன் தவிர்க்கறாரு..?’’
‘‘அவருக்கு அல்சர் பிரச்னையாம்… அதான்!’’
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் திறமையான இசையமைப்பாளராக இருந்தாலும் அவராலே ஹெல்‘மெட்டில்’ ட்யூன் போட முடியாது!
– எந்த மெட்டுக்கும் ட்யூன் போடும் இசைமேதைகள் சங்கம்