நீ எனக்கான ஆள் இல்லை-சமந்தா-சித்தார்த்

“முதலில் பிரிவு உண்டானதற்காக வருத்தப்பட்டேன். பிறகுதான் அது நல்ல தருணம்… என உணர்ந்துகொண்டேன்.’ இப்படி மொட்டையாக சித்தார்த் டுவிட் போட்டார்.

“அந்த தருணத்தில்தான் நீ எனக்கான ஆள் இல்லையென்பதை உணர்ந்தேன்!’ இப்படி மொட்டையாக சமந்தா டுவிட் போட்டார்.

இருவரும் தங்கள் காதல் பிரேக்-அப் ஆனதைத்தான் இப்படி போட்டுத் தாக்கி யிருக்கிறார்கள்.

கடந்த இதழில் கிசுகிசு.காமில்கூட…. சமந்தாவின் படங்களின் தோல்விக்கு சித்து சந்தோஷப்படுவதாகவும், இதனால் சமந்தா கோபமாக இருப்பதாகவும் வந்த தகவலை வெளியிட்டிருந்தோம்.

இருவருக்கும் இடையே உரசல் உச்சத்துல இருக்குபோல…

அதான் இப்படி மறைமுகமாக டுவிட்டரில் குஸ்தி போட்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே… த்ரிஷாவுடன் பிரேக்-அப் ஆன வருண்மணியன் “த்ரிஷா மோசமான பெண்’ என்கிற அர்த்தம் தொனிக்கும் வார்த்தை யில் டுவிட் போட்டு… சிறிது நேரத்திலேயே அழித்தார் வருண்.

அதுபோல… சமந்தா தான் போட்ட டுவிட்டை சிறிது நேரத்திலேயே அழித்து விட்டார்.

ருசி கண்ட பூனை நான்-பூனம் பாண்டே கவர்ச்சிப்புயல்

 

எந்த நேரத்திலும் வலைப்பக்கத்தில் வீசிக்கொண்டிருக்கிறது பூனம் பாண்டே கவர்ச்சிப்புயல்.

இந்த மாத பூனத்தின் “டாப்-டென்’ என மாசாமாசம் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் அவரின் டுவிட்டர் ஃபாலோயர்கள்.

ஒரு பெண் ஃபாலோயர் “டெய்லி கிளாமர் பண்றீங்களே… போரடிக்கலையா?’ எனக் கேட்க…

“கிளாமர் சலிக்க ஆரம்பிச்சிட்டா… வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்காது. இது ஒரு போதை. அதுல ருசி கண்ட பூனை நான். விடுவேனா?’ எனக் கேட்டு தெறிக்கவிட்டிருக்கிறது இந்த கவர்ச்சி வேதாளம்.

விஜய் பற்றிய 40 சுவையான தகவல்கள் இதோ!!

விஜய் பற்றிய 40 சுவையான தகவல்கள் இதோ!!

Ilayathalapathy.jpeg

 

 

1. பெருசா ஜிம்முக்கு போயி அலக்கிட்டிக்றதே இல்லை. அப்படி இருந்தும் அவரது இளமையின் ரகசியம் அன்பு. “மற்றவர்கள் மீது அன்பு செலுத்தினாலே உடம்புல இளமை தங்கிடும்” என்பார் விஜய்.
.
2. எந்த மாஸ்டர்கிட்டேயும் டான்ஸ் கத்துக்கிட்டதில்லை. அப்புறம் எப்படி டான்சில் பொளந்து கட்டுகிறார். கவனிப்பு. டான்ஸ் மாஸ்டர் ஒரு முறை ஆடிக்காட்டினால் எது எத்தனை கடினமான ஸ்டெப்பாக இருந்தாலும் ஆடிவிடுவார்.
.
3. யாருடன் போட்டோ எடுத்தாலும் தோளோடு இருக அணைத்துக் கொண்டுதான் போட்டோ எடுத்துக் கொள்வார்.
.
4. படப்பிடிப்பில் யாருடனும் அதிகம் பேசமாட்டார் நடிக்கிற கேரக்டர் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருப்பார். மற்ற நேரங்களில் பாட்டு கேட்பார். புத்தகம் படிப்பார்.
.
5. விஜய்யுடன் அதிக படங்களில் காமெடியனாக நடித்தவர் சார்லி
.
6. வெற்றி, குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்க பூமி படங்களில் குழந்தை நட்சதிரமாக நடித்துள்ளார்.
.
7. ஹீரோவாக நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. முதல் ஹீரோயின் கீர்த்தனா.
.
8. விஜய்யின் ஆரம்ப கால படங்களின் ஹீரோயின் சங்கவி. இருவரும் இணைந்து நடித்த ரசிகன் படம் 175 நாட்கள் ஓடியது. விஜய்யின் முதல் வெள்ளிவிழா படம் அது.
.
9. குழந்தை நட்சத்திரமாக இருந்தவரை ஹீரோவாக்கியது நாளைய தீர்ப்பு. பிளேபாய் ஹீரோவாக நடித்தவரை செண்டிமென்ட் ஹீரோவாக்கியது காதலுக்கு மரியாதை. ஆக்ஷன் ஹீரோவாக்கியது பகவதி.
.
10. நடித்த மொத்த படங்கள் 56. அதிக நாள் ஓடிய படம் கில்லி. அதிக வசூலைக் கொடுத்த படம் துப்பாக்கி.
.
11. காதலுக்கு மரியாதை படத்தில் நடிததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார். அதோடு எம்.ஜி.ஆர்.விருதும், திருப்பாச்சி படத்துக்கு சிறப்பு விருதும், தமிழக அரசிடமிருந்து பெற்றார்.
.
12. ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு சண்டையோ, நடனமோ கற்றுக் கொண்டதில்லை. லயோலா கல்லூரியில் விஷ்காம் படித்து முடித்தார்.
.
13. ரசிகன் படத்தில் “பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி…” பாடலை முதன் முதலாக பாடினார். இசை தேவா. கடைசியாக ஜில்லாவில் “கண்டாங்கி கண்டாங்கி…” பாடினார் இசை டி.இமான். பாடிய மொத்த பாடல்கள் 23. அத்தனையும் ஹிட்.
.
14. இன்றைக்கு இந்தியில் டாப்பில் இருக்கும் பிரியங்கா சோப்ராவின் முதல் ஹீரோ விஜய். நடித்த படம் தமிழன். இவர்கள் தவிர பிபாசபாசு (சச்சின்), ஹாசல் கரொவ்னி (ஜில்லா), அமீஷா படேல் (புதிய கீதை), இலியானா (நண்பன்) ஆகிய பாலிவுட் நடிகைளும் ஜோடியாக நடித்துள்ளனர்.
.
15. விஜய் குழந்தை நட்சத்திரமா நடித்த முதல் படம் வெற்றி. அதற்காக வாங்கின சம்பளம் 500 ரூபாய். தற்போது நடித்து வரும் கத்தி படத்திற்கு வாங்கியிருப்பதாக சொல்லப்படும் சம்பளம் 15 கோடி.
.
16. சினிமாவில் நடிக்க வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் ஒரு முறை லட்டர் எழுதிவைத்து விட்டு சென்று விட்டார். பின்னர் தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
.
17. விஜய்க்கு பிடித்தது கவுண்டமணி காமெடியும், இளையராஜா பாடல்களும். காரில் இந்த இரண்டும் கட்டாயம் இருக்கும்.
.
18. நீண்ட தூரம் காரில் பயணம் செல்வது ரொம்ப பிடிக்கும். மனசு லேசாக வேண்டுமானால் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்.
.
19. அவருக்கு பிடிச்சது கருப்பு கலர் கார். கார்கள், கம்பெனிகள் நம்பர்கள் மாறினாலும் கருப்பு நிறம் மட்டும் மாறாது.
.
20. பொதுவாக எல்லோரையும் “வாங்கண்ணா” என்று அழைப்பார் ரொம்ப நெருக்கமானவர்களில் இளையவர்களை “வாடா ராஜா” என்றும் மூத்தவர்களை “வாங்க ராஜா” என்பார். கல்லூரி நண்பர்களை “மச்சி” என்று அழைப்பார்.
.
21. குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த அனைத்துமே சின்ன வயது விஜயகாந்த் கேரக்டர்கள்தான்.
.
22. எளிய உடைகளே விஜய்யின் பேவரிட். குறிப்பாக வெள்ளை சட்டையை விரும்பி அணிவார்.
.
23. தன்னை வைத்து படம் இயக்கி கஷ்டத்தில் இருக்கும் இயக்குனர்களுக்கு தலா 5 லட்சம் கொடுத்து உதவிய ஒரே நடிகர் விஜய்.
.
24. ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அம்மா அப்பாவை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்.
.
25. ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேளாங்கன்னி சென்று பிரார்த்தனை செய்து விட்டு வருவார்.
.
26. தங்கத்தில் நகைகள் அணியும் வழக்கம் இல்லை.
.
27. தனக்காக மட்டும் இல்லாமல் பிற நடிகர்களுக்காகவும் பின்னணி பாடியிருக்கிறார் பெரியண்ணா படத்தில் சூர்யாவுக்காகவும், வேலை படத்தில் விக்னேசுக்காவும் பாடியிருக்கிறார்.
.
28. அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில் ஹீரோவின் பெயர் விஜய் என்றே இருக்கும். அவரது இயக்கத்தில் அதிக படங்களில் நடித்தவர் விஜயகாந்த், அவர் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளருக்கும் விஜய் ஆண்டனி என்றே பெயர் வைத்தார். அந்த அளவிற்கு மகன் மீது அப்பாவுக்கு பாசம்.
.
29. விஜய் படங்களுக்கு சம்பளம் வாங்காமல் காஸ்ட்டியூம் டிசைனராக வேலை பார்ப்பவர் மனைவி சங்கீதா
.
30. விஜய்க்கு இப்போது வீடியோ கேம் என்றால் உயிர். அவருக்கு வீடியோ கேம்களை கற்றுக் கொடுத்தது மகன் சஞ்சய்.
.
31. உலகம் முழுவதும் சுற்றினாலும் சென்னைக்கு அடுத்து விஜய்க்கு பிடித்த ஊர் லண்டன். காதல் மனைவி கிடைத்த ஊர் என்பதால் மட்டுமல்ல, லண்டனின் தூய்மைக்கு அவர் அடிமை.
.
32. குழந்தைகள் சஞ்சய், சாஷா என்றால் விஜய்க்கு உயிர். அவர்களின் மழலை கால பேச்சுக்களை ஆடியோவில் பதிவு செய்து வைத்திருக்கிறார். குழந்தைகளின் ஒவ்வொரு பிறந்த நாளையும் வீடியோவாக எடுத்து அதன் கலெக்ஷன்களை சேர்த்து வருகிறார்.
.
33. எளிதில் உணர்ச்சி வசப்படாத விஜய் அம்மாவுடன் ஒரு விளம்பரபடத்தில் நடித்தபோது ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டார்.
.
34. தமிழ் நாட்டில் ரசிகர் மன்றங்களை அமைப்பு ரீதியாக பலமாக வைத்திருப்பது விஜய்தான். சென்னையில் இருந்தால் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைய ரசிகர்களை சந்திக்க ஒதுக்குகிறார்.
.
35. அழகிய தமிழ் மகன் படத்துக்கு பிறகு கத்தி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
.
36. நேருக்கு நேர், பிரண்ட்ஸ் படங்களில் சூர்யாவுடன் நடித்தார். அதன் பிறகு நண்பன் படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்தோடு நடித்தார்.
.
37. தெலுங்கு, இந்திப் படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டார். தமிழ் படங்களே போதும் என்பது அவரது கருத்து. ரவுடி ரத்தோர் படத்தில் பிரபு தேவா கேட்டுக் கொண்டதற்காக அக்ஷய் குமாருடன் ஒரு பாட்டுக்கு ஆடினார்
.
38. சூப்பர் ஸ்டார் ரஜினி வழியில் தனது உதவியாளர் பி.டி.செல்வகுமாரை தனது அடுத்த படத்தின் தயாரிப்பாளராக்கிவிட்டார்.
.
39. அதிகமான இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது விஜய்தான். பேரரசு, ஜெகன், எழில், செல்வா, பரதன், ரமணா, ஜான் மகேந்திரா, மாதேஷ், எஸ்.பி.ராஜ்குமார் உள்பட 22 பேர்.
.
40. விஜய் தன் பிறந்த நாளை எப்போதும் ஆடம்பரமாக கொண்டாடுவதில்லை தனது பிறந்த நாளை உதவும் நாளாக கொண்டாடுங்கள் என்று அறிவுறுத்துவார்.

திருவள்ளூரில் ஒரு “தாமஸ் ஆல்வா எடிசன்’!

புதிய கண்டுபிடிப்புகளால் உலக வரலாற்றில் புரட்சிகரமான மாற்றங்களை நிகழ்த்தியவர் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். இளம் வயதிலேயே அறிவியல் ஆர்வத்தால் அவர் பல சாதனைகளை நிகழ்த்தினார். அதேபோல, திருவள்ளூரில் உள்ள 9-ஆம் வகுப்பு மாணவர் வெங்கடேசன் எளிய முறையிலான பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறார். சிறிய பாட்டரிகள் மூலம் பூக் கட்டும் இயந்திரம், தெர்மாகோல் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட பயனுள்ள இயந்திரங்களை அவர் உருவாக்கி இருக்கிறார்.
திருவள்ளூரை அடுத்த மணவாள நகர், அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், மின் பணியாளர். இவரது மனைவி அருணா பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு பவித்ரா, வெங்கடேசன் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் வெங்கடேசன் பலத்த காயமடைந்தார். அப்போது அவர் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த விபத்தில் வெங்கடேசனின் இடது கால் உடைந்து ஓர் ஆண்டாக வீட்டிலேயே படுக்கையில் இருந்துள்ளார். அப்போது மனதளவிலும் வெங்கடேசன் பாதிக்கப்பட்டதை அவரது தந்தை ரமேஷ் அறிந்தார். அப்போது பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த நாசர் பெய்க்கைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து ரமேஷ் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து வெங்கடேசனிடம் நாசர் பெய்க் பேசினார். அப்போது மாணவரிடம் மின்சாதனங்கள் குறித்த அறிவியல் ஆர்வம் இருப்பது தெரியவந்தது.
அவரிடம் அறிவியல் தொடர்பான புத்தகங்களைக் கொடுத்து “நீ குணமாகி வரும் வரை இந்தப் புத்தகங்களைப் படித்து, அதில் இருந்து உன் மனதில் உருவாகும் படைப்புகள் குறித்து நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொள். நீ குணமான பின்னர் பல படைப்புகளை உருவாக்கலாம்’ என்று அவர் அறிவுறுத்தினார்.
ஓர் ஆண்டு கழித்து குணமான வெங்கடேசனை மீண்டும் பள்ளியிலும் அவர் சேர்த்து விட்டார். அதன்பின் பள்ளி நேரம் தவிர வீட்டில் இருக்கும் நேரத்தில் வெங்கடேசன் தனது படைப்புகளுக்கு உருவம் கொடுக்கத் தொடங்கினார்.
பூக் கட்டும் இயந்திரம்: தனது தாய் பூக் கட்டி விற்பனை செய்வதைப் பார்த்த வெங்கடேசன், முதலில் தாய்க்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் சிறிய பாட்டரிகளைக் கொண்டு பூ, மாலை கட்டும் இயந்திரத்தை உருவாக்கினார்.
சாதாரணமாக வேகமாக பூக் கட்டும் ஒருவர் ஒரு நாளுக்கு 20 மாலைகள் வரை கட்ட முடியும். ஆனால் இந்த இயந்திரம் மூலம் ஒரு நாளுக்கு 50 மாலைகள் வரை கட்டலாம். இந்த இயந்திரத்தில் பூமாலை கட்ட தனது தாய்க்குப் பயிற்சியும் அளித்துள்ளார். குறைந்த செலவில் தாற்காலிகமாகத் தயாரித்துள்ள இந்த இயந்திரத்தை தரமான நிரந்தர இயந்திரமாகத் தயாரிக்க ரூ. 1,000 மட்டும் போதும் என்று வெங்கடேசன் கூறுகிறார்.
தெர்மாகோலில் வெட்டும் இயந்திரம்: திருமண மண்டபம், அலுவலகங்களில் விழாக்களின் போது அலங்கரிக்க, தெர்மாகோல் எனப்படும் தக்கைப் பஞ்சை பிளேடால் வெட்டுகின்றனர். அப்படி வெட்டும்போது அதில் இருந்து பறக்கும் பஞ்சுத் துகள்களை சுவாசித்தால் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு ஏற்படும். அதைத் தடுக்க மெல்லிய கம்பியை சூடாக்கி அந்த சூட்டினால் தெர்மாகோலை வெட்டும் இயந்திரத்தை வெங்கடேசன் உருவாக்கியுள்ளார். இதன்மூலம் வெட்டும்போது துகள்கள் வராது. மேலும் தெர்மாகோல் வடிவமும் பார்ப்பதற்கு ஒழுங்காக இருக்கும். நேரமும் மிச்சமாகும் என்கிறார்.
நீர்மட்டம் அறியும் கருவி: சிறிய பாட்டரியில் இரு கம்பிகளை இணைத்து அதன் முனையில் ஆணி போன்ற ஓர் இரும்புத் துண்டை இணைத்துள்ளார். அந்த இரும்புத் துண்டை நமது வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளில் நிரம்பும் மட்டத்தில் வைத்து விட்டு, பெட்டியில் பாட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒலிப்பான் பொருத்தப்பட்ட அதன் மற்றொரு முனையை நமது சமையல் அறையிலோ அல்லது வீடுகளில் நாம் அதிகமாக இருக்கும் இடத்திலோ பொருத்தி விட வேண்டும். தொட்டியில் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பும் நிலைக்கு வரும்போது, அந்த இரும்புத் துண்டில் தண்ணீர் பட்டால் கீழே உள்ள சிறிய பெட்டியில் அலாரம் ஒலிக்கும். இதன்மூலம் தண்ணீர்த் தொட்டி நிரம்பி வழிந்து வீணாவதைத் தடுக்கலாம். ஆழ்துளைக் கிணறுகளில் இந்த வயரை உள்ளே விடும்போது நீர்மட்டத்தின் ஆழத்தையும் பஸ்ஸர் ஒலி மூலம் அறிய முடியும்.
காந்தம் மூலம் விபத்துத் தடுப்பு முறை: வாகனங்களின் முகப்புகளில் காந்தங்களைப் பொருத்தி அதில் செம்புக் கம்பியை இணைத்து அதற்காக தனியே ஒரு பட்டனை காருக்குள் பொருத்தினால் விபத்து நேரும் நிலையில் அவசரக் காலத்தில் விபத்தைத் தவிர்க்க முடியும். இத்தகைய வடிவமைப்பை பொம்மை காரில் தயாரித்து வைத்துள்ளார்.
இதுபோன்ற உபயோகமான மின்சாதனப் பொருள்களை குறைந்த செலவில் உருவாக்கும் முயற்சி குறித்து மாணவர் வெங்கடேசனிடம் கேட்டபோது அவர் கூறியது:
எனது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். தாய் பூக் கட்டும் தொழில் செய்து வருகிறார். இதுபோல சிறிய அளவில் தொழில் செய்யும் நபர்களுக்கு குறைந்த செலவில் இயந்திரங்களை வழங்கினால் அவர்களது உழைப்பும், நேரமும் மிச்சமாகும். வருங்காலத்தில், மறைந்த அப்துல் கலாம் போல் நானும் ஒரு விஞ்ஞானியாகவே விருப்பம் என்றார்.