பி.வி.சிந்துவின் பெரிய ரசிகராக மாறிவிட்டேன்: ரஜினிகாந்த்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் சிந்துவுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.
மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்ணை என்ற புதிய வரலாறு படைத்தார் சிந்து. வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
சிந்துவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’பி.வி.சிந்துவின் பெரிய ரசிகராக மாறிவிட்டேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.