ராஜேஷ் வெட்டி சிந்தனைகள்.. சிரிக்க மட்டும்

மொபைல் திருடர்கள் ஜாக்கிரதை. இந்தத் திருடர்கள்  ‘துப்பாக்கி’ பட ஸ்லீப்பர் செல்களை விட நம்பகத்தன்மையுடன் நம்மால் கண்டுபிடிக்க முடியாதபடி நம்முடனே இருப்பார்கள். சர்க்கரையை எந்த ஜாடியில் போட்டு எத்தனை மூடி போட்டு வைத்தாலும் அதைக் கண்டுபிடித்து தேடிப் போகும் எறும்புகளைப் போல தலையணைக்கு அடியில், பீரோவின் பிடியில், அலமாரியின் மடியில் என எங்கு மொபைல் போனை ஒளித்து வைத்தாலும் நொடியில் கண்டுபிடித்து விடுவார்கள்.

இந்த திருடர்களுக்கு மொபைலைக் களவாட விருப்பமில்லை, அதில் விளையாடத்தான் விருப்பம். அந்தத் தித்திப்பு திருடர்கள் வேறு யாருமில்லை. நம்ம வீட்டு சுட்டிக் குட்டிகள்தான். உலகத்தில் கஷ்டமான விஷயம் குழந்தைக்கு சோறு ஊட்டுவது. அதற்குப் பிறகு கஷ்டமான விஷயம்னா அது குழந்தை கைல இருக்கிற மொபைல் போனை வாங்குறது.

குறுகலான திருப்பத்துல வேகமா போற வேனும், குழந்தைங்க கைல சிக்குன போனும் கரெக்டா திரும்பி வந்ததா சரித்திரமே இல்லை. நமக்குத் தெரியாம போனை எடுத்து கேம் விளையாடுறவங்க கேடி பில்லான்னா, அதை நாம கண்டுபிடிக்க முடியாதபடி சைலன்ட்ல போட்டு விளையாடுறவங்க கில்லாடி ரங்கா வகையினர்.

‘தனி ஒருவன்’ அரவிந்த்சாமி ஸ்டைல்ல சொல்லணும்னா, ‘‘எப்பவுமே அவங்ககிட்ட மொபைல கொடுக்காம தப்பிக்க அந்த ஆண்டவனால கூட முடியாது’’. அதே ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவி மாதிரி சொல்லணும்னா, ‘‘எப்பவுமே மொபைல ஒளிச்சு வைக்கவே போறவங்க நாம, எப்பவுமே ஒளிச்சு வச்ச மொபைல தேடிப் போறவங்க அவங்க.’’ தெரியாம எடுக்கிறது திருட்டுத்தனம்னா, நமக்குத் தெரியவே நம்மகிட்ட இருந்து போன வாங்க அவங்க யோசிக்கிற யுக்தி எல்லாம் தீவிரவாதத்தனம்.

ஒவ்வொரு அப்பாவையும் தல ஸ்டைல்ல ‘‘என் வாழ்க்கையில ஒவ்வொரு போனும், ஒவ்வொரு மொபைலும், என் புள்ளைங்க உடைச்சதால வாங்கினதுடா’’ன்னு புலம்ப வைக்கிறதே நம்மாளுங்கதான். டாக்கிங் டாம் பூனையோட இவங்க பேசிப் பேசி அதையே செவிடாக்கிடுவாங்க. டெம்பிள் ரன்ல ஓடி ஓடி துரத்துற கரடியவே டயர்டாக்குவாங்க.

ஒளிச்சு வச்ச போன எடுத்துட்டு அவங்க பார்க்கிற பார்வை கிண்டலா இருக்கும்னா, கேண்டி க்ரஷ்ல ஒரு ஸ்டேஜ் முடிச்சுட்டு அவங்க நம்மளப் பார்க்கிற பார்வைதான் படு நக்கலா இருக்கும். நாம குழந்தையா இருக்கிறப்ப, நம்ம கண்ல இருந்து மிட்டாயதான் ஒளிச்சு வைப்பாங்க, இப்ப குழந்தைங்க கண்ல இருந்து மொபைல ஒளிக்க வேண்டியதா இருக்கு.

நம்ம வருமான வரித்துறை அடிக்கடி  ஏன் பிரபலங்கள் வீட்டுக்கு ரெய்டு போய் செக் வைக்குது தெரியுமா? பிரபலங்கள் சரியா வரி கட்டுறாங்க, அவங்களை விளம்பரம் முதல் வாழ்க்கை வரை பின்பற்றும் ரசிகர்களும் தொண்டர்களும் அவர்களைப் போலவே வரி கட்டணும்னு காட்டத்தான். சரி, சப்போஸ் இவங்க வீட்டில் எல்லாம் ரெய்டு நடந்தா என்னென்ன கிடைக்கும்னு பார்ப்போம்…

கிராமராஜன் – அரை டவுசர்கள் 38, கால் டவுசர்கள் 58, பால் கறக்கும் படி 65இயக்குனர் டிங்கர் – ஊருல பாக்கு துப்புறவங்க, அசுத்தம் செய்யறவங்க, சிக்னல் மதிக்காதவங்க லிஸ்ட்கள் தமிழிசை சவுண்ட்ராஜன் – fill பண்ணாத 6 கோடி உறுப்பினர் அட்டைகள்எச்.கூஜா – ‘30 நாளில் இந்தி கற்றுக்கொள்வது எப்படி?’ புத்தகங்கள் 12000கஜித் – கோட்டுகள் 4525, கூலிங்கிளாஸ்கள் 5475, சூட்டுகள் 5464, சுருட்டுகள் 5648குஜய் – ரவுடிகளை அழிக்க ஊரிலிருந்து சென்னைக்கு வரும்போது கொண்டு வரும் மஞ்சப்பை 2535அண்ணன் மைக்கோ – ‘மூட்டு வலிக்கு மூலிகை வைத்தியங்கள்’ புத்தகமும் 300 வகை மூலிகை செடிகளும்
தா.போண்டியன் – கிடைக்கும் கூட்டணியை பலமாக ஒட்ட ஓராயிரம் டப்பா ஃபெவிகால்
குருமாவளவன் – தான் எங்கே இருக்கிறோம் எனக் கண்டறிந்து சொல்லும் 234 GPS கருவிகள்
நரேந்திர மூடி – தீபாவளிக்கு இப்பவே தைத்து வைக்கப்பட்ட குர்தாக்கள் 134125
நடிகை குயின்தாரா – எழுதப்பட்ட லவ் லெட்டர்கள் 1242552, எழுதிய லவ் லெட்டர்கள் 2142513
இயக்குநர் கரி – ஆயிரம் அருவாள்கள், நூற்றி சொச்ச டாடா சுமோக்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள்
நாஞ்சில் சர்பத்  – இன்னோவா வாட்டர் சர்வீஸ் பில்கள், பழைய டயர்கள்
தோழர் பூமான் – துவைக்காத கறுப்பு டி ஷர்ட்டுகளும் இதுவரை தண்ணீரில் நனைக்காத கறுப்பு பேன்ட்டுகளும்
நடிகர் வம்பு – ஒரு டாரஸ் லாரியில் ஏற்றுமளவு காதல் கிஃப்டுகள்
இளங்கோபன் – வெண்கலபாலு தோற்றத்தில் எரிக்கப் பயன்படும் ஆயிரம் கொடும்பாவி பொம்மைகள்
விஜய.டி.லாந்தர் – 4 டன் கிளிசரின் பாட்டில்களும் 3300 தலை சீவும் சீப்புகளும்
ஜி.கே.தாசன் – பழைய சைக்கிள்களும் பஞ்சர் ஒட்ட பயன்படும் டியூப்களும்
நடிகை புஷ்கூ – ஜாக்கெட்டுக்கு வைக்க வேண்டிய ஜன்னல்களும்
கதவுகளும்
சுப்ரீம்குமார் – புது தம்பள்ஸும் பழைய இரும்புக்குப் போட்ட பேரீச்சம் பழங்களும்
நடிகர் குசால் – நடிகர் சங்க கணக்கு எழுதி வைக்க ரெண்டு டாடா ஏஸ் நிரம்பு மளவு கணக்கு நோட்டுகள்
கேப்டன் – ஞாபகமறதியைப் போக்கும் வல்லாரைக் கீரை லேகிய டப்பாக்கள்
நவகார்த்திகேயன் – புல்லட் புரூப்களும் உடம்பில் சொருகும் இடிதாங்கிகளும்
வம்புமணி – பாஸ் என்கிற பாஸ்கரன் எழுதிய ‘மது விலக்கும் மண்ணெண்ணெய் விளக்கும்’ தூய தமிழ்க் கவிதைத் தொகுப்புகள்
காமெடி நடிகர் பூரி – செல்போன் வந்த காலத்திலிருந்து இன்று வரை வந்த எஸ்.எம்.எஸ் ஜோக்குகள் அடங்கிய சிடிகள்
நடிகை சுமிதா – 2 டன் பழைய ஜீன்ஸ்களும் பத்தாத பாவாடை சட்டைகளும்

கடுப்ப கிளப்பும் நண்பன் எவனாவது இனி கண்ணுலயே படக்கூடாதுன்னா, அவன் ஃபிரண்ட்ஷிப்ப கட் பண்ணி கழட்டி விடணும்னா நாம செய்ய வேண்டியவை.
முதல் முயற்சி, ‘சாமி, உன் சங்காத்தமே வேணாம், காத்து வரட்டும் கிளம்பு’ன்னு கையெடுத்து கெஞ்சி கட் பண்ணலாம். அது பலிக்காத பட்சத்தில், ஏதாவது ஒரு இத்துப்போன காரணத்தை வைத்து அவனைக் கண்டபடி திட்டி, அவன் நட்பை அத்து விடலாம்.

அவனுக்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் இருந்தா, ‘அதை நானும் கணக்கு பண்றேன்’னு சொல்லி பயங்காட்டி கழட்டி விடலாம். நாம போற இடத்துக்கு வரச் சொல்லி, நாம போகாம காக்க வச்சு கடுப்பேத்தி கழண்டுக்க வைக்கலாம். நண்பர்கள் கூடும் இடத்தில, கழட்டிவிட வேண்டியவனை மட்டுமே கலாய்த்து வெறுப்பேத்தலாம். எல்லா ட்ரீட்டிலும் அவனையே பில் கொடுக்கும்படி ஏற்பாடு செய்து கழண்டுக்க வைக்கலாம். இது எல்லாத்தையும் விட, அவன் கடன் கேட்கும்போதோ, காசுக்கு வெயிட் பண்ணும்போதோ, வாலன்டரியா கடன் கொடுத்தால் போதும்… அதுக்குப் பிறகு அவன் நம்ம கண்ணுல தட்டுப்படவே மாட்டான்!

புரட்டாசிகளும்
தமிழக அம்மாக்களும்…

2003: அடுத்த மாசம் புரட்டாசி, அதனால இப்ப இருந்தே மட்டன், சிக்கன் சாப்பிடாம இருக்கணும்!
2005: புரட்டாசி மாசம் நான்வெஜ் சாப்பிடக் கூடாது. அதனால, வீட்டுலயும் கிடையாது. வெளிலயும் சாப்பிடக் கூடாது
2007: டேய், நம்ம வீட்டுல யாரும் நான்வெஜ் சாப்பிட மாட்டோம். நீ எங்கேயாவது சாப்பிட்டு வந்தன்னு தெரிஞ்சா, அடி வெளுத்துடுவேன்.
2009: ஏன்டா, நான்வெஜ் சாப்பிட்டுட்டு வந்தியா? அதெல்லாம் கூடாதுடா கண்ணா, தப்புடா!
2011: தம்பி, நான்வெஜ் சாப்பிடு! ஆனா வீட்ல வாங்கிட்டு வந்து சாப்பிடாத, இது புரட்டாசி மாசம்டா!
2013: டேய், வீட்ல வாங்கிட்டு வந்து நான்வெஜ் சாப்பிட்டா, அதை ஒழுங்கா கவர்ல மடிச்சு குப்பைக் கூடையில போடு!
2015: உனக்காக மட்டன் செஞ்சேன். கிச்சன்லயே சாப்பிடணும், வெளிய எடுத்துக்கிட்டு வந்து ஆடாத!

அலட்சிய அரசு அவதியில் மக்கள்  போலீஸின் இருள்முகம்

திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியாவின் மரணமும், அவரது தோழியும் கீழக்கரை டி.எஸ்.பியுமான மகேஸ்வரியின் குமுறலும், இதன் தொடர்ச்சியாக வெளி வந்துகொண்டிருக்கிற செய்திகளும், காவல்துறையின் தடுமாற்றங்களும், அரசின் மௌனமும் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.

வரும் புகார்களைப் பதிவு செய்வதில்லை; புகார் தர வருபவர்களை மரியாதையாக நடத்துவதில்லை; அலைய விடுகிறார்கள்; குற்றம் சாட்டப்பட்ட, புகார் தர வருகிற பெண்களை தரக்குறைவாகப் பேசுகிறார்கள்; காவல் நிலையங்களில் மனித உரிமை மீறப்படுகிறது என்றெல்லாம் காவல்துறை மீது புகார்கள் உண்டு.

அண்மைக்காலமாக காவல்துறைக்குள் பணியாற்றும் பெண்களே – அவர்கள் எவ்வளவு உயர் பொறுப்பில் இருந்தாலும் – அவமரியாதையையும், நெருக்கடிகளையும், கொடுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது. அதை உண்மையாக்குகின்றன அண்மைக்காலச் செய்திகள்.

காவல்துறையின் செயல்பாடுகளை தொடர்ச்சியாக கவனித்து ஆய்வுசெய்து வரும் மனித உரிமை ஆர்வலர்களும் இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறார்கள்.
பெண்களிடம் வாக்குமூலம் வாங்குதல், கைது  செய்தல், தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்தல் போன்ற பணிகளை ஆண்களே  செய்வதில் இருந்த சிக்கல்கள், உரிமை மீறல்களைக் களைய 1972ல் காவல்துறையில் பெண்கள் சேர்க்கப்பட்டார்கள்.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் 1 எஸ்.ஐ., 7 காவலர்கள்  அடங்கிய பெண் போலீஸ் பிரிவு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. பிறகு, மெல்ல மெல்ல பெண் காவலர்களின் எண்ணிக்கை அதிகமானது.  காலப்போக்கில் அதிகாரிகள் மட்டத்திலும் பெண்கள் உள்நுழைந்தார்கள். பிறகு, மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டன.

1981ல் நேரடியாக 125 பெண் எஸ்.ஐ.கள் தேர்வு செய்யப்பட்டார்கள். பந்தோபஸ்து, கைது உள்ளிட்ட சகல பணிகளிலும்  அவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். 87க்குப் பிறகு, ‘போலீஸ் தேர்விலேயே பெண்களுக்கு குறிப்பிட்ட பங்களிப்பு வேண்டும்’ என்ற  விதிமுறை கொண்டு வரப்பட்டது. அதன்படி, ‘எஸ்.ஐ. பணி மற்றும் அதற்குக் கீழான காவலர் தேர்வில் 100 போலீஸார் தேர்வு  செய்யப்பட்டால், கண்டிப்பாக 30 போலீஸார் பெண்களாகவே தேர்வு செய்யப்பட வேண்டும்.

டி.எஸ்.பி பணிக்கு மேல் உள்ள பதவிகளுக்கு திறமை அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம். 10 பேரில் 6 பெண்கள்  திறமையானவர்களாக இருந்தால் 6 பேரையும் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்ற நியதி வகுக்கப்பட்டது. (தற்போது இந்த விதிமுறை மாற்றப்பட்டு விட்டது. புதிதாகப் பெண்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. காலியாகும் இடங்களுக்கு மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.)

மிடுக்கும், மரியாதையும் நிறைந்த காவல்துறைப் பணியை பெண்கள் பெரிதும் விரும்பினார்கள்; விரும்புகிறார்கள். ஆனால், ஆர்வத்தோடு பணியில் இணையும் பெண்கள் பெரும் மன உளைச்சலையும் வெளியில் சொல்ல முடியாத அவஸ்தைகளையும் எதிர்கொள்வதாகச் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

‘‘பிற எல்லாத் துறைகளை விடவும் காவல்துறையில் பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் அதிகம் என்கின்றன ஆய்வுகள். பெண்களுக்கே உரித்தான இயல்பான தேவைகளுக்கு எந்த உள்கட்டமைப்பும் காவல்துறையில் இல்லை. தவிர அவர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளும் அதிகாரிகளும் கூட குறைவாகவே இருக்கிறார்கள். பந்தோபஸ்துக்காக, விசாரணைக்காக, கைது நடவடிக்கைகளுக்காக, கலவரத்  தடுப்புக்காக என பெண்கள் பல இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். செல்லும் இடங்கள் அனைத்திலும் அவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. உதாரணத்துக்கு, முதல்வர்  செல்லும் பாதையில் பந்தோபஸ்துக்காக நிறைய பெண் காவலர்கள் அனுப்பப்படுகிறார்கள். குறிப்பிட்ட தூரத்துக்கு ஒருவர் என்ற  அடிப்படையில் இவர்கள் நிற்க வேண்டும்.

முதல்வர் கிளம்புவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பிருந்து பாதுகாப்புப் பணியில்  ஈடுபட வேண்டும். முதல்வர் 10 மணிக்குக் கிளம்புகிறார் என்றால், இவர்கள் நான்கரை மணிக்கு எழுந்து, 5 மணிக்கு கன்ட்ரோல்  ரூமில் அசெம்பிள் ஆகி, ரோல்கால் எடுத்து, 7 மணிக்கு தங்களுக்கான இடத்தில் நின்றுவிட வேண்டும். முதல்வர் பத்தரை  மணிக்கு அந்த இடத்தைக் கடந்தால், அவர் தலைமைச் செயலகத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பும்வரை அங்கேயே இருக்க  வேண்டும்.

முதல்வர் 2 மணிக்கு வீட்டுக்குத் திரும்புவார். ஒருவேளை மீண்டும் தலைமைச் செயலகம் வருவார் என்றால்,  வந்து திரும்பும் வரை, திரும்பவும் அதே இடம்தான். அங்கேயேதான் சாப்பாடு. டியூட்டி முடிந்து சென்றால் திரும்பவும் காலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். பணியில் இருக்கும் இடைப்பட்ட நேரத்தில்,  சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் அவர்கள் எங்கே செல்வார்கள்? வயிற்று வலி என்றால் கூட கேட்க ஆளிருக்காது. மாதவிடாய்  காலம் என்றால் அந்த அவஸ்தையை சொல்லவே முடியாது. இந்தமாதிரி அவஸ்தைகளைத் தவிர்ப்பதற்காக தண்ணீரே குடிப்பதில்லை என்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை. பெண் முதல்வர் ஆளும் மாநிலம் இது… இதுபற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

‘முட்டாள்’, ‘யூஸ்லெஸ்’… இதெல்லாம் பெண் காவலர்கள், அதிகாரிகளுக்கு மேலதிகாரிகள் தருகிற பட்டங்கள். உருவத்தை கிண்டல் செய்வது; பட்டப்பெயர் வைத்து அழைப்பது; நடத்தையைத் தவறாகச் சித்தரிப்பது என பெண் காவலர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். பெண் அதிகாரிகளை ‘ஒண்ணும் தெரியாது’ என்று ஒதுக்கியே வைக்கிறார்கள்.

இதுவரை உள்ளரங்குகளில் நடந்த இந்த அவலங்கள் விஷ்ணுப்பிரியாவின் தற்கொலை வாயிலாக வெளியே வந்திருக்கின்றன. சக காவல்துறை அதிகாரி மகேஸ்வரி அதற்கு சாட்சியாக இருக்கிறார்…’’ என்று வெடிக்கிறார் சமூக செயற்பாட்டாளரும் ‘எவிடென்ஸ்’ அமைப்பின் நிறுவனருமான கதிர்.

காவல்துறையில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 895. இதில் 12 ஆயிரம் பேர் பெண்கள். பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தகுந்த குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் வலியுறுத்தி இருக்கிறது.

ஆனால் நீதியைக் காக்க வேண்டிய காவல்துறையில் அப்படியான குழுக்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. முன்பு திலகவதி ஐ.பி.எஸ். தலைமையில் பெண் காவலர்கள் நலன்காக்கும் துறை உருவாக்கப்பட்டது. அவர் மாற்றப்பட்ட பிறகு அத்துறை செயலிழந்து விட்டது.

காவல்துறைக்குள் இருக்கும் பெண்களுக்கு இப்படியான நெருக்கடி என்றால் காவல்நிலையத்துக்கு புகார் தருவதற்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி வேறு மாதிரி. அதுபற்றியும் விரிவாகப் பேசுகிறார் கதிர்.‘‘காவல்துறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

அப்படியான நம்பிக்கை இப்போது பொய்த்துவிட்டது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண மக்கள் காவல்நிலையத்திற்குச் செல்லவே அஞ்சுகிறார்கள். அங்கே போய் அசிங்கப்படுவதற்குப் பதிலாக எதிரியோடு சமாதானமாகி விடலாம் என்ற மனநிலை வந்துவிட்டது. அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பலவும் கட்டப் பஞ்சாயத்து நிலையங்களாக மாற்றப்பட்டு விட்டன. முன்பெல்லாம் ஆண் காவலர்கள் பெண்களை விசாரிக்கக்கூட மாட்டார்கள்.

இப்போது ஆண் காவலர்கள் பெண்களைத் தாக்கவே செய்கிறார்கள். காவலர்களால் அடித்து வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பல பெண்களின் பிரச்னைகளை நான் கையாண்டதுண்டு. பரிந்துரை இல்லாமல் கொண்டு வரப்படும் எந்தப் புகாரையும் பெற்றுக் கொள்வதேயில்லை. பெரும்பாலான காவல்நிலையங்களில் செயின் அறுப்பு சம்பவங்கள், திருட்டு வழக்குகளைப் பதிவு செய்வதும் இல்லை. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு பெண்களின் பல வழக்குகள் பதிவு செய்யப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு எங்களைப் போன்றவர்கள் தலையிட்ட பிறகு பதிவு செய்யப்படுகிறது.

காவல்துறையின் இதுபோன்ற செயல்பாடுகள் ஏதோவொரு வகையில் குற்றவாளிகளுக்கு சாதகமாகி விடுகிறது. 2011ல் தமிழகத்தில் பதிவான பாலியல் வன்முறை வழக்குகள் 677. அதுவே 2014ல் 1565. காரணம், நடவடிக்கையில் ஏற்பட்ட தொய்வு. இந்த 1565 வழக்குகளில் 1110 வழக்குகள் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதானவை.

பெண்கள் சார்ந்து சராசரியாக வருடத்துக்கு 7000 வழக்குகள் பதிவாகின்றன. இதில் 1800 முதல் 2000 வரை கொலை வழக்குகள். ஆண்கள் கொலை செய்யப்படும் வழக்குகளில் 40% குற்றவாளிகள் தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.

இதுவே பெண்கள் தொடர்பான வழக்கில் வெறும் 15% குற்றவாளி களே தண்டனைக்கு உள்ளாகிறார்கள். 85% குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள். காவல்துறை பெண்கள் விஷயத்தில் காட்டும் அக்கறைக்கு இதுதான் உதாரணம்…’’ என்கிறார் கதிர். கதிரின் குரலையே எதிரொலிக்கிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ.

‘‘இதுநாள் வரை அடிமட்டக் காவலர்கள்தான் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள் என்று நினைத்தோம். டி.எஸ்.பி போன்ற உயர் பொறுப்புகளில் உள்ள பெண்களும் காவல்துறையில் தாக்குப்பிடிக்க முடியாத நிலை இருப்பது இப்போது வெளிச்சமாகியிருக்கிறது. எந்தப் பதவியில் இருந்தாலும் ‘பெண்தானே’ என்ற இளக்காரம் எல்லா மட்டத்திலும் புரையோடிக் கிடக்கிறது. இந்த எண்ணம் பிற துறைகளைவிட காவல்துறையில் அதிகமாக இருக்கிறது. ஆண் அதிகாரிகளுக்கு கிடைக்கும் மரியாதையில் கால் பங்குகூட பெண் அதிகாரிகளுக்குக் கிடைப்பதில்லை.

அண்ைமயில் ஒரு காவல்துறை அதிகாரி ஒரு பெண் தலைமைக் காவலரிடம் பேசிய பேச்சு வாட்ஸ்அப்பில் வெளியானது. பேசிய அந்த அதிகாரி, அத்துறையிலிருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டதோடு சரி… அவர் மீது வேறெந்த நடவடிக்கையும் இல்லை. காவல்துறையிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. புகார் கொடுக்க வருகிற பெண்களுக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலைதான் இருக்கிறது…’’ என்கிறார் சிவ.இளங்கோ. இந்த அவலம் மாறுமா..?

‘முட்டாள்’, ‘யூஸ்லெஸ்’… இதெல்லாம் பெண் காவலர்கள், அதிகாரிகளுக்கு மேலதிகாரிகள்
தருகிற பட்டங்கள்.

முன்பெல்லாம் ஆண் காவலர்கள் பெண்களை விசாரிக்கக்கூட மாட்டார்கள். இப்போது ஆண் காவலர்கள் பெண்களைத் தாக்கவே செய்கிறார்கள். 2011ல் தமிழகத்தில் பதிவான பாலியல் வன்முறை வழக்குகள் 677. அதுவே 2014ல் 1565. காரணம், நடவடிக்கையில் ஏற்பட்ட தொய்வு.

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணங்கள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணங்கள்:-
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.
இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.
மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.
இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

அன்பு

ஒரு நாள் மாலையில் நடைப் பயிற்சியைமுடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர்

வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் ஒன்று

இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும்

வேகமாக நடக்கத் தொடங்கினர்.

திடீரென மழைச் சாரலும் வீசியது.

வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்

ஓடத்தொடங்கினர். கணவர் வேகமாக

ஓடினார். கயிற்றுப் பாலத்தை கணவன்

கடந்து முடிக்கும் போது தான் மனைவி

பாலத்தினை வந்தடைந்தார்.

மழைச்சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து

வந்ததால் மனைவி பாலத்தை கடக்க

பயப்பட்டாள். அதோடு, மின்னலும்

இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின்

ஒரு பக்கத்தில் நின்று கணவனை

துணைக்கு அழைத்தால்.

இருட்டில் எதுவும் தெரியவில்லை.

மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின்

மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது

தெரிந்தது.

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு

கணவனை அழைத்தாள்., கணவன்

திரும்பிப் பார்க்கவில்லை.

அவளுக்கு அழுகையாய் வந்தது…

இப்படி பயந்து அழைக்கிறேன்.

என்ன மனிதர் இவர்?? திரும்பி கூட

பார்க்கவில்லையே… என, மிகவும்

வருந்தினாள். மிகவும் பயந்து கொண்டே

கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம்

பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை

கடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு

இக்கட்டான நிலமையில் கூட உதவி

செய்யாத கணவனை நினைத்து

வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்.

கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம்

உடைந்து தொங்கிக்கொண்டிருந்த

கயிற்றுப்பாலத்தை தாங்கிப் பிடித்துக்

கொண்டிருந்தார்…. அதை பார்த்த அவள்,

கண்களில் கண்ணீர் வடிய கணவரை

கட்டியணைத்தாள்!!!

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு எதுவும்

செய்யாமல் மௌனமாக இருப்பதாக தோன்றும்.

ஆனால்,.உண்மையிலேயே அவர் தன்

குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்

கொண்டுதான் இருப்பார். தூரத்தில் பார்க்கும்

போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும்

அருகில் சென்று பார்க்கும் போது தான்

அவரின் அன்பு தெரியவரும்…..

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.

தூரத்தில் இருப்பது தெளிவாக

தெரிந்தாலும், அருகில் வரும்போது மட்டுமே

பொருள் புரிகிறது!!!

உண்மையான அன்போடும், நிலையான

நம்பிக்கையோடும் வாழ்க்கையை

நடத்துங்கள்….. இனிக்கும்!

மையல்- கவிதைதழல் மேனியுடைய ஒருத்தி
குனிந்து  சலங்கை அணிந்து
நடனத்திற்குத் தயாராகும் நிலையை
அதிகாலையிலேயே நினைத்துக்கொண்ட
சித்திரம் வரையும் ஒருவன்
இசையையும்  தாளத்தையும்
அதன் வல்லின மெல்லினங்களையும்  வாங்கி
உயிர்த்தெழும் அவளின் பாதங்களை
வரையத் தொடங்கினான்
ஆடலில் மெய்மறந்த
விழிகளுடன் இருக்குமவளின்

உயிர்த்த பாதங்களிலிருந்து
ஒலிக்கும் சொற்களில்
யாவருமே கிறங்கியிருப்பதாக
இறுமாந்திருந்தாள் அவள்
தாளக்கூறுகளின் விசித்திரக்கூர்மையில்
அசையும் அவள் உடலையும்
அதன் நெளிவுகளின் குழைவையும்
மனதில் ஏந்தியபடி
செஞ்சாந்துக் குழம்பிட்ட
அவளின் பாதங்களை வரைந்து முடிக்கையில்
பாதி மூடிய விழிகளுடையவள்
அவனிடத்தில் வசியப்பட்டிருப்பதாக
நினைத்துக்கொண்டான் அவன்.

புலி விமர்சனம்

வேதாளக் கோட்டைக்கே போய் எதிரிகளைப் பந்தாடும் விஜய்யின் வீரதீர ‘புலி’. ஆக்‌ஷன், அதிரடி, ஃபேன்டஸி, காதல் எனப் பட்டை தீட்டிய விஜய்யின் அடுத்த கமர்ஷியல்!வேதாளக் கோட்டைக்கு ராணியாக இருக்கிறார் ஸ்ரீ தேவி.

அவரது நம்பிக்கைக்குரிய அடுத்த கட்ட தளபதி சுதீப், ராணியை மந்திரத்தால் தன் கட்டுப்பாட்டில் வைத்து கொடுங்கோலாட்சி செய்கிறார். கொடூரங்களுக்கு முடிவு வேண்டுமல்லவா! அணுக முடியாத அந்த வேதாளக்கோட்டைக்கு அதற்காகவே அதிரடிப் பயணம் போகிறார் விஜய். வேதாள வீரர்களால் கடத்தப்பட்ட மனைவி ஸ்ருதி ஹாசனை மீட்டாரா? தளபதியிடமிருந்து ராணியை விடுவித்தாரா? நாட்டில் நல்லாட்சி மலர்ந்ததா? அது க்ளைமேக்ஸ்.

பரபரப்பாக காட்சிகளை அடுக்கியதற்கு இயக்குநர் சிம்புதேவனுக்கு தேங்க்ஸ். ஃபேன்டஸி கதையில் முன்பின் பார்த்திராத அளவில் கச்சிதமாகப் பொருந்துகிறார் விஜய். ஆற்று வெள்ளத்தில் பிறந்த குழந்தையாக விஜய் வருவதிலிருந்து சிம்புதேவனின் ஃபேன்டஸி உலகம் விரிகிறது. பழகிய கதை என்றாலும் எல்லா ஏரியாக்களையும்…

முக்கியமாக, குழந்தைகளை மயக்குகிற விஷயங்களைத் தெளிவாகத் தெளித்திருக்கிறார். ராஜா காலத்து உடையும், நடையும், சுறுசுறுப்பும் பக்கா. சந்தேகமே இல்லாமல் விஜய்யின் கேரியரில் ‘புலி’ ஒரு முக்கியமான படம். வைரநல்லூரின் மக்களை தன் பக்கம் வைத்திருப்பதிலிருந்து, ஸ்ருதி ஹாசனை காதலில் இழுப்பது வரையிலும் எல்லாமே பியூட்டிஃபுல் விஜய்! மக்களுக்காக போராடி வேதாளக்கோட்டைக்கே சென்று பார்க்கிற துணிவிலும் கனிவுப் பார்வையிலும் தற்காப்புக் கலை சண்டைகளிலும் விஜய் சர்ப்ரைஸ் சந்தோஷம்!

பேசும் கிளி, குள்ள மனிதர்கள், வேதாளக் கோட்டைக்கு வழி சொல்லும் ஆமை, அகல ஆறு தாண்டி பயணப்படும் பாதை, விரிந்த சோலை, மகா உயரக் கோட்டை கொத்தளங்கள் என அகலக்கண் விரிக்க  வைக்கிறார்கள். குழந்தைகளின் ஏரியாவிலேயே கதை அமைத்து, ஆக்‌ஷனில் ரசிகர்களுக்கு நிறைவூட்டி விளையாடியிருக்கிறார் ஹீரோ.

தமிழ் சினிமாவில் இப்படி பிரமாண்டத்தை சாத்தியப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு ‘முடியும்’ என அழுத்தம்திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். வேதாள உலகத்திற்கு வழி தேடும் விஜய், தம்பி ராமையா, சத்யன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, வித்யூலேகா குழுவே சுவாரஸ்ய ப்ளஸ். இருந்தாலும் அடுத்தடுத்து என்ன வரும் என்று சுலபமாக யூகிக்க முடிகிறதே! திரைக்கதையை கொஞ்சம் செதுக்கி இருக்கலாம் சாரே!

ஸ்ருதி ஹாசன் அப்படியே கண்களுக்குக் குளிர்ச்சி. ஆட்டம், பாட்டம் அத்தனையிலும் சுளுக்கெடுக்கிற அசைவுகளில் பின்னி எடுத்திருக்கிறார். ஹன்சிகாவும் தன் பங்குக்கு இளமை காட்டுவது பளபள பலம். பாடல் காட்சிகளில் அவர் அபார அழகு.தேவி சொல்லி அடிக்கிற மறுவரவு. சும்மா இருந்துவிட்டுப் போகாமல் விஜய், சுதீப் வரைக்கும் நடிப்பில் ஈடு கொடுக்கிறார்! முரட்டு உயரம், பயமுறுத்தும் பார்வை, ராணியை தன் பிடியில் நிறுத்தி வைத்திருக்கும் கடுமை என சுதீப் மிரட்டல் சாய்ஸ்!

‘ஏன்டி… ஏன்டி’, ‘ஜிங்கிலியா’, ‘சொட்டவாலா’ என மூன்று பாடல்களுமே தாளமிட வைக்கின்றன. பின்னணியிலும் தேவிபிரசாத் விட்டு வைக்கவில்லை. பாடல் காட்சிகளைப் படமாக்கிய அழகிலும் சரி, பாடல் காட்சிகளில் குளிர் உணர்வை தரிசிக்க விட்டதிலும் சரி… ஒளிப்பதிவாளர் நட்டி சுப்பிரமணியன் ஒவ்வொரு ஃப்ரேமையும் ஸ்கிரீன் சேவர் ஆக்கி மயக்குகிறார். நறுக் எடிட்டிங் கர்பிரசாத் வசம். முத்து ராஜின் கலை படத்தின் ஆன்மா.

பழகிய கதை, அதுவும் பழைய கதை. திருப்பங்களைத் தேடவேண்டியிருக்கிறது. சற்றே அலுப்பூட்டும் நீளம், எடுபடாத நகைச்சுவைக் காட்சிகள் என மைனஸ்கள் இருந்தாலும்… குழந்தைகளின் உலகத்திலும் புகுந்து புறப்படும் விஜய்யின் புது அவதாரம் ‘புலி’!

சினி நியூஸ்

‘கெத்து’ ஷூட்டிங் சமயம் இரவு நேரங்களில் கூட ஓய்வில்லாமல், தனது இந்திப் பட கேரக்டருக்காக பாக்ஸிங் பிராக்டீஸ் பண்ணியிருக்கிறார் எமி. அந்தப் பொறுப்புணர்வைப் பார்த்து யூனிட்டே அசந்துவிட்டதாம்!


சிம்பு ட்விட்டரிலிருந்து விலகியதற்கு அப்பா இட்ட கட்டளைதான் காரணமாம். ‘‘உன் வெளிப்படை பேச்சு பிரச்னையாகி விடுகிறது. கொஞ்ச காலத்திற்கு விலகியிரு… நானே கவனித்துக்கொள்கிறேன்!’’ என்று சொன்ன பிறகே சிம்பு அறிக்கை வந்தது.

எழுத்தாளர், கவிஞர் சந்திராவும் சினிமா உலகில் நுழைகிறார், இயக்குநராக! கரு.பழனியப்பன் ஹீரோவாக, ‘கள்ளன்’ என்ற பெயரோடு படம் ரெடியாகிறது!

டெல்லி மாணவி நிர்பயா சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, ‘India’s Daughter’ ஆவணப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது தெரியும். சமீபத்தில் அது சீனாவில் பெண்கள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது.

‘தூங்காவனம்’ போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளின்போது, வேலையை முடித்துவிட்டு  ஸ்டுடியோவிலேயே தூங்கி விட்டாராம் கமல். அவரது சினிமா
ஆர்வத்தையும், அக்கறையையும் பார்த்து யூனிட்டே வியந்துவிட்டதாம்.

அட்லி இயக்கி வரும் ‘விஜய் 59’ படத்தில், விஜய் போலீஸ் அதிகாரி. அவரது ஜீப் டிரைவர் கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம் என அலசி ஆராய்ந்ததில், கடைசியாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை டிக் அடித்திருக்கிறார் விஜய். இருவரும் வரும் காட்சிகளில் காமெடி
கலகலக்கும் என்கிறது யூனிட்.

அட்லி இயக்கி வரும் ‘விஜய் 59’ படத்தில், விஜய் போலீஸ் அதிகாரி. அவரது ஜீப் டிரைவர் கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம் என அலசி ஆராய்ந்ததில், கடைசியாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை டிக் அடித்திருக்கிறார் விஜய். இருவரும் வரும் காட்சிகளில் காமெடி கலகலக்கும் என்கிறது யூனிட்.

‘‘மு லாயம்சிங் யாதவ் என்ன மதச்சார்பின்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரா? எங்களுக்கு மதச்சார்பின்மை சான்றிதழை அவர்தான் தர வேண்டுமா?’’ – தேர்தல் பிரசாரத்தில் இப்படி வெடித்திருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். பீகாரில் அக்டோபர் 12ம் தேதி தேர்தல் ஆரம்பிக்கிறது. சூடு பறக்கிறது இதனால்!

உலகெங்கும் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த மாதம் 90 கோடியை எட்டியிருக்கிறது. இத்தனை பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ் அப் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் வெறும் 50 எஞ்சினியர்கள்தான்.

நடிகர் ஷாருக் கானின் பக்ரீத் கொண்டாட்டத்திற்காக கர்நாடகாவிலிருந்து 250 கிலோ எடை கொண்ட இரண்டு ‘டெக்கானி’ செம்மறிஆடுகள் மும்பை பறந்திருக்கின்றன. இவற்றின் விலை, ரூ.1.1 லட்சமாம்!

ஜிம்முக்குப் போனாலும் கூட, சைக்கிளிங்கின் மகத்துவத்தை உணர ஆரம்பித்திருக்கிறார் சார்மி. ‘‘உடம்பு ஃபிட் ஆகுறதுக்கு சைக்கிளிங் சரியான சாய்ஸ். வாரத்துல ரெண்டு நாள் ஷால் போட்டு முகத்தை மூடிக்கிட்டு, சைக்கிள்ல சுத்துறதே தனி சுகம்!’’ என ஃபீலாகிறார் லேடி பேர்டு சார்மி.

‘‘இங்கே ஜி.வி.பிரகாஷுடன் நானும் அமர்ந்திருப்பது, நானும் அவரைப் போல வெர்ஜின் பாய்தான் என்பதைக் காட்டு
கிறது!’’ – சமீபத்தில் நடந்த ஒரு ஆடியோ ஃபங்ஷனில் இப்படிச் சொன்னது பாரதிராஜா!

தமிழில் ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’, சிம்ஹாவுடன் ‘கோ 2’ படங்களில் நடிக்கிறார் நிக்கி கல்ரானி. இது தவிர தெலுங்கில் ஒன்று, மலையாளத்தில் ரெண்டு என தென்னிந்தியா முழுவதும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் நிக்கி!

‘மந்துடு’வுக்கு அடுத்து தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து வரும் ‘பிரமோற்சவம்’ படத்தில் சமந்தா, காஜல், ப்ரணிதா என 3 ஹீரோயின்கள். நம்மூர் சத்யராஜ், ரேவதியும் மெயின் கேரக்டரில் நடிக்கின்றனர்.

அமெரிக்காவின், ‘MIT Technology Review’ பத்திரிகையின் உயரிய விருதைப் பெற்றிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ராகுல் பணிக்கர். குழந்தைகளுக்கான குறைந்த விலை இன்குபேட்டரை கண்டு பிடித்ததற்காக இந்த விருது. ஆறு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இயங்கக்கூடிய இந்த இன்குபேட்டரை 15 நாடுகளில் இரண்டு லட்சம் குழந்தைகளுக்குப் பயன்படுத்தி சாதித்திருக்கிறார் ராகுல்!

மகாராஷ்டிராவின் பிம்ப்ரி காய்கறி மார்க்கெட்டில் துப்பாக்கி ஏந்திய காவலர் படையை நியமித்திருக்கிறார்கள் அங்குள்ள வணிகர்கள். காரணம், சேமிப்புக் கிடங்கில் இருந்த நானூறு கிலோ வெங்காயம் திருடு போய்விட்டதுதான்!

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்திருக்கும் ‘24’ படத்திற்கு மியூசிக், ஏ.ஆர்.ரஹ்மான். போலந்து நாட்டில் இரண்டு பாடல்களின் படப்பிடிப்போடு ஷூட்டிங் நிறைவடைந்திருக்கிறது.

குற்றம் கடிதல் விமர்சனம்

சற்றே கண்டிப்புடனும், நிறைய கோபத்துடனும் ஆசிரியை மாணவனை அறைந்துவிட, கீழே விழுந்த பையனின் உடல்நிலை பிரச்னைக்குள்ளாக… அதை முன்வைத்து முன்பின் நடக்கிற சம்பவங்களே ‘குற்றம் கடிதல்’!

அறிமுக முயற்சியிலேயே வியாபித்து நிற்கும் கமர்ஷியல் அம்சங்களை கருத்தில் வைக்காமல் துணிச்சல் காட்டியிருப்பதில் இயக்குநர் பிரம்மா உயர்ந்து நிற்கிறார். பள்ளிக்கூடத்தில் நடந்த ஒரு சம்பவத்தை முன்வைத்து, மனிதர்களின் பரிதாப நிலையையும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் அதைக் கையாள்வதையும் துணிச்சலாகச் சொன்ன விதம் நேர்மை.

மனோதர்மங்களையும் மனநிலைகளையும் அச்சு அசலாகப் படம் பிடித்ததிலும், தீர்ப்பு எதுவும் எழுதிவிடாமல் அதைச் சொன்ன விதத்திலும் இயக்குநர் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ்!பள்ளிக் கல்வியின் தாத்பர்யம்… மாணவர்களைக் கண்டிக்க வேண்டியது அவசியம்தானா… அவர்களை விட்டுப் பிடிக்கலாமா… ஆசிரியை, மாணவனை அடித்து கண்டித்தது சரியா… மாணவர்களின் நற்பண்புக்கு யார் பொறுப்பு என தயக்கத்தைக் களைய வைக்கும் உத்வேகக் கருத்துக்கள். பெற்றோர், மாணவர், இன்னும் எல்லாருமே உணர வேண்டிய ப(ா)டம்.

ராதிகா பிரசித்தாவை மறக்கவே முடியாது. பால்ய காலத்தில் நாம் பார்த்திருந்த பள்ளி ஆசிரியையை நினைவுக்குத் தருகிறார். அடி வாங்கி மயங்கி விழுந்த பையனுடன் தானும் மருத்துவமனைக்குப் போக நினைப்பது… மற்றவர்கள் தடுத்து பாதுகாப்பு கருதி அவரை வெளியூர் அனுப்பி வைப்பது… அங்கே இந்தச் சம்பவத்தை நினைத்து மருகித் தவிப்பது என எல்லா இடங்களிலும் ராதிகா முன் நிற்கிறார். இறுதியில் பையனுடைய தாயின் மடியில் கதறி விழும்போது ஏ கிளாஸ் நடிப்பு.

பையனின் தாய் மாமனான ஆட்டோ டிரைவர் பாவெல் நவநீதன் அபாரம்யா! நீதி கேட்டு பள்ளி நிர்வாகத்தில் முறையிடும் வேகம், ‘புரியிற மாதிரி பேசுங்க’ என டாக்டர்களிடமும் கேள்வி கேட்கிற கோபம், பிரார்த்தனை முடியும் வரை காத்திருந்து பெண்ணின் தாயிடம் விசாரிக்கிற விவேகம்… எல்லாமே அவருக்கு நன்றாகக் கை வருகிறது. இன்னும் பிரகாசிக்க வேண்டிய குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு ஒருத்தர் ரெடி!

தொட்டால் ஒடிந்து விடுகிற தோற்றத்தில் மகா இறுக்கமும், தவிப்பும், நடுக்கமும் கொண்ட அந்தப் பையனின் தாயை மறக்க முடியவில்லை. கதறி அழும் ராதிகாவை வாரி அணைத்து ‘பையன் வந்தால் போதும்’ என அவர் பொருமுவதைப் பார்த்து கண்ணீர் துளிர்க்காமல் இருப்பது கல் மனம் கொண்டவர்களுக்கே சாத்தியம்.

சுயநல சூழலையும், மனங்களையும் போகிற போக்கில் துகிலுரித்துக்கொண்டே போகிறது பிரம்மாவின் திரைக்கதை. சுட்டி குட்டிப் பையன் மாஸ்டர் அஜய் அசத்துகிறார். ராதிகாவின் கணவராக ராஜ்குமார்… சாந்தமும், பொறுமையும் கொண்ட அருமையான நடிப்பில் படு இயல்பு.

ஷங்கர் ரங்கராஜனின் பின்னணி, பாடல்களில் மனம் கரைகிறது. கவனிக்க வேண்டிய இசையமைப்பாளர்களின் வரிசையில் வந்துவிடுகிறார். மணிகண்டனின் கேமரா தேனிலவுக் காட்சியில் ஆரம்பித்து, கடைசி கட்ட பரபரப்பு வரை நீடித்து உழைக்கிறது.பள்ளிக்கூடங்களில் கலவர நிலவரம், பிரச்னைகளை முற்றுப் பெற விடாமல் நீட்டி முழக்கும் இன்றைய மனித இயல்பு… எல்லாவற்றிலும் அரசியலும், மதமும், அதிகாரமும் மூக்கை நுழைக்கிற நிலை எனக் காட்சிப்படுத்தி இருப்பதில் தமிழ் சினிமாவிற்கு ஒரு தரத்தைக் கொடுத்திருக்கிறது ‘குற்றம் கடிதல்’!

‘ருத்ரமாதேவி’ அனுஷ்கா வாவ்..

ரஜினியின் யோகா சீக்ரெட்!

லவசமாக அன்லிமிடெட் நெட் பேக்கேஜ் கிடைப்பது மாதிரி சந்தோஷம், அனுஷ்காவை நேரில் சந்திப்பது! ஹயாத் ஹோட்டலில் ‘ருத்ரமாதேவி’யாக அவரை எதிர்பார்த்துப் போனால், ஃப்ரீ ஹேரில், ஃப்ரெஷ் ஸ்மைலிங்கில் தகதகக்கிறது பொண்ணு!‘‘ ‘பாகுபலி’யில் வீரத்தாய், ‘ருத்ரமாதேவி’யில் வீரமங்கைன்னு எனக்குக் கிடைக்கற கேரக்டர்கள் எல்லாம் எனக்கே பிரமிப்பா இருக்கு!’’ – ஃபுல் எனர்ஜியில் இருக்கும் அனுஷ்காவின் ததிங்கிணத்தோம் தமிழ் இன்னமும் ஈர்க்கிறது!

‘‘ ‘ருத்ரமாதேவி’க்காக வாள் சண்டை, குதிரையேற்றம், யானை ஃபைட்னு பண்ணினது எல்லாம் பெரிய சவால்தான். 3டில ஷூட் பண்றப்போ, ஷாட் எடுக்க கொஞ்சம் நேரம் ஆகத்தான் செய்யும். அடிக்கடி லென்ஸ் மாத்தினாதான், எஃபெக்ட்ஸ் கொண்டு வரமுடியும். கரெக்ட்டான லைன்ல நின்னு நடிக்கணும். கேமராமேன் அஜயன் வின்சென்ட் காரு, டைரக்டர் குணசேகர் காரு ரெண்டு பேரும் ஹாலிவுட் போய் கோர்ஸ் படிச்சிட்டு வந்து, ஸ்பெஷலா வேலை பார்த்தாங்க. முதன்முதலா 3டியில் என்னைப் பார்க்க எனக்கே எக்ஸைட்டடா இருக்கு!”

‘‘யார் அந்த ‘ருத்ரமாதேவி’?’’ ‘‘13ம் நூற்றாண்டில் 40 ஆண்டுகள் காகதீய பேரரசை ஆட்சி செய்த அரசிதான் ருத்ரமாதேவி. அவங்களோட வீர சாகசங்களைத்தாண்டி ஒரு வலி மிகுந்த வாழ்க்கை இதில் இருக்கு.  ருத்ரமாதேவி பத்தி தகவல்கள் சேகரிக்க இயக்குநர் குணசேகர் காரு கல்வெட்டுகள்ல இருந்து ஹிஸ்டாரிக்கல் மியூசியம் வரை நிறைய இடங்களுக்கு போய் ஹோம் வொர்க் பண்ணியிருக்கார்.

இருந்தாலும் அவங்க தோற்றம் பத்தி தெரிஞ்சுக்க எந்தவித ஆதாரங்களும் கிடைக்கலை. ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி காரு, காஸ்ட்யூமர் நீட்டாலுல்லா காரு எல்லாரும் சேர்ந்துதான் ‘ருத்ரமாதேவி எப்படி இருந்தாங்க’ன்னு அனுமானமா ஒரு வடிவத்தைக் கொண்டு வந்தாங்க. தோற்றம் மட்டும் போதாது… ருத்ரமாதேவி மகாராணி, வீரமான பெண்மணி. அதனால என் பங்குக்கு சாகச நடிப்பைத் தரவேண்டியது கடமையாகிடுச்சு!’’‘‘ஷூட்டிங்ல உங்களுக்கு அடிபட்டுச்சாமே..?’’

‘‘வாள் சண்டையின்போது லேசா காயம் பட்டுச்சு. ஆனா, இதெல்லாம் சகஜம்தானே. தமிழ், தெலுங்கு ரெண்டு மொழிகள்லயும் ஒரே டைம்ல ரிலீஸ் ஆகுறதால அடுத்தடுத்த லாங்குவேஜ்ல டயலாக்ஸ் பேசுறது மட்டும் கொஞ்சம் கஷ்டமா தெரிஞ்சது.  படத்தோட ஷூட்டிங் எல்லாம் மே மாசம், கொளுத்துற வெயில்ல நடந்தது. விலங்குகள் கூட அந்த சம்மர்ல ஃபைட் பண்ணினது மறக்க முடியாதது.

பீட்டர்  ஹெயின் மாஸ்டர் கைடன்ஸ்னால ரொம்ப பாதுகாப்பா சண்டைகள்ல நடிக்க முடிஞ்சது. எங்கூட  லட்சுமின்னு ஒரு யானை நடிச்சிருக்கு. சீன்ல அதோட நடிக்கும்போது கெமிஸ்ட்ரி  வொர்க் அவுட் ஆகணும்னு, ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்பே லட்சுமி கூட  நல்லா பழகினேன். மொத்த ஷூட்டிங் முடிஞ்ச பிறகு லட்சுமியைப் பிரியும்போது  வருத்தமா இருந்துச்சு. 13ம் நூற்றாண்டுல இருந்த அரண்மனை, கோட்டைகளை எல்லாம் மறு உருவாக்கம் பண்ணியிருந்தார் தோட்டாதரணி காரு. மொத்தம் 16 செட். இந்தப் படத்தை தமிழில் தயாரிக்கற   தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி காரு, ரீரெக்கார்டிங் அப்போ, இளையராஜா  காருகிட்ட என்னை அறிமுகப்படுத்தினார். ராஜா காருவோட தீவிர ரசிகை நான். அந்தத் தருணம் அவ்வளவு சந்தோஷம்!’’

“விதவிதமான நகைகள், புடவைகளுக்காகவே இந்த மாதிரி கேரக்டர்களை நீங்க செலக்ட் பண்றீங்க போல?”“அப்படியெல்லாம் இல்லை. எனக்கு நகைகள் பிடிக்கவே பிடிக்காது. போன சம்மர்ல அவ்வளவு நகைகளைப் போட்டுக்கிட்டு மகாராணி காஸ்ட்யூம்ஸோட நடிச்சது ரொம்பக் கஷ்டம். நம்ம கலாசாரம், வரலாற்றுப் படங்கள் பண்றப்போ, நேட்டிவிட்டிக்காக அந்த காஸ்ட்யூம்ஸை அணிய வேண்டியிருக்கு. ‘புலி’ படம் பார்த்தேன். அதுல தேவி மேம், ஹன்சிகா லுக் எல்லாம் சூப்பர்! அந்த லுக்ஸ் வேணும்னா, அந்த நகைகள், காஸ்ட்யூம்ஸ் அவசியம்தானே!’’

‘‘ ‘அருந்ததி’க்குப் பின்… ‘அருந்ததி’க்கு முன்.. அனுஷ்கா எப்படி?’’‘‘என்னோட மூணாவது படம் ‘அருந்ததி’. அதுக்கு முன்பு ‘கிளாமர் டால்’னு சொல்ற மாதிரி, கமர்ஷியல் படங்கள்தான் பண்ணிட்டிருந்தேன். அப்போ எனக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சி.ஜி. பத்தியெல்லாம் சுத்தமா தெரியாது. ஆனா, ‘அருந்ததி’க்கு அப்புறம் நிறைய கத்துக்கிட்டேன்.

பிரமிப்பான, பிரமாண்டமான படங்கள், கேரக்டர்கள் எனக்குக் கிடைக்குது. ஆனா, எனக்கு ‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’யை விட ‘அருந்ததி’யை ரொம்பப் பிடிக்கும். ‘அருந்ததி’யாலதான் இந்தப் படங்கள் எனக்குக் கிடைச்சது! ஸோ, ஆல்வேஸ் கிரெடிட்ஸ் கோஸ் டு ‘அருந்ததி’!’’
‘‘ ‘பாகுபலி – 2’ல உங்க போர்ஷன் அதிகம் இருக்கும்னு ராஜமௌலி சொல்லியிருக்கார்..?’’

‘‘இப்படியெல்லாம் கேட்டா ‘பார்ட் 2’ பத்தி சொல்லிடுவேன்னு நினைச்சிட்டீங்களா? ‘பாகுபலி’ ஒரு மெகா ஹிட்ங்கறது சொல்லி அடிச்ச வெற்றி. எனக்கு அதுல சிவகாமி கேரக்டர்தான் ரொம்பப் பிடிக்கும். ரம்யா கிருஷ்ணன் மேடம் மிரட்டியிருந்தாங்க. செகண்ட் பார்ட் பத்தி வாயைத் திறக்க க்கூடாதுனு ராஜமௌலி காரு ஆர்டர்!’’‘‘ ‘லிங்கா’வில் ரஜினி என்ன சொன்னார்?’’

‘‘அவரை நெனச்சாலே முகமெல்லாம் ஸ்மைல்தான். நான் 14 வருஷம் யோகா பண்றேன். ஆனா சினிமாவில் நடிக்க வந்த பிறகு, என்னால யோகாவை கடைப்பிடிக்க முடியல. ஆனா, அவர் காலையில எழுந்ததுல இருந்து, நைட் தூங்கப் போறது வரை கிடைச்ச டைம்ல எல்லாம் யோகாவோட வாழ்றார். ஸ்பிரிச்சுவல்ல எனக்கு இன்ட்ரஸ்ட் உண்டு.

ரஜினி சார், ஸ்பிரிச்சுவல்ல பெரிய எக்ஸ்பர்ட். அவரோட பங்க்சுவாலிட்டி, டெடிகேஷன், சிம்ப்ளிசிட்டினாலதான் அவர் இன்னமும் சூப்பர்ஸ்டாரா இருக்கார். இண்டஸ்ட்ரியில இருக்கற ஹீரோயின்ஸ் ஒவ்வொருத்தருமே அவரோட ஒரு படமாவது நடிக்கணும். அப்போதான் நிறைய விஷயங்கள் கத்துக்க முடியும்!’’

‘‘ ‘சிங்கம் 3’ல..?’’‘‘யா.. கமிட் ஆகியிருக்கேன். ஷூட்டிங் எப்போ தொடங்கும்னு ஆர்வமா இருக்கேன்!’’‘‘கல்யாணம் எப்போ?’’‘‘ ‘ருத்ரமாதேவி’ பத்தி இன்னும் கேள்விகள் கேட்பீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா, இந்தக் கேள்வி வந்தாலே, புரிஞ்சிடும், இன்டர்வியூவை முடிக்கப் போறீங்க போல! சென்னை, ஐதராபாத்னு எங்கே போனாலும் இதே கேள்விதான் கேக்குறாங்க. ‘பாகுபலி 2’ ஷூட்டிங் இன்னும் தொடங்கல. அதை கம்ப்ளீட் பண்ணின பிறகுதான் பர்சனல் லைஃப் பத்தி யோசிக்க எனக்கு டைம் கிடைக்கும்!’’

புலி பாய்ந்தது : தடைகளை உடைத்தெறிந்து புலி திரைப்படம் வெளியானது ரசிகர்கள் கொண்டாட்டம்.

Source: புலி பாய்ந்தது : தடைகளை உடைத்தெறிந்து புலி திரைப்படம் வெளியானது ரசிகர்கள் கொண்டாட்டம்.