பத்தாமல் போன பத்து வழிகள்

குழம்பாமல் இருப்பதற்கான
இரண்டு வழிகள்
முதல் வழியை
நினைவில் வைத்துக்கொண்டு
இரண்டாவது வழியை
மறந்து விடுவது.
இரண்டாவது வழி
தெரிந்து விட்டதா
முதல் வழியை
மறந்துவிடு
முதல் வழி
நினைவில் இருக்கின்றதா
இரண்டாவது வழியைத்
தேடாதே.
இலக்கை நினைவில் வைத்துக்கொண்டு
வழியை மறந்து விடுவது
பேதமை
வழியை நினைவில் வைத்துக்கொண்டு
இலக்கை மறந்து விடுவதுதான்
மேதைமை
எளிமைகள் நிறைந்த
சிக்கலான வழிகள்
மனிதனுடையவை
சிக்கல்கள் நிறைந்த
எளிமையான வழிகள்
இறைவனுடையவை
நல்வழிப்படுத்தத்
தேவை
மிகவும்
மோசமான அனுபவங்கள்
நல்லனுபவங்களைக் கொடுக்கத்
தேவை
மிகவும்
மோசமான வழிகள்
வழிகாட்டி மரம் கூறுவது
இதுதான்
மரமாக வாழ்ந்துகொள்
மரத்தைப் போல் நிற்காதே
புறம் நோக்கிச் செல்வதுதான்
பயணம் என்றால்
எல்லோருக்குமான வழிகாட்டியாக
நீங்கள் இருங்கள்
அகம் நோக்கிச் செல்வதுதான்
பயணம் என்றால்
உங்களுக்கான வழிகாட்டியாக
எல்லோரும் இருக்கட்டும்
நடமாடத் தெரிந்தவனின் திசையில்
சப்தம்தான் பயணிக்கும்
நடனமாடத் தெரிந்தவனின்
திசையில்தான்
இசையும் பயணிக்கும்.
எங்கே போக வேண்டும்
என்பது
தெரிந்திருக்கின்றது
எங்கே போய்க் கொண்டிருக்கின்றேன்
என்பதுதான்
தெரியவில்லை
மரணத்தின் வழியில் போனால்தான்
வாழ முடியும்

RAJESH JOKES-2(DEC15)


‘‘ஒரே ராத்திரியில ஏன் ரெண்டு கடைகள்ல கொள்ளை அடிச்சே..?’’
‘‘என்ன பண்றது எஜமான்..? எனக்கு ரெண்டு சம்சாரம் ஆச்சே!’’

‘‘மேடையில சேர்ல உட்கார்ந்துக்கிட்டு தூங்காதீங்க தலைவரே…’’
‘‘ஏன்யா..?’’
‘‘நீங்க நாற்காலி கனவு காண்றதா எல்லாரும் சொல்றாங்க!’’

‘‘நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு செருப்புகள் விழாத காரணத்தினால், தலைவரை மீண்டும் பேச அழைக்கிறோம்..!’’

‘‘நம்ம படம் ரிலீசான நாலு நாள்ல நாற்பது கோடியைத் தாண்டிடுச்சு சார்…’’
‘‘நிஜமாவாய்யா சொல்றே… அவ்வளவு வசூலா?’’
‘‘நினைப்புதான்… ஃபேஸ்புக், ட்விட்டர்ல நம்ம படத்தை திட்டுனவங்களோட எண்ணிக்கையைச் சொன்னேன்!’’

‘‘மப்புல உளர்றாரு தலைவர்…’’
‘‘எப்படிச் சொல்ற..?’’
‘‘தொகுதிவாழ் மருமக்களேங்கறாரு..!’’

‘‘தலைவர் காரசார விவாதத்தை ஏன் தவிர்க்கறாரு..?’’
‘‘அவருக்கு அல்சர் பிரச்னையாம்… அதான்!’’

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் திறமையான இசையமைப்பாளராக இருந்தாலும் அவராலே ஹெல்‘மெட்டில்’ ட்யூன் போட முடியாது!
– எந்த மெட்டுக்கும் ட்யூன் போடும் இசைமேதைகள் சங்கம்

RAJESH Jokes-1(DEC15)

‘‘தலைவர் கிட்ட வாட்ஸ்அப் நம்பர் கேட்டேன்…’’

‘‘என்ன சொன்னாரு..?’’
‘‘அவர்கிட்ட எந்த ஜெயில் வார்டன் நம்பரும் இல்லைன்னு சொல்லிட்டாரு..!’’

வீட்டுல மாடு வளர்த்தா குளிப்பாட்டறாங்க; நாய் வளர்த்தா குளிப்பாட்டறாங்க; பூனை வளர்த்தா குளிப்பாட்டறாங்க; மீன் வளர்த்தா குளிப்பாட்டுவாங்களா?
– தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே குளிப்போர் சங்கம்
.

‘‘எதிர்க்கட்சிக்காரர்களின் முகத்திரையைக் கிழிப்பேன்…’’
‘‘வழக்கமா நமக்கு எதிர்கோஷ்டிக்காரன் வேஷ்டியை கிழிச்சுதானே தலைவரே பழக்கம்?’’

‘‘பலத்த போலீஸ் பாதுகாப்பு வேணும்னு தலைவர் கேக்குறாரே… எங்க போகப் போறாராம்?’’
‘‘எம்.எல்.ஏ. பதவி ஏத்த பிறகு இன்னிக்குத்தான் தொகுதி பக்கம் போகப் போறாராம்!’’

‘‘கண் ஆபரேஷன் முடிஞ்சு கண் திறக்கும்போது யார் முகத்தைப் பாக்க ஆசைப்படறீங்க? உங்க அம்மா முகத்தையா… இல்ல, உங்க மனைவி முகத்தையா?’’
‘‘ஏன் டாக்டர்? என் மனைவி வேலைக்காரியை வேலையை விட்டு நிறுத்திட்டாளா என்ன!’’

‘‘தலைவர் ஏன் மேடையிலே பயந்துக்கிட்டே பேசறார்?’’
‘‘யாரோ அவர் மேலே இன்னிக்கு ‘செருப்பு வெடிகுண்டு’ வீசப்போறதா தகவல் கிடைச்சுதாம்..!’’
.

தத்துவம் மச்சி தத்துவம்

பர்பியை சாப்பிடலாம்… குல்ஃபியை சாப்பிடலாம்… செல்ஃபியை சாப்பிட முடியுமா?
– மச்சினியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து மனைவியிடம் மாத்து வாங்குவோர் சங்கம்

ரசிகர்களுக்கு சூப்பர்ஸ்டாரின் பர்த்டே ட்ரீட்!

ரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘எந்திரன் 2’வின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கிறது கோலிவுட். இப்போது ‘கபாலி’ ஷூட்டிங் பரபரப்பில் இருக்கும் ரஜினி, இந்த மாதம் வரை அந்தப் படத்திற்காக கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு சின்னதொரு ரெஃப்ரெஷ். பொங்கலுக்குப் பிறகு ஷங்கர் ப்ராஜெக்ட்டுக்கு வருகிறார் என தகவல்கள் கோடம்பாக்கத்தில் உருமியடிக்கின்றன. ஷங்கர் – ரஜினியின் பிரமாண்ட காம்பினேஷனான ‘எந்திரன் 2’ பற்றி கிடைத்த தகவல்கள் இனி…

* மலேஷியாவில் ஷெட்யூலை முடித்த கையோடு தாய்லாந்திலும் ‘கபாலி’ ஷூட்டிங் நடந்தது. அதையும் முடித்துவிட்டு சென்னை திரும்பினார் ரஜினி. மலேசியாவில் ரஜினியின் ரசிகர்கள் கொடுத்த தவுசண்ட் வாட்ஸ் எனர்ஜியினால், அடுத்தடுத்து படங்கள் பண்ணும் ஆர்வத்தில் இப்போது சூப்பர்ஸ்டார் இருக்கிறார்.

* ‘எந்திரன் 2’ படத்திற்கு அனிமேஷன், கிராஃபிக்ஸ் வேலைகளுக்கு ஒரு வருடத்திற்கும் மேல் தேவைப்படும் என்பதால், இந்த வருடத் துவக்கத்திலேயே சத்தமில்லாமல் அதனைத் தொடங்கிவிட்டார் ஷங்கர். அதாவது, ‘கபாலி’க்கு முன்னதாகவே படத்தின் முழு ஸ்கிரிப்ட்டை ரஜினி படித்து முடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். மேக்கப் டெஸ்ட் மற்றும் முக வடிவமைப்பிற்காக இப்போது மகள் ஐஸ்வர்யா, ஷங்கருடன் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருக்கிறார் ரஜினி.

* ‘எந்திரன்’ படத்தை விட, இதன் பட்ஜெட் இரண்டு மடங்கு அதிகரிக்கலாம் என்பதால், சரியான தயாரிப்பாளரைத் தேடி வந்தார் ஷங்கர். இதனிடையே ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமே இதைத் தயாரிக்க விரும்புவதால், வெளிநாடு சென்றிருந்த ஷங்கர் அங்கேயே லைக்கா தயாரிப்பாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

* ஷங்கர் மீது ரஜினிக்கு அபார நம்பிக்கை. ‘எந்திரன்’ ப்ராஜெக்ட்டிற்கு முன்னதாகவே ‘‘ரொம்ப பெரிய பட்ஜெட். இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கணுமா?’’ என ரஜினியிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில் ஆச்சரியம். ‘‘ஷங்கரை எனக்குத் தெரியும். அவர் திறமைகள் தெரியும். அதனாலதான் கமிட் ஆனேன். வேற யாராவது வந்து 200 கோடியில் படம் எடுக்கறதா சொல்லியிருந்தால் நான் தொட்டிருக்க மாட்டேன். ஷங்கர் சரியா செய்வார். நல்ல படம் தருவார். ‘சிவாஜி’யில வேலை செஞ்சதுக்கு அப்புறம்தான் அவர் ஃபென்டாஸ்டிக் டைரக்டர்னு தெரிஞ்சுக்கிட்டேன்!’’ – ரஜினியே அவரது நெருங்கிய வட்டத்தில் சொன்ன வார்த்தைகள் இவை.

* ‘‘ ‘எந்திரன்’ படத்தில் 3டி அனிமேஷன், டூம் லைட், மோஷன் கன்ட்ரோல், மோஷன் கேப்சர் ஆகிய  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருந்தார்கள். படம் முழுக்க 1500 சி.ஜி ஷாட்ஸ் இருந்தன. அதனாலேயே இந்தியாவிலேயே முதல்முறையாக ப்ரீ விஷுவலைசேஷன் டெக்னிக்கை பயன்படுத்திய படம் என்ற பாராட்டும் கிடைத்தது. இந்த ‘ப்ரீ வைஸ்’ வேலைகளுக்கு மட்டுமே ஒரு வருடத்திற்கும் மேலானது. அதனாலேயே பல கோடிகளை மிச்சப்படுத்தி யிருந்தார் ஷங்கர். இதைப் போலவே இந்தப் படத்திற்கு ப்ரீ வைஸ் அட்வான்ஸ்டு திட்டமிடுதல் காட்சிகளுக்கான வேலைகள் துவங்கிவிட்டன!’’ என்கிறது ஷங்கரின் தரப்பு.

* ‘எந்திரன் 2’வில் ஏ.ஆர்.ரஹ்மான், எமி ஜாக்சன், ‘ஐ’ படத்திற்கு மேக்கப் வொர்க்கை கவனித்த வீட்டா வொர்க்‌ஷாப், கலை இயக்குநர் முத்துராஜ் ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர். விஷுவல் எஃபெக்ட்டை சீனிவாஸ் மோகனும், எடிட்டிங்கை ஆண்டனியும் கவனிக்கிறார்கள். ஒளிப்பதிவு நீரவ் ஷா அல்லது ரத்னவேலு இருவரில் யாராவது ஒருவர் என்கிறார்கள்.

* படத்தில் வில்லனாக அர்னால்ட் நடிக்கும் தகவல் இதுவரை உறுதியாகவில்லை. ஷங்கர் கேட்ட தேதிகள் அர்னால்டிற்கு சரிவரவில்லை என்றும் ஒரு டாக் இருக்கிறது. அர்னால்ட் சம்பளம், விமானச் செலவு, அவரது டீம் செலவு என இதற்கு மட்டுமே 100 கோடி ரூபாய் ஆகும் என்பதால், ஷங்கர் தரப்பில் யோசிப்பதாகவும் சொல்கிறார்கள். ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த்சாமியை வில்லனாகக் காட்டியது போல, இதில் சஸ்பென்ஸ் வைத்து பாலிவுட் ஹீரோ ஒருவரை வில்லனாக்கலாம் என்றும் தகவல்கள் கசிகின்றன.

* ‘எந்திரன்’ படத்தின் பாடல்கள் இன்று வரை ஹிட் லிஸ்ட்டில் இருப்பதால், அதனை மிஞ்சும் வகையில் ரஹ்மானிடம் ட்யூன்கள் கேட்டிருக்கிறார் ஷங்கர். ரஹ்மானும் கம்போஸிங்கை தொடங்கிவிட்டார் என்கிறார்கள். அனேகமாக பொங்கலுக்குப் பிறகு ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘எந்திரன் 2’ அறிவிப்பு டிசம்பர் 12ல் வெளிவந்தால், நிஜமாகவே அது ரஜினி ரசிகர்களுக்கு புத்தாண்டுப் பரிசுதான்!

கனமழையால் மணலுக்கு… தட்டுப்பாடு: ஒரு யூனிட் விலை ரூ.5,500

 கனமழையால், கொற்றலை, ஆரணி, கூவம் ஆறுகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மணல் கிடைக்காமல், கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், ஒரு யூனிட் மணல், 5,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த மாதம், 9ம் தேதி முதல், கடந்த, 5ம் தேதி வரை, கனமழை பெய்தது. இதனால், ஆரணி, கொற்றலை, நந்தி மற்றும் கூவம் ஆறுகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், மணல் விலை, ஒரு மாதத்தில், இருமடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த, மாதத்திற்கு முன் வரை, ஒரு யூனிட் மணல், 2,750 – – 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அரசு கட்டடங்கள், உள்ளாட்சி வளர்ச்சி பணிகள் செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு, ஒரு யூனிட் மணல், 2,000 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

அப்போதே ஒப்பந்ததாரர்கள் ஒரு யூனிட்டிற்கு, 1,000 ரூபாய் முதல், 1,250 ரூபாய் வரை கூடுதல் விலை கொடுத்து, மணல் வாங்கி பயன்படுத்தி

வந்தனர்.

தற்போது பெய்த கனமழையால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மணல் அள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மணல் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு

நிலவுகிறது.

மணல் கிடைக்காத நிலையில், ஏற்கனவே இருப்பு வைத்துள்ளவர்களால், ஒரு யூனிட் மணல் 5,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.மணல் விலை கூடுதலால், வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் உள்ளாட்சி வளர்ச்சி பணிகள் செய்வதற்கு, ஒப்பந்ததாரர்கள் முன்வரவில்லை. இதனால், வளர்ச்சி மற்றும் வெள்ள நிவாரணப் பணிகள் தொய்வு அடைந்துள்ளன.இதுகுறித்து, ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில், மணல் குவாரி இல்லாததால், மணல் வாங்க வேலுார் மாவட்டம், வாலாஜா அடுத்த, பூண்டிக்கு சென்று ஒரு யூனிட், 3,000 ரூபாய்க்கு வாங்கி வந்தோம்.

ஆறுகளில் வெள்ளம் தற்போது மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், மணலை கூடுதல் விலை கொடுத்து எடுத்து வருகிறோம்.

நஷ்டம் :அதாவது, ஒரு யூனிட், 5,000 ரூபாய் முதல், 5,500 ரூபாய் வரை கொடுத்து வாங்கி வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே, மணலுக்கு அரசு வழங்கும் தொகை குறைவாக

உள்ளது. தற்போது கூடுதல் விலையால், எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அரசு அனைத்து பணிகளுக்கும் டெண்டர் விடும் போது, மணலுக்கு, ஒரு யூனிட்டிக்கு 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அந்த தொகை

தான் எங்களால் வழங்க முடியும். ‘ஒப்பந்ததாரர்கள் தான் பணியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சமூக அக்கறையுடன் வேலை செய்ய முன்வர வேண்டும்’ என்றார்.

விமான நிலையத்தில் புகுந்த விஷ பாம்புகள்: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

 

சென்னை விமான நிலையத்தின் பின் புறத்தில் ஏராளமான செடி கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இந்த புதர் பகுதியில் கடும் விஷ பாம்புகள் உள்பட பல்வேறு விஷ பூச்சிகள் உள்ளன. அருகிலேயே அடையாறு அற்றுப்பகுதியும் உள்ளது. கடந்த ஒரு மாதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக தண்ணீர் ஏற்பட்டதால், திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் அடையாறு வழியாக கடலுக்கு சென்றடைந்தது. இதையொட்டி சென்னை விமான நிலையம் அருகில் உள்ள அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், விமான நிலையத்தில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து விமான சேவை பாதிக்கப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை விமான நிலையம் மூடப்பட்டது. விமான நிலையத்தில் புகுந்த மழைநீர் ஓடுபாதையில் இருந்து பயணிகளின் வருகை பகுதியான தரைத்தளம் வரை தேங்கி குளம்போல் நின்றது. இதில், விமானங்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்களின் வாகனங்களின் உள்ளேயும், சக்கரத்தின் கீழும் ஏராளமான பாம்புகள் புகுந்தன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை நின்றதும், அங்கிருந்த தண்ணீர் வடிய தொடங்கியது. விமான நிலைய ஊழியர்களும் விமானம் மற்றும் வாகனங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நேற்று காலை ஒரு விமானத்தின் சக்கரத்தை ஆய்வு செய்து போது, 10க்கு மேற்பட்ட விஷபாம்புகள் அங்கிருந்து ஓடின. இதை கண்டதும், அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் அதிகாரிகளின் கார்கள், ஜீப்களின் உள்ளேயும் பாம்புகள் இருந்தன. அனைத்தும் கொடிய விஷம் உடையது. இதனால், விமான நிலைய அதிகாரிகள், அங்கு குவிந்து கிடந்த பாம்புகளை பிடிக்க,  வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க முயன்றனர்.

ஆனால், தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. இதையடுத்து, விமான நிலைய ஊழியர்களை கொண்டு சில பாம்புகளை அடித்து கொன்றனர். விமானத்தில் கீழ் பகுதியில் தேங்கி இருந்த தண்ணீரில் பாம்புகள் தப்பியோடின.

ஆண்களின் விந்தணு – கிடைக்கும் நன்மைகள்

சமீபத்திய ஆய்வு ஒன்றில், விந்தணுவை முகத்தில் தடவுவதால் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. எனவே பெண்களே! அடுத்த முறை உங்கள் துணையுடன் குதூகலமாக இருக்கும் போது, மறக்காமல் சேரிக்கரிக்க மறந்துவிடாதீர்கள். என்ன சேகரிக்க வேண்டும் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.

அழகை அதிகரிக்க உலகில் மேற்கொள்ளும் சில விசித்திரமான ஃபேஷியல்கள்!
ஏனெனில் ஆண்களின் விந்தணுவில் புரோட்டீன்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளதால், இதனை முகத்தில் தடவினால், முகத்தின் பொலிவு அதிகமாகும். அதுமட்டுமின்றி, ஆண்களின் விந்தணுவில் ஜிங்க், மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், புருக்டோஸ் போன்றவையும் இருப்பதால், இது பல அழகு நன்மைகளை வாரி வழங்கும்.

அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட தென்னிந்திய நடிகைகள்!!!
சரி, இப்போது விந்தணுவை முகத்தில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பரு பிரச்சனைகள் குறையும்
ஆண்களின் விந்தணுவில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது நிச்சயம் சருமத்திற்கு நல்லது. அதற்கு இதனை சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் பருக்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து, பரு மறைந்துவிடும்.

சரும சுருக்கங்கள் மறையும்
விந்தணுவை சருமத்தில் பயன்படுத்தி வந்தால், இளமை பாதுகாக்கப்படும். இதில் உள்ள புரோட்டீன், சரும செல்களை புத்துணர்வடையச் செய்து, சரும சுருக்கங்களை மறையச் செய்து, இளமையுடன் காட்சியளிக்க உதவும்.

பற்களை வெண்மையாக்கும்
சொன்னால் நம்பமாட்டீர்கள், விந்தணுவைக் கொண்டு பற்களை தேய்த்தால், அதில் உள்ள கால்சியம், பொட்டாசயிம், பாஸ்பேட் மற்றும் ஜிங்க் போன்றவை பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ள உதவும்.

தழும்புகளை நீக்கும்
முகத்தில் பருக்களால் வந்த தழும்புகள் அதிகம் இருந்தால், அதனை விந்தணு நீக்கும். அதற்கு சிறிது விந்தணுவை எடுத்து, முகத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து, உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து செய்து பாருங்கள், நல்ல மாற்றத்தை நீங்களே காணலாம்.

கருவளையங்களை மறையச் செய்யும்
கருவளையங்களைப் போக்க எத்தனை இயற்கை பொருட்கள் இருந்தாலும், விந்தணுவிற்கு இணையாக முடியாது. ஏனெனில் விந்தணு அவ்வளவு சக்தி வாய்ந்த கருவளையங்களை விரைவில் போக்கக்கூடிய ஒன்று. இதற்கு அதில் உள்ள புரோட்டீன் தான் காரணம்.

அழகான உதடுகள் உங்களுக்கு
உதடுகள் அதிகம் வறட்சி அடைந்தால், விந்தணுவை உதட்டில் தடவி உலர வைத்து கழுவி வாருங்கள். இதனால் உதட்டில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, உதடுகள் மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்.

கூந்தல் வளர்ச்சி
விந்தணு சருமத்தின் அழகை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமின்றி, கூந்தலின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஏனெனில் விந்தணுவில் புரோஸ்டாகிளான்டின் E2 என்னும் பொருள் உள்ளது. எனவே முடியின் வளர்ச்சியை அதிகரிக்க விந்தணுவைக் கொண்டு ஹேர் மாஸ்க் போடுங்கள்.

உடலுறவை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்!

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு இரட்டை பெண் குழந்தை

தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்தது

சென்னை அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் இரட்டை பெண் குழந்தை பிறந்தது. ராமாவரம் பகுதியில் சென்னை மற்றும் புறநகரை புரட்டிப்போட்ட கனமழையால் நகரமே வெள்ளத்தில் மிதந்தது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி கூடுதல் தண்ணீரும் திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றின் ஓரங்களில் இருந்த பல பகுதிகளில் முதல் மாடி அளவுக்கு தண்ணீர் ஓடியது. இதுபோல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போரூர் அருகே உள்ள ராமாவரம் பகுதியை சேர்ந்தவர் தீப்தி (வயது 28). கணவர் பெயர் கார்த்திக். 9 மாத கர்ப்பிணியான தீப்தியின் வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டது. செல்போன் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டன. ஹெலிகாப்டரில் மீட்பு இதனால் தீப்தி வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு வழியின்றி தவித்தார். கடந்த 2-ந் தேதி இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டன. இதனால் தீப்தி மற்றும் வீட்டில் இருந்தவர்கள் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று உதவி கேட்டனர். இதனை பார்த்த ஒரு ஹெலிகாப்டர் உதவிக்கு வந்தது. விமானப்படை வீரர்கள் தீப்தியை மீட்டு தாம்பரம் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது கார்த்திக் தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்தார். அவருக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. கார்த்திக் அங்கிருந்து புறப்பட்டு, 3-ந் தேதி தாம்பரம் வந்து சேர்ந்தார். இரட்டை பெண் குழந்தை தீப்தியின் பிரசவம் தொடர்பான மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிட்டது. இதனால் தீப்தி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள கம்ப்யூட்டர் பதிவுகளில் தனது மருத்துவ அறிக்கைகள் இருக்கும் என்று ஆலோசனை தெரிவித்தார். அப்போது தீப்திக்கு லேசான பிரசவ வலி ஏற்பட்டதால் மீண்டும் அவரை ஹெலிகாப்டர் மூலம் விமானப்படையினர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பத்திரமாக தரை இறக்கப்பட்டு தீப்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 4-ந் தேதி தீப்திக்கு அங்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. தேவதைகள் போல கார்த்திக் கூறும்போது, ‘‘இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியில் எங்கள் ஒவ்வொருவர் முகங்களிலும் மகிழ்ச்சியை வரவழைக்கும் தேவதைகள் போல எங்கள் மகள்கள் பிறந்திருக்கிறார்கள். இதனால் நாங்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறோம். விமானப்படை வீரர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். மீட்பு பணிகளில் விமானப்படை மிகச்சிறந்த பங்காற்றியிருக்கிறது. ‘தீப்தியைத் தவிர இதுபோல மேலும் 3 முதல் 4 கர்ப்பிணிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி மிகவும் சிரமமானது. பைலட்டுகள் 7 மாத, 9 மாத கர்ப்பிணிகளை மீட்டதாக கேள்விப்பட்டதும், சக வீரர்களிடம் இதை எப்படி அவர்கள் செய்தார்கள் என்று கேட்டு வியப்படைந்தேன்’ என்று விமானப்படை அதிகாரி ஒருவர் கூறினார். 7 மாத கர்ப்பிணி நெடும்பாக்கத்தை சேர்ந்த சுகன்யா (29) என்ற 7 மாத கர்ப்பிணி, அவரது 3 வயது குழந்தையுடன் கடந்த 3-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார். சுகன்யா கூறும்போது, ‘‘நாங்கள் குடியிருந்த 4 மாடி குடியிருப்பில் 2 மாடிகள் வரை தண்ணீர் வந்துவிட்டது. மின்சாரம், செல்போன் போன்ற எந்த வசதியும் இல்லை. ஹெலிகாப்டர் வந்து மீட்கும்வரை எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை’’ என்றார்.

மனிதநேயம் பூத்து மலரும் பூமி இது!

மனிதநேயம் பூத்து மலரும் பூமி இது!

‘இந்திய நாடு என் வீடு, இந்திய மக்கள் என் மக்கள்’ என்று மறைந்த கவிஞர் வாலி பாடியதும், ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணம் உண்டு’ என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பாடலும், நூற்றுக்குநூறு உண்மை என்பதை தமிழ்நாட்டில் பெய்த கனமழை நிரூபித்துவிட்டது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்யுமா?, கைகொடுக்குமா? என்று இருந்த நேரத்தில், நவம்பர் 1-ந் தேதியில் இருந்து வானத்தை திறந்து நயாகரா அருவி கொட்டியதுபோல, மழை பெய்தது. ‘ரெயின்… ரெயின்… கோ அவே…’, அதாவது ‘மழையே… மழையே… போய்விடு…’ என்று சொல்லும் அளவில், கனமழை பெய்து, தமிழ்நாட்டை வெள்ளக்காடாக்கிவிட்டது. 1918-ம் ஆண்டுக்குப்பிறகு இப்போதுதான் இவ்வளவு பெரிய மழை என்று 100 ஆண்டுகளுக்குப்பிறகு வரலாறு காணாத அளவு மழை பெய்திருக்கிறது. இந்த நிலையில், எல்லோருடைய மனிதாபிமான செயலும் மனதை நெகிழவைத்துவிட்டது. பிரதமர் ஓடோடி வந்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுவிட்டு, அரசு எந்திரங்களை முடுக்கிவிட்டார். சென்னை நகரம் முழுவதுமே தண்ணீருக்குள் மூழ்கி தத்தளிக்கிறது. ஆனால், அமைச்சர்கள், மேயர், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆற்றிய பணி அரும்பணியாக உள்ளது. இந்த நிலையில், ராணுவத்தின் முப்படைகளும் களத்தில் இறங்கின. தேசிய பேரிடர் மீட்பு படையின் பணியும் மகத்தானதாக இருக்கிறது. இதையெல்லாம்விட பொதுமக்களும், குறிப்பாக இளைய சமுதாயத்தினரும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு நிவாரண உதவிகளை வழங்குகிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் பல மாநிலங்களில் இருந்து, தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த சோகம், எங்கள் சோகம் என்று பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு நிவாரண உதவிகளை வழங்க முன்வருவது, இந்தியாவில் ஒரு புதிய பாசத்தை உருவாக்கி விட்டது. கேரளாவில் உள்ள தேசிய மாணவர் படையின் பெண்கள் பிரிவினர், வீதிவீதியாக சென்று பெண்களுக்கு தேவையான பொருட்களை திரட்டி அனுப்பத்தயாராக இருப்பது, எங்கிருந்தாலும் பெண்ணுக்கு பெண் உதவுவாள் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. உள்நாட்டு, வெளிநாட்டு மக்களின் உதவிகள் எல்லாம் வருகிறது. நிலைமை சீரடைந்துவிடும். இனி எடுக்கவேண்டியது, இனியும் இப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுப்பது எப்படி? என்பதுதான். 1982-ம் ஆண்டிலும், 2012-ம் ஆண்டிலும் சென்னை எப்படி இருந்தது என்று வலைத்தளங்களில் ஒரு ஒப்பீடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னையில் இந்த 30 ஆண்டுகளிலேயே பல நீர்நிலைகளை காணவில்லை. இதுபோல, தமிழ்நாடு முழுவதும் காணாமல்போன நீர்நிலைகளை உடனடியாக கண்டுபிடித்து சீரமைக்கவேண்டும். 2005-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் அமைக்கப்படவேண்டும். அவைகளை உடனடியாக அமைக்கவேண்டும். அதுபோல, இந்த வெள்ளச்சேதத்தின்போது சீரிய முறையில் பணியாற்றிய தேசிய பேரிடர் மீட்பு படைபோல, மாநில அளவிலும் மீட்பு படைகள் அமைக்கப்படவேண்டும் என்ற ஒரு கொள்கை இருக்கிறது. அதையும் தமிழ்நாட்டில் தீவிரப்படுத்தவேண்டும். இனி இப்படியொரு பெருமழை பெய்தால் அதை சமாளிப்பது எப்படி?, சேதத்தை எப்படி தவிர்ப்பது?, எப்படி நிவாரணம் அளிப்பது? என்று திட்டமிடும் வகையில் உடனடியாக அரசு ஒரு புதிய கொள்கையை வகுத்து, அதை நிறைவேற்ற வகைசெய்யும் செயல்பாடுகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.