‘‘தலைவர் கிட்ட வாட்ஸ்அப் நம்பர் கேட்டேன்…’’
‘‘என்ன சொன்னாரு..?’’
‘‘அவர்கிட்ட எந்த ஜெயில் வார்டன் நம்பரும் இல்லைன்னு சொல்லிட்டாரு..!’’
வீட்டுல மாடு வளர்த்தா குளிப்பாட்டறாங்க; நாய் வளர்த்தா குளிப்பாட்டறாங்க; பூனை வளர்த்தா குளிப்பாட்டறாங்க; மீன் வளர்த்தா குளிப்பாட்டுவாங்களா?
– தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே குளிப்போர் சங்கம்
.
‘‘எதிர்க்கட்சிக்காரர்களின் முகத்திரையைக் கிழிப்பேன்…’’
‘‘வழக்கமா நமக்கு எதிர்கோஷ்டிக்காரன் வேஷ்டியை கிழிச்சுதானே தலைவரே பழக்கம்?’’
‘‘பலத்த போலீஸ் பாதுகாப்பு வேணும்னு தலைவர் கேக்குறாரே… எங்க போகப் போறாராம்?’’
‘‘எம்.எல்.ஏ. பதவி ஏத்த பிறகு இன்னிக்குத்தான் தொகுதி பக்கம் போகப் போறாராம்!’’
‘‘கண் ஆபரேஷன் முடிஞ்சு கண் திறக்கும்போது யார் முகத்தைப் பாக்க ஆசைப்படறீங்க? உங்க அம்மா முகத்தையா… இல்ல, உங்க மனைவி முகத்தையா?’’
‘‘ஏன் டாக்டர்? என் மனைவி வேலைக்காரியை வேலையை விட்டு நிறுத்திட்டாளா என்ன!’’
‘‘தலைவர் ஏன் மேடையிலே பயந்துக்கிட்டே பேசறார்?’’
‘‘யாரோ அவர் மேலே இன்னிக்கு ‘செருப்பு வெடிகுண்டு’ வீசப்போறதா தகவல் கிடைச்சுதாம்..!’’
.
தத்துவம் மச்சி தத்துவம்
பர்பியை சாப்பிடலாம்… குல்ஃபியை சாப்பிடலாம்… செல்ஃபியை சாப்பிட முடியுமா?
– மச்சினியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து மனைவியிடம் மாத்து வாங்குவோர் சங்கம்